முத்தியாரா டாமன்சாரா

ஆள்கூறுகள்: 3°05′N 101°39′E / 3.083°N 101.650°E / 3.083; 101.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தியாரா டாமன்சாரா
புறநகர்
Mutiara Damansara
முத்தியாரா டாமன்சாரா
முத்தியாரா டாமன்சாரா
பெட்டாலிங் மாவட்டத்தில் முத்தியாரா டாமன்சாரா அமைவு; சிலாங்கூர் மாநிலத்தில் பெட்டாலிங் மாவட்டம் அமைவு
பெட்டாலிங் மாவட்டத்தில் முத்தியாரா டாமன்சாரா அமைவு; சிலாங்கூர் மாநிலத்தில் பெட்டாலிங் மாவட்டம் அமைவு
முத்தியாரா டாமன்சாரா is located in மலேசியா
முத்தியாரா டாமன்சாரா
முத்தியாரா டாமன்சாரா
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°05′N 101°39′E / 3.083°N 101.650°E / 3.083; 101.650
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
மாநகராட்சி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • நிர்வாகம்பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
 • மாநகர முதல்வர்முகமட் அசான் அமீர்
Mohamad Azhan Md. Amir
21 அக்டோபர் 2021
 • துணை மாநகர முதல்வர்அசுலிண்டா அசுமான்
Azlinda Azman
24 சனவரி 2020[1]
பரப்பளவு
 • மொத்தம்1.38 km2 (0.53 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
இணையதளம்http://www.mutiara-damansara.com/

முத்தியாரா டாமன்சாரா (மலாய்: Mutiara Damansara; ஆங்கிலம்: Mutiara Damansara; சீனம்: 珍珠白沙羅); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும்.

இந்தப் புறநகர்ப் பகுதி பண்டார் உத்தாமா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், பண்டார் ஸ்ரீ டாமன்சாரா மற்றும் சன்வே டாமன்சாரா ஆகிய புறநகர்ப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த புறநகர்ப் பகுதியில் 484 வீட்டு மனைகளும்; 10 கடை மனைகளும் உள்ளன.[2]

முத்தியாரா டாமன்சாரா RM 1 பில்லியன் கட்டுமான மதிப்பைக் கொண்டுள்ளது.

போக்குவரத்து[தொகு]

முத்தியாரா டாமன்சாரா புறநகர்ப் பகுதியில்  KG08  முத்தியாரா டாமன்சாரா அதிவிரைவு தொடருந்து நிலையம் முக்கிய தொடருந்து நிலையமாகும்.

 KJ25  கிளானா ஜெயா இலகு தொடருந்து நிலையத்துடன்; ரேபிட் கே.எல் (rapidKL) பேருந்து வழித்தடம் 802; முத்தியாரா டாமன்சாராவை இணைக்கிறது.

டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலை (ஆங்கிலம்: Damansara–Puchong Expressway; மலாய்: Lebuhraya Damansara–Puchong) (LDP) E11 , முத்தியாரா டாமன்சாராவிற்கு முக்கிய சாலையாகப் பயன்படுகிறது.

பெஞ்சாலா (Penchala Link) இணைப்பு சாலையின் E23   மூலமாகவும் சிகாம்புட் நகரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு வசதிகள் உள்ளன.

வணிக வளர்ச்சி[தொகு]

தி கர்வ்[தொகு]

முத்தியாரா டாமன்சாராவில் தி கர்வ் (The Curve)

தி கர்வ் (The Curve) எனும் இந்த நவீன வணிகத் தளம் முத்தியாரா டாமன்சாராவில் உள்ளது. தி கர்வ் என்றால் வளைவு என்று பொருள் மலேசியாவின் திறந்த வாழ்க்கை முறைமையின் முதன்மையான நவீன மையமாக இந்தக் கர்வ் (The Curve) கருதப் படுகிறது.

மலேசியாவின் விரைவான வணிக வளர்ச்சி அதன் குடிமக்களை பிரதிபலிக்கிறது என்பதற்கு இந்த நவீன வணிகத் தளம் முன்னுதாரணமாக அமைகிறது.[3]

நவீன மயமான சிறுகடைகள்[தொகு]

வாடிக்கையாளர்களுக்கு நவீனமான நடைத் தடங்களைக் (Pedestrianised Shopping Mall) கொண்டுள்ளது. பிரபலமான 250 உணவு விற்பனை நிலையங்கள்; நவநாகரீக ஆடை, ஆடம்பரப் பொருள்களை விற்கும் சிறிய கடைகள் உள்ளன. இங்கு பல்வேறு பாணியிலான நவீன மயமான சிறுகடைகளும்; வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு மையங்களும் உள்ளன.[4]

ஏறக்குறைய 63,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது; 2,400 கார்களுக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு-நிலை நிலத்தடி வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் உள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]