சுபாங் ஜெயா

ஆள்கூறுகள்: 3°3′52″N 101°35′37″E / 3.06444°N 101.59361°E / 3.06444; 101.59361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாங் ஜெயா
மாநகரம்
Subang Jaya
மேலே இடமிருந்து வலமாக:
SS16 சுபாங் ஜெயா சிட்டி சென்டர் (SJCC), சன்வே பிரமிட், சன்வே லகூன், பண்டார் சன்வே, புத்ரா ஹைட்ஸ், சுபாங் பேரட்
சுபாங் ஜெயா is located in மலேசியா
சுபாங் ஜெயா
சுபாங் ஜெயா
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°3′52″N 101°35′37″E / 3.06444°N 101.59361°E / 3.06444; 101.59361
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
நகராண்மை சுபாங் ஜெயா மாநகராட்சி
அமைவு21 பிப்ரவரி 1976
மாநகர்த் தகுதி20 அக்டோபர் 2020
பரப்பளவு
 • மொத்தம்70.41 km2 (27.19 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்725,070
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு47500, 47600, 47610, 47620, 47630
மலேசியப் பதிவெண்B
இணையதளம்portal.mbsj.gov.my

சுபாங் ஜெயா, (மலாய்: Subang Jaya; ஆங்கிலம்: Subang Jaya; சீனம்: 梳邦再也); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள மாநகரம். மலேசியாவில் மிகப் பெரிய நகரங்களில் சுபாங் ஜெயாவும் ஒரு நகரமாக அறியப் படுகிறது.

சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், பண்டார் சன்வே (Bandar Sunway) நகர்ப் பகுதியைச் சேர்ந்த SS12 முதல் SS19 வரை; PJS7 / PJS9 / PJS11 வரையிலான குடியிருப்புப் பகுதிகளை இந்த மாநகரப் பகுதி கொண்டுள்ளது.

பெட்டாலிங் மாவட்டத்தில் பெட்டாலிங் ஜெயா; சா ஆலாம் ஆகிய மாநகரங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது.[1]

வரலாறு[தொகு]

1970-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர், சுபாங் ஜெயா எனும் இந்த நிலப்பகுதி ஒரு கிராமப் பகுதியாக இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில், இந்தச் சுபாங் ஜெயா, கிள்ளான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் பின்னர் இந்தச் சுபாங் ஜெயா, பெட்டாலிங் மாவட்டத்தின் கீழ் வந்தது.[2]

சுபாங் ஜெயாவின் வீட்டு மேம்பாட்டுத் திட்டம், சைம் யூ.இ.பி. புரபர்டிஸ் நிறுவனத்தினால் (Sime UEP Properties Berhad) 1976 பிப்ரவரி 21-இல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் உலகளாவிய சைம் டார்பி (Sime Darby) நிறுவனத்துக்குச் சொந்தமானது.[3]

சுபாங் ஜெயா மேம்பாட்டுத் திட்டம்[தொகு]

சுபாங் ஜெயா மனை மேம்பாட்டுத் திட்டம், 1988-இல் முடிவடைந்தது. இது ஒரு பெரிய வீட்டு மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் பல்லாயிரம் வீடுகள் கட்டப் பட்டன. முன்பு பெட்டாலிங் ஜெயா நகராட்சிக்கு உட்பட்ட சுபாங் ஜெயா நகர்ப்பகுதி, சீபீல்ட் எனும் ரப்பர் தோட்டமாக (Seafield Estate) இருந்தது.[4]

சுபாங் ஜெயா வீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும், அதே சைம் டார்பி நிறுவனம் புதிதாக யு.எஸ்.ஜே. (USJ) எனும் வீடமைப்புத் திட்டத்தைத் தொடக்கியது.

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம்[தொகு]

சைம் டார்பி நிறுவனத்தின் புதிய யு.எஸ்.ஜே. (USJ) திட்டமும் சுபாங் ஜெயா நகர்ப்புறத்தில் தான் இருந்தது. பின்னர் 1999-ஆம் ஆண்டில், சுபாங் ஜெயாவின் தெற்கு முனையில் புத்ரா அயிட்ஸ் (Putra Heights) எனும் மற்றொரு பெரும் வீடமைப்புத் திட்டமும் உருவானது. சுபாங் ஜெயா குறுகிய காலத்தில் அபாரமாக வளர்ச்சி பெற்றது.[5]

அந்த வகையில் 1997-ஆம் ஆண்டில், சுபாங் ஜெயா மாநகரம்; நகராட்சி எனும் தகுதியைப் பெற்றது. அதன் பின்னர், முன்பு இருந்த பெட்டாலிங் மாவட்ட நகராண்மைக் கழகம் (Petaling District Council) எனும் பழைய பெயர்; சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (Subang Jaya Municipal Council) என மாற்றம் செய்யப்பட்டது.

மக்கள் தொகை அதிகரிப்பு[தொகு]

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் அதிகாரங்கள்; தற்சமயம் சுபாங் ஜெயா நகர மையம், யு.எஸ்.ஜே., புத்ரா அயிட்ஸ், பத்து தீகா, பண்டார் சன்வே, பூச்சோங், பண்டார் கின்ராரா, ஸ்ரீ கெம்பாங்கான், பாலக்கோங் போன்ற நகர்ப் பகுதிகளிலும் பரவலாகி உள்ளது.

2010-ஆம் ஆண்டில், 1,475,337 மக்கள் தொகையைக் கொண்ட கோலாலம்பூர் மாநகரத்தையே விஞ்சும் அளவிற்குச் சுபாங் ஜெயா மாநகரம் 1,553,589 மக்கள் தொகைக் கொண்டு இருந்தது.

மலேசியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் அப்போது விளங்கியது. சுபாங் ஜெயா மாநகரம் சுபாங் விமான நிலையத்திற்கு அருகாமையில் இருந்ததால், அத்தகைய மக்கள் தொகையின் துரித அதிகரிப்பு ஏற்பட்டது.

கல்வி[தொகு]

மலேசியாவிலும் அனைத்துலக அளவிலும் சுபாங் ஜெயா ஓர் உயர்க்கல்வி மையமாக அறியப் படுகிறது. இங்கு பல பெரிய அனைத்துலகத் தனியார் கல்லூரிகளும் மற்றும் பல்கலைக்கழகங்களும் உள்ளன.

உயர் கல்வி நிலையங்கள்[தொகு]

 • அல்பா அனைத்துலக் கல்லூரி - ALFA International College
 • அல் தமிமி அனைத்துக ஏ லெவல் கல்லூரி - At-tamimi International A level School
 • கிலாண்டிரோ சமையல் அகாடமி - Cilantro Culinary Academy
 • அனைத்துலக மருத்துவக் கல்லூரி - International Medical College
 • இந்தி அனைத்துலகப் பல்கலைக்கழகம் - INTI International University
 • மோனாஷ் பல்கலைக்கழகம் - Monash University
 • செகி பல்கலைக்கழகக் கல்லூரி - SEGi University College
 • சன்வே தொழில்நுட்பக் கல்லூரி - Sunway TES
 • சன்வே கல்லூரி - Sunway College
 • சன்வே பல்கலைக்கழகம் - Sunway University
 • டெய்லர் பல்கலைக்கழக கல்லூரி - Taylor's University College
 • டெய்லர் பல்கலைக்கழகம் - Taylor's University
 • தி ஒன் அகாடமி - The One Academy
 • வெஸ்ட்மின்ஸ்டர் அனைத்துலகக் கல்லூரி - Westminster International College
 • அனைத்துலக இம்பீரியா கல்லூரி - International College IMPERiA

சுபாங் ஜெயாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலேசியா; சிலாங்கூர்; பெட்டாலிங் மாவட்டத்தின் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகப் பகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 641 மாணவர்கள் பயில்கிறார்கள். 49 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்..[6]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD8469 சுபாங் ஜெயா SJK(T) Ldg Seafield[7] சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி 47630 சுபாங் ஜெயா 85 12
BBD8470 சுபாங் ஜெயா SJK(T) Tun Sambanthan[8] துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுபாங்) 47630 சுபாங் ஜெயா 556 37

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 5. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 6. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 7. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 8. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Subang Jaya
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாங்_ஜெயா&oldid=3509629" இருந்து மீள்விக்கப்பட்டது