டாமன்சாரா

ஆள்கூறுகள்: 3°3′7″N 101°33′29″E / 3.05194°N 101.55806°E / 3.05194; 101.55806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாமன்சாரா
Damansara
சிலாங்கூர்
டாமன்சாரா நகர்ப்புறம்
டாமன்சாரா நகர்ப்புறம்
டாமன்சாரா is located in மலேசியா
டாமன்சாரா
      டாமன்சாரா
ஆள்கூறுகள்: 3°3′7″N 101°33′29″E / 3.05194°N 101.55806°E / 3.05194; 101.55806
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம்
மலேசிய அஞ்சல் குறியீடு478++
மலேசியத் தொலைபேசி எண்+603-61x, +603-76x
மலேசிய போக்குவரத்துப் பதிவெண்B

டாமன்சாரா, (மலாய்: Damansara; ஆங்கிலம்: Damansara; சீனம்: 白沙罗); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் ஆகும். பெட்டாலிங் மாவட்டத்தில் 36 முக்கிம்கள் உள்ளன.

இருப்பினும் பெட்டாலிங் ஜெயா பெருநகரத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகவும் விளங்குகிறது. அருகில் ஓடும் டாமன்சாரா நதியின் (Sungai Damansara) பெயரால் இந்தப் புறநகர்ப் பகுதி அழைக்கப் படுகிறது.[1]

மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் டாமன்சாரா புறநகர்ப் பகுதியும் ஒன்றாகும்.

டாமன்சாரா துணை மாவட்டம்[தொகு]

முன்பு காலத்தில் டாமன்சாரா என்பது எல்லை வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. காலப் போக்கில் மாறிவிட்டது. 1974-க்கு முன்னர், டாமன்சாரா என்பது ஒரு முக்கிம். கிள்ளான் மாவட்டத்தின் துணை மாவட்டமாக இருந்தது.

சிலாங்கூர் மாநிலத் தலைநகர் சா ஆலாம், சுபாங் ஜெயா, பண்டார் சன்வே, கிளானா ஜெயா, கோத்தா கெமுனிங், புத்ரா அயிட்ஸ் போன்ற பகுதிகள், முன்னர் காலத்தில் டாமன்சாரா துணை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அந்த வகையில் சா ஆலாம், சுபாங் மற்றும் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதிகளுடன் டாமன்சாரா முக்கிம் தோராயமாக இணைந்துள்ளது.

இன்றைய நிலையில், டாமன்சாராவின் எல்லை வரையறை பெரிய அளவில் பரந்து விரிந்து உள்ளது. பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வடக்குப் புறநகர்ப் பகுதி; கெப்போங், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதிகள்; மற்றும் கிழக்கில் சிகாம்புட் புறநகர்ப் பகுதி; தெற்கில் கிளானா ஜெயா புறநகர்ப் பகுதி போன்ற பல புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.[2]

வரலாறு[தொகு]

டாமன்சாரா முதலில் ஒரு சிறிய துறைமுகம் போன்ற குடியேற்றமாகத் தான் இருந்தது. கிள்ளான் ஆற்றின் குறுக்கே டாமன்சாரா ஆற்றின் முகப்புக்கு அருகில் அமைந்து இருந்தது.[3][4]

1870-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், கோம்பாக் ஆறு மற்றும் கிள்ளான் ஆறு சந்திப்பிற்கு அருகில் உள்ள கோலாலம்பூரின் மையப்பகுதி வரை நீராவிப் படகுகள் செல்ல முடியவில்லை. கிள்ளானில் இருந்து டாமன்சாரா வரை தான் செல்ல முடிந்தது.

டாமன்சாரா காட்டுச் சாலை[தொகு]

அதனால், கிள்ளானில் இருந்து கோலாலம்பூர் வரை பயணிக்க பிரித்தானியர்கள் பயன்படுத்திய நீராவிப் படகுகளின் இறுதி இலக்காக டாமன்சாரா அமைந்து இருந்தது. அதாவது கிள்ளானில் இருந்து டாமன்சாரா வரை தான் நீராவிப் படகுகள் செல்ல முடிந்தது. அதற்குப் பிறகு பயணிகள், கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் வரை டாமன்சாரா காட்டுச் சாலை வழியாகப் போய் இருக்கிறார்கள்.

அப்போது இரயில் பாதைகளும் இல்லை. நான்கு சக்கர வாகனங்களும் இல்லை. மாட்டு வண்டிகள்; குதிரை வண்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சில சமயங்களில் கேவேறு கழுதை வண்டிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நகரங்கள்[தொகு]

டாமன்சாரா பகுதி பல நகரங்களுக்கு உறைவிடமாக உள்ளது. பெரும்பாலான உட்பிரிவுகள் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. பின்வரும் நகரங்களை உள்ளடக்கியது:

  • டாமன்சாரா இம்பியான் (Damansara Impian) (SS 20)
  • டாமன்சாரா கிம் (Damansara Kim) (SS 20)
  • டாமன்சாரா உத்தாமா (Damansara Utama) (SS 21)
  • டாமன்சாரா ஜெயா (Damansara Jaya) (SS 22)
  • ஆரா டாமன்சாரா (Ara Damansara) (Pilmoor Estate) (PJU 1A)
  • அமான் சூரியா டாமன்சாரா (Aman Suria Damansara) (PJU 1A)
  • டாமன்சாரா இடாமான் (Damansara Idaman) (PJU 1A)
  • டாமன்சாரா லெஜண்டா (Damansara Lagenda) (PJU 1A)
  • பெலாங்கி டாமன்சாரா (Pelangi Damansara) (PJU 3)
  • துரோப்பிக்கானா கோல்ப் (Tropicana Country Resort) (PJU 3)
  • துரோப்பிக்கானா இண்டா (Tropicana Indah) (PJU 3)
  • சன்வே டாமன்சாரா (Sunway Damansara) (PJU 5)
  • கோத்தா டாமன்சாரா (Kota Damansara) (PJU 5)
  • டாமன்சாரா மாஸ் (Damansara Emas) (PJU 5)
  • பண்டார் உத்தாமா டாமன்சாரா (Bandar Utama Damansara) (PJU 6)
  • முத்தியாரா டாமன்சாரா (Mutiara Damansara) (PJU 7)
  • டாமன்சாரா பெர்டானா (Damansara Perdana) (PJU 8)
  • புக்கிட் லஞ்சான் (Bukit Lanjan) (PJU 8)
  • புளோரா டாமன்சாரா (Flora Damansara) (PJU 8)
  • பாரஸ்ட் ஹில் டாமன்சாரா (ForestHill Damansara) (PJU 8)
  • பண்டார் ஸ்ரீ டாமன்சாரா (Bandar Sri Damansara) (PJU 9)
  • டாமன்சாரா டாமாய் (Damansara Damai) (PJU 10)
  • சுத்திரா டாமன்சாரா (Sutera Damansara) (PJU 10)
  • சவுசானா டாமன்சாரா (Saujana Damansara) (PJU 10)
  • காசா மெவ்லானா (Casa Hezri De Mevlana)

வணிக வாய்ப்புகள்[தொகு]

பெட்டாலிங் ஜெயாவின் "தங்க முக்கோணம்" என்று டாமன்சாரா அழைக்கப் படுகிறது. வணிக ரீதியில் சிறப்பாகச் செயல்படும் இடத்தில் அமைந்துள்ளது. தெஸ்கோ (Tesco), ஐ.பி.சி. வணிக மையம் (IPC Shopping Centre), ஒன் உத்தாமா (One Utama), தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய அய்கியா (IKEA) வணிக மையம் போன்றவை இங்கு உள்ளன.

டாமன்சாரா வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

சிலாங்கூர்; பெட்டாலிங் மாவட்டம்; டாமன்சாரா புறநகர்ப் பகுதியில் 9 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2274 மாணவர்கள் பயில்கிறார்கள். 191 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

டாமன்சாரா வட்டாரத்தின் பகுதிகள்:

சா ஆலாம் புறநகர்ப் பகுதி;
சுபாங் புறநகர்ப் பகுதி;
கோத்தா ராஜா புறநகர்ப் பகுதி;
பெட்டாலிங் ஜெயா வடக்குப் புறநகர்ப் பகுதி;
கெப்போங் புறநகர்ப் பகுதி;
சுங்கை பூலோ புறநகர்ப் பகுதி;
சிகாம்புட் புறநகர்ப் பகுதி;
கிளானா ஜெயா புறநகர்ப் பகுதி.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD8452 பண்டார் உத்தாமா SJK(T) Ldg Effingham[5] எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி 47800 பெட்டாலிங் ஜெயா 305 28
BBD8459 சா ஆலாம் SJK(T) Hicom[6] ஐகோம் தமிழ்ப்பள்ளி 40000 சா ஆலாம் 140 15
BBD8461 பத்து தீகா SJK(T) Ladang Ebor[7][8] ஈபோர் தோட்டத் தமிழ்பள்ளி 40000 சா ஆலாம் 109 10
BBD8462 கிளன்மேரி SJK(T) Ldg Glenmarie[9] கிளன்மேரி தமிழ்ப்பள்ளி 40000 சா ஆலாம் 95 14
BBD8463 சா ஆலாம் SJK(T) Ladang Midlands[10][11] மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 40000 சா ஆலாம் 146 17
BBD8466 சுபாங் SJK(T) Ldg Rasak Shah Alam[12] இராசாக் தோட்டத் தமிழ்பள்ளி 40160 சா ஆலாம் 103 12
BBD8468 சா ஆலாம் SJK(T) Sg Renggam[13] சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி 48000 சா ஆலாம் 735 56
BBD8469 சுபாங் ஜெயா SJK(T) Ldg Seafield[14] சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி 47630 சுபாங் ஜெயா 85 12
BBD8470 சுபாங் ஜெயா SJK(T) Tun Sambanthan[15] துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுபாங்) 47630 சுபாங் ஜெயா 556 37

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portal Rasmi PDT Petaling Sejarah Daerah Petaling". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.
  2. "Majlis Bandaraya Petaling Jaya (MBPJ)". Portal Rasmi Majlis Bandaraya Petaling Jaya (MBPJ). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  3. Isa, Mariana; Kaur, Maganjeet (15 September 2015). Kuala Lumpur Street Names: A Guide To Their Histories and Meanings. Singapore: Marshall Cavendish International Asia Pte Ltd. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789814721448. https://books.google.com/books?id=9WWLDgAAQBAJ&pg=PT182. 
  4. Gullick, J.M. (June 1990). "The Growth of Kuala Lumpur and the Malay Communities in Selangor Before 1880". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society LXIII (1): 23–24. http://myrepositori.pnm.gov.my/bitstream/123456789/4317/1/JB1869_GOKL.pdf. 
  5. "எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  6. "ஐகோம் தமிழ்ப்பள்ளி - SJKT Hicom". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  7. "ஈபோர் தோட்டத் தமிழ்பள்ளி". Twitter. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  8. "Rodziah rai pelajar Tamil Ladang Ebor" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  9. "கிளன்மேரி தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  10. "மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதி - Asrama perintis SJKT" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  11. "மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Tamil berasrama yang pertama dibuka secara rasmi oleh Menteri". tamizharMedia (in ஆங்கிலம்). 5 December 2019. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  12. "இராசாக் தோட்டத் தமிழ்பள்ளி - SRJKT Bukit Subang (SJKT Ladang Rasak) di bandar Shah Alam". my.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  13. "சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி - Sjkt Sungai Renggam, Shah Alam". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  14. "சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL Seafield USJ". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  15. "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுபாங்) - Sjk T Tun Sambanthan Usj 15 Subang Jaya". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
டாமன்சாரா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டாமன்சாரா&oldid=3642648" இலிருந்து மீள்விக்கப்பட்டது