உலு சிலாங்கூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலு சிலாங்கூர் மாவட்டம்
Flag of Selangor.svg மாவட்டம்
Daerah Hulu Selangor
Location of உலு சிலாங்கூர் மாவட்டம்
உலு சிலாங்கூர் மாவட்டம் is located in மலேசியா மேற்கு
உலு சிலாங்கூர் மாவட்டம்
உலு சிலாங்கூர் மாவட்டம்
உலு சிலாங்கூர் மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°35′N 101°35′E / 3.583°N 101.583°E / 3.583; 101.583ஆள்கூறுகள்: 3°35′N 101°35′E / 3.583°N 101.583°E / 3.583; 101.583
தொகுதிகோலா குபு பாரு
உள்ளூராட்சிஉலு சிலாங்கூர் நகராட்சி மன்றம்
அரசு
 • நகராட்சி மன்றத் தலைவர்முகமட் அனாபி பாசிரி[1]
 • மாவட்ட அதிகாரிமுசா ரான்லி
பரப்பளவு
 • மொத்தம்1,756.30 km2 (678.11 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,94,387
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
அஞ்சல் குறியீடுகள்44xxx, 482xx
தொலைபேசி குறியீடு+6-03
போக்குவரத்துப் பதிவெண்கள்B

உலு சிலாங்கூர் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Hulu Selangor; ஆங்கிலம்: Hulu Selangor District; சீனம்: 乌鲁雪兰莪县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் பகாங் மாநிலம்; வட மேற்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; தென் மேற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; & கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

உலு சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: செரண்டா; பத்தாங் காலி; கோலா குபு பாரு. இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா குபு பாரு ஆகும்.[2]

சிலாங்கூர் நதி இந்த மாவட்டத்தில் தான் உற்பத்தியாகிறது. எனவே இந்த மாவட்டத்திற்கும் அந்த நதியின் பெயரே வைக்கப்பட்டு உள்ளது.[3]

நிர்வாகப் பகுதிகள்[தொகு]

உலு சிலாங்கூர் மாவட்டம், உலு சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]

 1. பத்தாங் காலி (Batang Kali)
 2. பூலோ தெலுர் (Buloh Telor)
 3. அம்பாங் பெச்சா (Ampang Pechah)
 4. உலு பெர்ணம் (Ulu Bernam)
 5. களும்பாங் (Kalumpang)
 6. கெர்லிங் (Kerling)
 7. கோலா குபு பாரு (Kuala Kubu Bharu)
 8. பெரெதாக் (Peretak)
 9. ராசா (உலு சிலாங்கூர்) (Rasa)
 10. செரண்டா (Serendah)
 11. சுங்கை குமுட் (Sungai Gumut)
 12. சுங்கை திங்கி (Sungai Tinggi)
 13. புக்கிட் பெருந்தோங் (Bukit Beruntung)
 14. புக்கிட் செந்தோசா (Bukit Sentosa)
 15. சுங்கை புவாயா (Sungai Buaya)
 16. லெம்பா பெரிங்கின் (Lembah Beringin)
 17. உலு யாம் (Ulu Yam)
 18. உலு யாம் பாரு (Ulu Yam Baharu)

மக்கள் தொகையியல்[தொகு]

மலேசியப் புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கிய புள்ளிவிவரங்கள்:[4]

உலு சிலாங்கூரில் உள்ள இனக்குழுக்கள் (2010)
இனம் மக்கள்
தொகை
விழுக்காடு
மலாய்க்காரர்கள் 133,080 70.1%
சீனர்கள் 23,498 12.4%
இந்தியர்கள் 32,459 17.1%
இதர இனத்தவர் 9,698 0.4%
மொத்தம் 189,836 100%

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) உலு சிலாங்கூர் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[5]

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
P94 உலு சிலாங்கூர் ஜுன் லியோவ் இசியாட் ஹுய் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P95 தஞ்சோங் காராங் நோ ஒமார் பாரிசான் நேசனல் (அம்னோ)

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[6]

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P94 N5 உலு பெர்ணம் ரோஸ்னி பிந்தி சோகார் பாரிசான் நேசனல் (அம்னோ)
P94 N6 கோலா குபு பாரு லீ கீ ஹியோங் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P94 N7 பத்தாங் காலி அருமாயினி ஒமார் பெஜுவாங்
P95 N8 பெர்மாத்தாங் ரோசானா சைனல் அபிடின் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Portal Rasmi PDT Hulu Selangor Perutusan Pegawai Daerah Hulu Selangor". www.selangor.gov.my. 6 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. 6 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Discover Hulu Selangor - Tourism Selangor - Hulu Selangor (formerly called Ulu Selangor) is located in the north of the Klang Valley". 6 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. ""Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014". 6 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 5. "KUALA LANGAT - SURUHANJAYA PILIHAN RAYA MALAYSIA (SPR) - SEMAKAN CALON PILIHAN RAYA UMUM KE 14". keputusan.spr.gov.my. 13 செப்டம்பர் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 6. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018". 2018-05-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]