ஈலிர் பேராக் மாவட்டம்
ஈலிர் பேராக் மாவட்டம் | |
---|---|
Daerah Hilir Perak | |
![]() | |
![]() ஈலிர் பேராக் மாவட்டம் அமைவிடம் பேராக் | |
ஆள்கூறுகள்: 4°N 101°E / 4°N 101°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தொகுதி | தெலுக் இந்தான் |
நகராட்சி | தெலுக் இந்தான் மாவட்ட மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 792.07 km2 (305.82 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 1,28,179 |
• Estimate (2015) | 1,90,700 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 34200-34400 |
மலேசிய தொலைபேசி எண் | +6-05 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | A |
ஹீலிர் பேராக் அல்லது ஈலிர் பேராக் (மலாய்: Daerah Hilir Perak); (ஆங்கில மொழி: Hilir Perak District) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். ஆங்கிலத்தில் கீழ் பேராக் என்று பொருள். தெலுக் இந்தான் நகரில் அமைந்துள்ள தெலுக் இந்தான் நகராட்சி மன்றத்தால் இந்த மாவட்டம் நிர்வகிக்கப் படுகிறது.[1]
2004 ஏப்ரல் 4-ஆம் தேதி வரையில் இந்த மாவட்ட சபை, ஈலிர் பேராக் மாவட்ட கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் நகராட்சி நிலைக்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தின் முக்கிய நகர மையமாக தெலுக் இந்தான் நகரம் விளங்குகிறது. சிறிய நகரம் லங்காப். தெலுக் இந்தான் நகரம் பேராக் ஆற்றின் தென்கிழக்குக் கரையில், கம்போங் சுங்கை டுரியான் எனும் கிராமத்திற்கு எதிரே உள்ளது.[2]
பொது[தொகு]
லங்காப் நகரம் ஒரு குடிவரவு நிலையத்தைக் கொண்டுள்ளது. அதே வேளையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றையும் கொண்டு உள்ளது.
ஈலீர் பேராக் ஒரு தட்டையான சமவெளியைக் கொண்ட மாவட்டம். அத்துடன் இந்த மாவட்டத்தில் முழுவதுமாகப் பேராக் ஆறு பாய்ந்து செல்கிறது. அதனால் வேளாண்மை நடவடிக்கைகளுக்கு ஏற்ற வளமான பகுதியாக விளங்குகிறது.
வரலாறு[தொகு]
2016 சனவரி மாதம் பாகன் டத்தோ எனும் கிராம நகர்ப்புறப் பகுதி மட்டும் பேராக் மாநிலத்தின் தன்னாட்சித் துணை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2016 சூன் 15-ஆம் தேதி, ஈலிர் பேராக் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
ஊத்தான் மெலிந்தாங் பகுதி பாகன் டத்தோ பகுதியுடன் இணைக்கப்பட்டு ஒரு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்புகளைத் தெலுக் இந்தான் மாவட்ட நகராட்சி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

ஈலிர் பேராக் மாவட்டம் 5 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவையாவன:
- சுங்கை டுரியான் (Sungai Durian)
- டுரியான் செபாத்தாங் (Durian Sebatang)
- சங்காட் ஜோங் (Changkat Jong)
- சுங்கை மானிக் (Sungai Manik)
- லாபு குபோங் (Labu Kubong)
மலேசிய நாடாளுமன்றம்[தொகு]
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) ஈலிர் பேராக் தொகுதிகளின் பட்டியல்.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P72 | பாசீர் சாலாக் | தாசுடின் அப்துல் ரகுமான் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P77 | தெலுக் இந்தான் | நிகா கோர் மிங் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
பேராக் மாநிலச் சட்டமன்றம்[தொகு]
பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் ஈலிர் பேராக் மாவட்டப் பிரதிநிதிகள்:
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P72 | N49 | சுங்கை மானிக் | அஸ்னுல் சுல்கர்னைன் அப்துல் முனையிம் | சுயேட்சை |
P73 | N50 | கம்போங் காஜா | வான் நோராசிக்கின் பிந்தி வான் நோர்டின் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P76 | N55 | பாசீர் பெடாமார் | டெரன்ஸ் நாயுடு | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
P76 | N56 | சங்காட் ஜோங் | முகமட் அசார் சமாலுடின் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
பல்கலைக்கழக மருத்துவ வளாகங்கள்[தொகு]
ஈலிர் பேராக் மாவட்டத்தில் இரு அரசாங்கப் பொதுப் பல்கலைக்கழகங்களின் கிளை வளாகங்கள் உள்ளன. அக்டோபர் 2010-இல் கட்டி முடிக்கப்பட்ட யு.ஐ.டி.எம். தெலுக் இந்தான் மருத்துவ வளாகம் (UiTM Teluk Intan Campus of Faculty of Medicine)[3]
மற்றும் ஒரு மருத்துவ வளாகம்; மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெலுக் இந்தான் மருத்துவ வளாகம் (UKM Teluk Intan Campus of Faculty of Medicine). இரண்டுமே தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அருகில் அமைந்து உள்ளன.
பொருளாதார நடவடிக்கைகள்[தொகு]
விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் என்பது ஹிலீர் பேராக் மாவட்டத்தின் இரண்டு முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள். ஹிலீர் பேராக்கின் விவசாய நிலத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கில் எண்ணெய்ப் பனை பயிராகிறது, மூன்றில் ஒரு பங்கு காய்கறிகள், நெல், தேங்காய் போன்றவை பயிராகின்றன.
ஈலீர் பேராக்கின் மிகப்பெரிய மீன்பிடி நகரம் ஊத்தான் மெலிந்தாங் ஆகும். இங்கு சுமார் 400 மீன்பிடிக் கப்பல்கள் பல்வேறு அளவுகளில் உள்ளன. ஊத்தான் மெலிந்தாங் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை நாடு முழுவதும் விற்று வருகிறார்கள்.
மீன்பிடித் தொழில்[தொகு]
ஈலீர் பேராக்கின் துடிப்பான விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் பல வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஈர்க்கின்றன. இந்தோனேசியர்கள் பெரும்பாலும் விவசாயத் துறையில் ஈடுபட்டு உள்ளனர். தாய்லாந்துக்காரர்கள் மீன்பிடித் தொழிலில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
தெலுக் இந்தான் மற்றும் லங்காப் நகர்ப் பகுதிகளில் தொழில்துறை வளாகங்கள் உள்ளன. இவற்றின் மூலமாக உள்ளூர் மக்களுக்கும் பல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
மேற்கோள்கள்[தொகு]