புக்கிட் மேரா (கிந்தா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் மேரா (கிந்தா)
புக்கிட் மேரா நகரம்
புக்கிட் மேரா நகரம்
புக்கிட் மேரா (கிந்தா) is located in மலேசியா
புக்கிட் மேரா (கிந்தா)
புக்கிட் மேரா (கிந்தா)
ஆள்கூறுகள்: 5°54′N 101°04′E / 5.900°N 101.067°E / 5.900; 101.067
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்கி.பி. 1900
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்11,000
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.pdtbatugajah.perak.gov.my.

'புக்கிட் மேரா' (மலாய்: Bukit Merah; சீனம்:武吉美拉) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமப்புற நகரம் ஆகும். புக்கிட் மேரா (கிந்தா) நகரத்திற்கு அருகில் இருக்கும் நகரங்கள்: ஈப்போ; மெங்லெம்பு; லகாட்; பத்து காஜா.

புக்கிட் மேரா எனும் பெயரில் பேராக் மாவட்டத்தில் மட்டும் இரண்டு இடங்கள் உள்ளன. முதலாவது கிந்தா மாவட்டத்தின் புக்கிட் மேரா (Bukit Merah Kinta). இதைக் கிந்தா புக்கிட் மேரா என்று அழைக்கிறார்கள். மற்றொன்று கிரியான் மாவட்டத்தின் புக்கிட் மேரா (Bukit Merah Kerian). இதைக் கிரியான் புக்கிட் மேரா அல்லது தைப்பிங் புக்கிட் மேரா என்றும் அழைக்கிறார்கள்.

1982-ஆம் ஆண்டு இங்கு கதிரியக்க மாசுபாடு ஏற்பட்டு தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 1994-ஆம் ஆண்டில் மாசுபாடு ஏற்படுத்திய தொழிற்சாலை மூடப்பட்டது. இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை பொறுப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை. அந்த வழக்கு முடிவுற 12 ஆண்டுகள் பிடித்தன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_மேரா_(கிந்தா)&oldid=3146007" இலிருந்து மீள்விக்கப்பட்டது