பாகன் டத்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகன் டத்தோ
Bagan Datoh
நாடுFlag of Malaysia.svg மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்டத்தோ ஸ்ரீ அகமட் ஷாகிட் ஹமிடி
 • சட்டமன்ற உறுப்பினர் (ருங்குப்)டத்தோ சாருல் சாமான் யஹயா
 • சட்டமன்ற உறுப்பினர் (ஊத்தான் மெலிந்தாங்)கேசவன் சுப்பிரமணியம்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்13,189 (மக்கள் கணக்கெடுப்பு 2,010)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே)
இணையதளம்பாகான் டத்தோ இணையப் பக்கம்

பாகன் டத்தோ (Bagan Datoh அல்லது Bagan Datuk) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரமாகும். தெலுக் இந்தான் நகரில் இருந்து 45 கி.மீ. மேற்காக உள்ளது. பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் இருந்து 132 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

இந்த நகரின் முக்கியமான தொழில் மீன்பிடித்தல் ஆகும். தவிர, இதன் சுற்று வட்டாரங்களில் பல தென்னைத் தோட்டங்கள் உள்ளன. பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் வழியில் அந்தத் தோட்டங்களைக் காண முடியும். அதனால் இந்த பாகன் டத்தோ பகுதியை தென்னையின் சொர்க்கவாசல் என்றும் அழைப்பது உண்டு.[2]

பாகன் டத்தோ நகரின் சுற்றுப் பகுதியில் சில மீன்பிடி கிராமங்கள் பரவி இருக்கின்றன. சுங்கை தியாங், சுங்கை பூரோங், பாகன் சுங்கை தியாங், பாகான் சுங்கை பூரோங் போன்ற மீன்பிடி கிராமங்களைச் சொல்லலாம். இந்தக் கிராமங்கள் கடற்கரை அருகில் அமைந்துள்ள கிராமங்கள்.

பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் சாலையில் ஊத்தான் மெலிந்தாங், செலெக்கோ, சிம்பாங் தீகா போன்ற சிறுநகரங்களும் உள்ளன. சுங்கை டூலாங் எனும் இடத்தில் அதிகமாக பெரு இரால்கள் பிடிக்கப்படுகின்றன.

மக்கள் பிரதிநிதிகள்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

பேராக் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

தமிழ்ப் பள்ளிகள்[தொகு]

இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

  • பாகன் டத்தோ தமிழ்ப்பள்ளி - SRJK (T) Bagan Datoh
  • கோலா பெர்ணாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SRJK (T) Ladang Kuala Bernam

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகன்_டத்தோ&oldid=3343667" இருந்து மீள்விக்கப்பட்டது