மம்பாங் டி அவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Mambang Di Awan

மம்பாங் டி அவான்
Mambang Di Awan
கம்பார் அருகே மம்பாங் டி அவான் பகுதியில் ஈயச் சுரங்கம். 1910-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்
கம்பார் அருகே மம்பாங் டி அவான்
பகுதியில் ஈயச் சுரங்கம்.
1910-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்
மம்பாங் டி அவான் is located in மலேசியா மேற்கு
மம்பாங் டி அவான்
மம்பாங் டி அவான்
ஆள்கூறுகள்: 4°16′N 101°9′E / 4.267°N 101.150°E / 4.267; 101.150
நாடு மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
உருவாக்கம்கி.பி.1850
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdkampar.gov.my/ms/mdkpr/profil/latar-belakang

மம்பாங் டி அவான் என்பது (மலாய்:Mambang Di Awan; ஆங்கிலம்:Mambang Di Awan; சீனம்:萬邦刁灣) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமப்புற நகரம் ஆகும். மம்பாங் டி அவான் எனும் மலாய்ச் சொற்களின் பொருள் "மேகங்களில் தேவதை".[1]

கம்பார் நகரில் இருந்து 30 கி.மீ; ஈப்போ மாநகரில் இருந்து 45 கி.மீ; தொலைவில் அமைந்து உள்ளது. தெம்புரோங் குகையும், மம்பாங் டி அவான் நகரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் தான் உள்ளது.

இந்த நகரத்தில்தான் மலேசியாவில் புகழ்பெற்ற சாப் தாங்ஙான் ("Cap Tangan" - கட்டைவிரல் அடையாளத்தைக் கொன்ட வர்த்தக முத்திரை) நிலக்கடலையின் தொழிற்சாலை அமைந்து உள்ளது. தவிர பல தொழில்துறை இடங்களும் இங்கு உள்ளன.[2]

வரலாறு[தொகு]

ஜார்ஜ் மேக்ஸ்வெல் எனும் பிரிட்டிஷ் அதிகாரியின் கூற்றுப்படி மம்பாங் டி அவான் நகருக்கு ஒரு புராணக்கதை உள்ளது. ஒரு நாள் முழுவதும் கடுமையாக உழைத்த ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள், ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, அவர்களின் முன் ஒரு தேவதை தோன்றி இருக்கிறார். அந்தத் தேவதையைப் பார்த்த பின்னர், பாத்தாங் தோங்காங் (Batang Tonggang) என்ற அந்த இடத்திற்கு மம்பாங் டி அவான் என பெயர் வைத்து இருக்கிறார்கள்.[3]

சீனாவில் இருந்து குடியேறிய சீனர்கள்[தொகு]

1850-ஆம் ஆண்டுகளில் இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய ஈயச் சுரங்கங்கள் இருந்தன. சீனாவில் இருந்து இங்கு குடியேறிய சீனர்கள் பல ஈயச் சுரங்கங்களைத் திறந்தனர். அவற்றில் ஆயிரக் கணக்கான சீனர்கள் வேலை செய்தனர். குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்களும் வேலை செய்து இருக்கிறார்கள். இருப்பினும் இந்த நகரைச் 'சீனர்களின் நகரம்' என்று சொல்வது உண்டு.

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். இந்தப் பள்ளத்தாக்கில் தான் மம்பாங் டி அவான் கிராமப்புற நகரம் அமைந்து உள்ளது. இப்போது அந்த ஈயச் சுரங்கங்கள் ஆழமான நன்னீர் ஏரிகளாக மாறி விட்டன. மீன் வளர்ப்பு; தாமரை பூக்கள் வளர்த்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

யூடியூப் காணொலி[தொகு]

Mambang Di Awan, Kampar, Perak

"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்பாங்_டி_அவான்&oldid=3168840" இருந்து மீள்விக்கப்பட்டது