உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயர் தாவார்

ஆள்கூறுகள்: 4°13′N 100°44′E / 4.217°N 100.733°E / 4.217; 100.733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயர் தாவார்
Ayer Tawar
பேராக்
ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
Map
ஆயர் தாவார் is located in மலேசியா
ஆயர் தாவார்
      ஆயர் தாவார்
ஆள்கூறுகள்: 4°13′N 100°44′E / 4.217°N 100.733°E / 4.217; 100.733
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
தோற்றம்1830
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்32,000 (மக்கள் கணக்கெடுப்பு 2,010)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
32400
தொலைபேசி எண்+6-05
இணையதளம்[1]

ஆயர் தாவார் (மலாய்: Ayer Tawar, சீனம்: 爱大华), மலேசியாவின் பேராக் மாநிலத்தில், துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு கிராமப்புற நகரம் ஆகும். இது மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈப்போ லூமுட் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது.

இக் குறுநகரம் சித்தியவான் பெருநகரத்தில் இருந்து 12 கி.மீ. அருகாமையில் இருப்பதால், அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக மேம்பாடு கண்டு வருகிறது.

பொது[தொகு]

இந்த நகரில் அதிகமாக சீனர்கள் வாழ்கின்றார்கள். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது ஆயர் தாவார், ஒரு புதுக் கிராமமாகத் தோற்றுவிக்கப் பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும், ஆயர் தாவார் நகரின் சுற்று வட்டாரங்களில், மலாயா கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அவர்களை ஒடுக்குவதற்காக நாடு முழுமையும் அவசரகாலம் பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் புதுக் கிராமங்களும் தோற்றுவிக்கப் பட்டன. அந்த வகையில் ஆயர் தாவாரிலும் ஒரு புதுக் கிராமம் தோற்றுவிக்கப் பட்டது.

வரலாறு[தொகு]

1980-களில் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த ஆயர் தாவாரில், இப்போது சிறுதிறன் தொழில் பேட்டைகள் நிறைந்து காணப் படுகின்றன.[2] சுற்றுலாத் துறையும் வளர்ச்சி பெற்று வருகிறது.

முன்பு இப்பகுதியில் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் இருந்தன. அதிகமான தமிழர்களும் வாழ்ந்தனர். காலப் போக்கில் நில மேம்பாட்டுத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், தொழில்துறை திட்டங்கள் காரணமாக அந்தத் தோட்டங்கள் மூடப்பட்டு விட்டன.

அதனால், தோட்டப் புறங்களில் வாழ்ந்த தமிழர்கள் பலர் ஈப்போ, கம்பார் நகரம், தெலுக் இந்தான், லூமுட், சித்தியவான், பீடோர் போன்ற நகரங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். எஞ்சி இருக்கும் தமிழர்கள் சிறு தொழில்கள், சிறு வியாபாரங்கள், சின்ன உணவகங்கள், சிறிய மளிகைக் கடைகள், சிறிய துணிமணிக் கடைகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயர்_தாவார்&oldid=3995585" இலிருந்து மீள்விக்கப்பட்டது