தெலுக் பாத்திக்
தெலுக் பாத்திக் (ஆங்கிலம்: Teluk Batik; மலாய்: Teluk Batik; சீனம்: 直落蜡染) என்பது மலேசியா, பேராக் மாநிலம், மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம் ஆகும். பங்கோர் தீவை எதிர்நோக்கி அமைந்து இருக்கும் இந்தக் கடற்கரை நகரத்திற்கு அருகில் லூமுட், சித்தியவான் ஆகிய நகரங்கள் உள்ளன.
லூமுட் நகரத்தில் இருந்து 9.6 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரம், பேராக் மாநிலத்த்ல் மிகவும் புகழ்பெற்ற கடற்கரை நகரமாக அறியப்படுகிறது. இந்த நகரத்தின் கடற்கரை ஓர் அழகான விரிகுடாவில் அமைந்துள்ளது. விரிகுடாவின் ஒவ்வொரு முனையிலும் உயரமான நிலப்பரப்புகளுடன், காடுகளால் சூழப்பட்டு உள்ளது. தென்னை மரங்கள் மற்றும் இதர வகை ஊசியிலை மரங்களால் சூழப்பட்டு நிழலையும் வெப்பமண்டலச் சூழலையும் வழங்குகிறது.[1]
சுத்தமான கடற்கரை
[தொகு]1960-ஆம் ஆண்டுகளில்தான் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரையில் இது ஒரு காடுகள் நிறைந்த இடமாக இருந்தது. கடல் நீர் சுத்தமாகவும், கடற்கரை மணல் மிக மென்மையாகவும் உள்ளது. தெலுக் பாத்திக் கடற்கரையின் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் குரங்கு வகையைச் சேர்ந்த குட்டி குரங்குகளும் அதிகமாக உள்ளன.[2]
இங்குள்ள பல சிறுகடைகளில் நினைவுப் பொருட்கள், நீச்சல் தொடர்பான பொருட்கள், தொப்பிகள் மற்றும் கொசுவச் சட்டைகள், கடற்கரை விரிப்புகள், ரப்பர் பந்துகள் போன்றவை விற்கப்படுகின்றன. அத்துடன் இங்குள்ள கடைகளில் சிற்றுண்டிகள், பானங்கள், பனிக்கூழ் போன்றவையும் விற்கப்படுகின்றன. கழிப்பறைகள், குளியலறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் வழங்கப்பட்டுள்ளன.[3]
கடற்கரையில் அதன் சொந்த கண்காணிப்பு கோபுரமும் (Baywatch Tower) உள்ளது. அங்கு உயிர் பாதுகாப்பு காவலர்கள் பயணிகளின் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The beach is situated in a pleasant bay with headlands rising at each end, topped with jungle. The beach itself is fringed with coconut palms and other trees providing a good amount of shade and a tropical atmosphere". Pangkor Island. பார்க்கப்பட்ட நாள் 19 January 2024.
- ↑ "The surrounding hill areas of Teluk Batik are inhabited by tribes of little monkeys". 15 March 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2024.
- ↑ "Teluk Batik Beach, Lumut, Perak". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 19 January 2024.