பேராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேராங்
Behrang
美冷
பேராங் இரயில் நிலையம்
பேராங் இரயில் நிலையம்
நாடு மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
உருவாக்கம்1800
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.pdtmuallim.perak.gov.my.

பேராங் (Behrang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 87 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 118 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள நகரம். பேராங் நகரத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் தஞ்சோங் மாலிம் நகரம் உள்ளது. அதற்கும் அடுத்து 13 கி.மீ. தொலைவில் சிலிம் ரீவர் நகரம் உள்ளது.

பேராங் நகரத்திற்கு மிக அருகில் உள்ள இடங்கள் பேராங் உலு (Behrang Ulu); பேராங் ஸ்டேசன் (Behrang Stesen); கம்போங் கெலாவார் (Kampung Kelawar). பேராங் உலு பகுதியில் புகழ்பெற்ற நீர் அருவி உள்ளது. அதன் பெயர் சுங்கை பில் நீர் அருவி (Sungai Bil Waterfall). உள்ளூர் மக்களுக்கு மட்டும் அல்ல. நாடளவில் அனைவருக்கும் தெரிந்த இடமாகும்.[1]

சுங்கை பில் நீர் அருவி பச்சைக் காட்டுக்குள் சற்று தொலைதூரத்தில் உள்ளது. நடந்தே செல்லலாம். ஒற்றையடிப் பாதைகளைப் போட்டு வைத்து இருக்கிறார்கள். குளிர்ந்த நதி. குளிர்ந்த நீர். கண்ணுக்கு இனிய இயற்கைக் காட்சிகள். பச்சைப் பசேல் வண்ணங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டே ஓய்வு எடுப்பதற்கு நல்ல இடம்.[2]

பேராங் ரீவர் தமிழ்ப்பள்ளி[தொகு]

பேராங்கில் ஒரு தமிழ்ப்பள்ளி இருந்தது. பேராங் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி. ஒரு காலக் கட்டத்தில் 12 மாணவர்களோடு அதன் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டிருந்தது. இப்போது பண்டார் பேராங்கிற்கு இடம் பெயர்ந்து புது உருமாற்றத்துடன் புதுப் பொலிவுடன் மிளிர்கின்றது.[3]

பேராங் ரீவர் தமிழ்ப்பள்ளி மாநில ரீதியிலும்; தேசிய நிலையிலும்; அனைத்துல நிலையிலும் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியிலேயே ஒரு பாலர் பள்ளி அமைக்கும் அனுமதியைக் கல்வி அமைச்சு வழங்கியது.[4]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 3°47′N 101°30′E / 3.783°N 101.500°E / 3.783; 101.500

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராங்&oldid=3140777" இருந்து மீள்விக்கப்பட்டது