புரோட்டோன் சிட்டி
புரோட்டோன் சிட்டி (ஆங்கிலம்: Proton City; மலாய்: Bandar Raya Proton; சீனம்: 拉雅普腾镇) என்பது மலேசியா, பேராக் மாநிலம், முவாலிம் மாவட்டத்தில் (Muallim District) அமைந்துள்ள ஒரு தொழில்துறை, வணிக நகரம் ஆகும். இதன் குடியிருப்பு பகுதிகள் 4,000 ஏக்கர் பரப்பளவு (16 கிமீ²) கொண்டவை. RM 1.8 பில்லியன் செலவிலான புரோட்டான் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையும் இங்குதான் உள்ளது.[1]
புரோட்டோன் சிட்டி 2027-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஆர்பி-ஐகோம் (DRB-HICOM) நிறுவனம்; மற்றும் புரோட்டோன் நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியில் புரோட்டோன் சிட்டி கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. புரோட்டோன் சிட்டி 1996-இல் RM 2.5 பில்லியன் தொடக்க முதலீட்டில் தொடங்கப்பட்டது. [2]
புரோட்டோன் சிட்டி நகரம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் வலது புறத்தில், தஞ்சோங் மாலிம் மற்றும் சிலிம் ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி ரப்பர் மற்றும் செம்பனை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும்
பொது
[தொகு]புரோட்டான் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையின் (Proton Car Assembly Plant) கட்டுமானத்துடன் புரோட்டோன் சிட்டி தொடங்கியது. அந்த ஆலையில் தற்சமயம் 2,000-க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
மேலும் அவர்களில் பெரும்பாலோர் அப்பகுதியில் வசிக்கிறார்கள் என்றும் கணிக்கப்படுகிறது. புரோட்டோன் சிட்டி 2027-ஆம் ஆண்டு முழுமையாக வளர்ச்சி அடைந்த நிலையில், அது சுமார் 240,000 மக்கள்தொகையைக் கொண்டு இருக்கும்.[3][4]
புரோட்டான் சிட்டியில் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் (Sultan Idris Education University - UPSI) எனும் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் மற்றும் ஊழியர்களும் உள்ளனர், இந்தப் பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன்பு சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் கல்லூரி (Sultan Idris Teachers Institute) என்று அறியப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் புரோட்டான் நகரத்திற்குள் 800 ஏக்கர் (3.2 கிமீ²) பரப்பளவில் 20,000 மாணவர்களைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Infrastructure boost for Tanjung Malim as Proton City takes shape". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.
- ↑ "Proton Holdings Bhd (Proton), a subsidary of DRB-Hicom Bhd, is investing RM1 billion to RM2 billion under its restructuring plan for Proton City in Tanjung Malim, Perak, over the next four to five years". Borneo Post Online. 7 January 2013. பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.
- ↑ Arif, Zahratulhayat Mat (12 April 2023). "Proton Holdings to fully relocate to Tanjung Malim by 2027 | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.
- ↑ "Proton Holdings set to fully shift to Tanjung Malim by 2027". focusmalaysia.my. 12 April 2023. பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.