உள்ளடக்கத்துக்குச் செல்

பாகன் சுங்கை பூரோங்

ஆள்கூறுகள்: 3°58′14.7″N 100°42′48.8″E / 3.970750°N 100.713556°E / 3.970750; 100.713556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகன் சுங்கை பூரோங்
Bagan Sungai Burong
பேராக்
Map
ஆள்கூறுகள்: 3°58′14.7″N 100°42′48.8″E / 3.970750°N 100.713556°E / 3.970750; 100.713556
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1850
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்http://www.mdkerian.gov.my/en

பாகன் சுங்கை பூரோங் (Bagan Sungai Burong) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், தெலுக் இந்தான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறிய மீன்பிடி கிராமம் ஆகும். தெலுக் இந்தான் நகரத்தில் இருந்து 50 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 112 கி.மீ.; மேற்கே அமைந்து உள்ளது.

பாகன் சுங்கை பூரோங் கிராமத்தில் ஏறக்குறைய 300 பேர் வாழ்கின்றனர், பெரும்பாலும் சீன சாவோ (Chaozhou) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர் கோலாலம்பூர், ஈப்போ, ஜொகூர் பாரு போன்ற பெரிய நகரங்களுக்குச் செல்கின்றனர்.

பொது[தொகு]

இந்த மீன்பிடிக் கிராமத்தில் ஒரே ஒரு சீன தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் பெயர் சோங் சான் சீனப்பள்ளி. கல்வியைத் தொடர விரும்புவோர் அருகில் உள்ள நகரங்களான பாகன் டத்தோ அல்லது தெலுக் இந்தான் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மீன்பிடி கிராமங்களில் பாகன் சுங்கை பூராங் ஒன்றாகும். பூகம்பத்தின் பெரிய அலைகளின் விளைவாக பல மீன்பிடிக் கப்பல்கள் அழிந்தன. இருப்பினும் மனித உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

சூரியகாந்தி தோட்டம்[தொகு]

2020-ஆம் ஆண்டில் பாகன் சுங்கை பூராங்கில் ஒரு சூரியகாந்தி தோட்டம் திறக்கப்பட்டது. இந்தத் தோட்டம் மலேசிய சுற்றுலாப் பயணிகளிடையே விரைவாகப் பிரபலம் அடைந்தது. அந்த வகையில் பாகன் டத்தோ மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரபலமான இடமாகவும் விளங்குகிறது.[1]

இந்தக் கிராம நகரத்தில் பெரிய அளவிலான மீன் நீரில்லம் உள்ளது. தவிர பல கடல் உணவு உணவகங்கள்; மற்றும் படகுகளுக்கான ஒரு படகு துறையும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A sunflower farm in Bagan Datuk is the latest tourist attraction". பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகன்_சுங்கை_பூரோங்&oldid=3994835" இலிருந்து மீள்விக்கப்பட்டது