உள்ளடக்கத்துக்குச் செல்

லங்காப்

ஆள்கூறுகள்: 4°5′1″N 101°8′24″E / 4.08361°N 101.14000°E / 4.08361; 101.14000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லங்காப்
Langkap
பேராக்
லங்காப் நகரம் 2016-ஆம் ஆண்டு படம்.
லங்காப் நகரம்
2016-ஆம் ஆண்டு படம்.
Map
லங்காப் is located in மலேசியா
லங்காப்
      லங்காப்
ஆள்கூறுகள்: 4°5′1″N 101°8′24″E / 4.08361°N 101.14000°E / 4.08361; 101.14000
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்ஈலிர் பேராக்
உருவாக்கம்1840
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்www.mpti.gov.my

லங்காப் என்பது (மலாய்:Langkap; ஆங்கிலம்:Langkap; சீனம்:冷甲) மலேசியா, பேராக் மாநிலத்தில், ஈலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு அருகில் உள்ள மற்ற நகரங்கள்: தெலுக் இந்தான், தாப்பா, பீடோர், சிக்குஸ், செண்டரோங் பாலாய். [1]

இங்கு முக்கியமான பொருளாதாரச் செயல்பாடுகள் வணிகம் மற்றும் நெல் விவசாயம். பெரும்பாலான சீனர்கள் வணிகத் துறையிலும், காய்கறிகள் பயிரிடுதல் தொழிலும் ஈடுபட்டு உள்ளனர். மலாய்க்காரர்கள் பெரும்பாலோர் நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

லங்காப் தமிழர்கள்

[தொகு]

லங்காப் நகரம் பெரும் நகரங்களில் இருந்து சற்றுத் தொலைவில் இருப்பதால் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக உள்ளது. பேராக் மாநிலத்தின் அமைதியான நகரங்களில் இந்த நகரமும் ஒன்றாகும். இந்த லங்காப் பகுதியைச் சுற்றிலும் முன்பு காலத்தில், நிறைய கரும்பு; காபி; ரப்பர் தோட்டங்கள் இருந்தன.

1900-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் தமிழ்நாட்டில் இருந்து இங்கு குடியேற்றப் பட்டனர். அதனால் தமிழர்களின் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் லங்காப் சுற்றுப் புறங்களில் இருந்த தோட்டங்களில் தமிழர்கள் சார்ந்த அமைப்புகள் தோன்றின.

தமிழர் இலக்கிய நிகழ்ச்சிகள்

[தொகு]

தமிழர் திருநாள்; தமிழர் மேடை நாடகங்கள்; தமிழர் இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன. அந்தத் தோட்டங்கள் இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாறி விட்டன. அங்கு தொழில் புரிந்த தமிழர்களில் பெரும்பாலோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள்.

காலத்தின் கோலம். தமிழர்களைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. தமிழர்களுக்குப் பதிலாக வங்காள தேசிகளும், இந்தோனேசியர்களும் லங்காப் சுற்றுவட்டாரங்களில் உள்ள செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

லங்காப் சுப்பிரமணியர் ஆலயம்

[தொகு]

லங்காப் நகரில் ஓர் இந்து ஆலயம் உள்ளது. அதன் பெயர் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம். அண்மைய காலங்களில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

லங்காப் சுப்பிரமணியர் ஆலயத்தின் படங்கள்

சுங்கை தீமா தோட்டத் தமிழ் பள்ளி

[தொகு]

ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள சுங்கை தீமா தோட்டத் தமிழ் பள்ளியில், 2020-ஆம் ஆண்டில் ஒரு மாணவர் கூட பயிலவில்லை. இந்த நிலையில் அந்தப் பள்ளி மூடும் நிலையை எதிர்நோக்கி உள்ளது. இருப்பினும் இந்தப் பள்ளியின் உரிமத்தை வேறு ஒரு பள்ளிக்குப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

சுங்கை தீமா தோட்டத்தில் பணிப்புரிந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு சென்று விட்டதால் மாணவர்கள் இல்லாத நிலையை இப்பள்ளி எதிர் நோக்கி உள்ளது.

லங்காப்பில் தமிழ்ப்பள்ளி கட்டப்படலாம்

[தொகு]

ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரம் லங்காப். இந்த நகரில் தமிழ் பள்ளி இல்லை. இருந்தாலும் லங்காப்பில் அதிகமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சுங்கை தீமா தமிழ்ப்பள்ளியின் உரிமம் (லைசன்ஸ்) கொண்டு லங்காப்பில் தமிழ்ப்பள்ளி கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன என்று பேராக் மாநில ம.இ.கா.வின் கல்வி குழுவின் தலைவர் ஜெயகோபாலன் தெரிவித்தார்.[2]

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமான லங்காப் சிற்றூருக்கு அந்தப் பள்ளியின் உரிமத்தை மாற்றுவது குறித்து முயற்சிகள் தீவிரமாக எடுத்து வரப்படுகின்றன. மலேசியாவில் தமிழ்மொழி அழிந்துவிடக் கூடாது என்று மலேசியத் தமிழர்கள் காலம் காலமாகப் போராடி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.[3]

லங்காப் செம்பனை திருட்டுச் சம்பவங்கள்

[தொகு]

ஈலிர் பேராக் மாவட்டம், லங்காப் மற்றும் பாத்தாக் ராபிட் பகுதிகளில் உள்ள செம்பனை சிறுதோட்டங்களில் செம்பனைக் குலைகள் அடிக்கடி திருடு போகின்றன. இந்தப் பிரச்சினைக்கு மாவட்டக் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என லங்காப் சட்டமன்ற உறுப்பினர் தெரன்சு நாயுடு கோரிக்கை வைத்து உள்ளார்.

செம்பனை நடவு செய்து மூன்று ஆண்டுகள் கழித்து, செம்பனை மரங்கள் பலன் கொடுக்கும் போது செம்பனைக் குலைகள் திருடப் படுகின்றன. செம்பனை விலையேற்றம் அடையும் போது தான் இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 3,000 vehicles ply Jalan Besar Chikus daily, adding that the road connected residents of 60 nearby villages to Pekan Langkap.
  2. லங்காப்பில் தமிழ்ப்பள்ளி கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன.
  3. "மாணவர்கள் இல்லாத தமிழ்ப்பள்ளி மாற்று இடத்தில் செயல்படும்". Archived from the original on 2021-05-18. Retrieved 2021-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்காப்&oldid=3995406" இலிருந்து மீள்விக்கப்பட்டது