ஜெண்டராட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெண்டராட்டா
Jenderata
ஜெண்டராட்டா is located in மலேசியா மேற்கு
ஜெண்டராட்டா
ஜெண்டராட்டா
ஆள்கூறுகள்: 4°57′N 100°38′E / 4.950°N 100.633°E / 4.950; 100.633
நாடுFlag of Malaysia.svg மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
உருவாக்கம்1840
நேர வலயம்மலேசிய நேரம்
(ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
(ஒசநே)

ஜெண்டராட்டா என்பது (மலாய்:Jenderata ; ஆங்கிலம்:Jenderata ; சீனம்:延达塔) மலேசியா, பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இங்கு எண்ணெய்ப் பனை உற்பத்தி முக்கியத் தொழிலாகும். தவிர, இந்த நகரத்தின் சுற்று வட்டாரங்களில் பல தென்னைத் தோட்டங்கள் உள்ளன. ஜெண்ட்ராட்டாவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் வழியில் அந்தத் தோட்டங்களைக் காண முடியும்.

ஜெண்டராட்டா நகருக்கு அருகில் உள்ள நகரங்கள் தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், பாகன் டத்தோ.

பொது[தொகு]

எண்ணெய்ப்பனை தொழிற்சாலைகள்[தொகு]

பிரித்தானிய காலனித்துவ காலத்தில் ஜெண்டராட்டாவில் முதலில் ரப்பர் பயிரிடப்பட்டது. ரப்பர் மற்றும் எண்ணெய் பனை கொண்டு செல்ல ஓர் இரயில் பாதை அமைக்கப்பட்டது.[1]

ஜெண்டராட்டாவில் யூனிடாட்டா (Unitata) மற்றும் யுனைடெட் பிளான்டேஷன் (United Plantation Sdn Bhd) நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய்ப்பனை தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்சாலைகளை இந்த இரயில் பாதை நேரடியாகத் தெலுக் இந்தான் படகு துறையுடன் இணைக்கிறது.[2]

ஜெண்டராட்டா தோட்டம் ஒரு பெரிய எண்ணெய்ப்பனை தோட்டம் ஆகும். ஊத்தான் மெலிந்தாங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. 1906-இல் நிறுவப்பட்டது.

ஜெண்டராட்டா விமான நிலையம்[தொகு]

ஜெண்டராட்டாவில் சிறு விமானங்கள் தரையிறங்க ஒரு சிறிய விமான நிலையமும் உள்ளது. நில வழியை விட விமான வழியைப் பயன்படுத்த பிரித்தானிய தோட்ட நிர்வாகிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. இந்த விமான நிலையம் யுனைடெட் பிளான்டேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. 1906-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது.[3]

ஜெண்டராட்டா தமிழர்கள்[தொகு]

1846-ஆம் ஆண்டில் அப்போதைய மலாயாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 1800 தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் பலர் ஜெண்டராட்டா; பெர்னாம்; ஊத்தான் மெலிந்தாங்; ருங்குப்; சங்காட் ஜோங் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.[4]

1840-ஆம் ஆண்டுகளில் லைபீரியா காபி மலாயாவில் பயிர் செய்யப்பட்டு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. அந்த வகையில் லைபீரியா காபிக்கு தெலுகான்சன் முன்னோடியாக விளங்கியது.[5]

அந்தக் காலக் கட்டத்தில் ஊத்தான் மெலிந்தாங் பகுதிகளில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான காபி, தென்னைத் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவியது. அதை நிவர்த்தி செய்ய ஆந்திராவில் இருந்து 1000 தமிழர்களும் ஆந்திர வம்சாவளியினரும் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களில் ஆந்திர வம்சாவளியினரே அதிகம்.[6]

ஜெண்டராட்டா தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

1. ஜெண்டராட்டா தமிழ்ப்பள்ளி (1) (SJKT Ladang Jendarata 1). மாணவர்கள் எண்ணிக்கை: 98. ஆண்கள்: 51; பெண்கள்: 47.
2. ஜெண்டராட்டா தமிழ்ப்பள்ளி (2) (SJKT Ladang Jendarata 2). மாணவர்கள் எண்ணிக்கை: 42. ஆண்கள்: 17; பெண்கள்: 25.
3. ஜெண்டராட்டா தமிழ்ப்பள்ளி (3) (SJKT Ladang Jendarata 3). மாணவர்கள் எண்ணிக்கை: 103. ஆண்கள்: 55; பெண்கள்: 48.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெண்டராட்டா&oldid=3214051" இருந்து மீள்விக்கப்பட்டது