உள்ளடக்கத்துக்குச் செல்

புக்கிட் மேரா (கிரியான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் மேரா (கிரியான்)
புக்கிட் மேரா நகரம்
புக்கிட் மேரா நகரம்
புக்கிட் மேரா (கிரியான்) is located in மலேசியா
புக்கிட் மேரா (கிரியான்)
      புக்கிட் மேரா (கிரியான்)
ஆள்கூறுகள்: 5°02′N 100°39′E / 5.033°N 100.650°E / 5.033; 100.650
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்கி.பி. 1900
ஏற்றம்
56 m (183.7 ft)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்http://www.mdkerian.gov.my/en

'புக்கிட் மேரா' (மலாய்: Bukit Merah; சீனம்:武吉美拉) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புற நகரம் ஆகும். இந்த நகரத்திற்கு அருகில் இருக்கும் நகரங்கள்: செமாங்கோல்; தைப்பிங்; கோலா குராவ்.

புக்கிட் மேரா எனும் பெயரில் பேராக் மாவட்டத்தில் மட்டும் இரண்டு இடங்கள் உள்ளன. முதலாவது கிந்தா மாவட்டத்தின் புக்கிட் மேரா (Bukit Merah Kinta). இதைக் கிந்தா புக்கிட் மேரா என்று அழைக்கிறார்கள். மற்றொன்று கிரியான் மாவட்டத்தின் புக்கிட் மேரா (Bukit Merah Kerian). இதைக் கிரியான் புக்கிட் மேரா அல்லது தைப்பிங் புக்கிட் மேரா என்றும் அழைக்கிறார்கள்.

புக்கிட் மேரா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்குள்ள புக்கிட் மேரா ஏரிக்கரை உல்லாச சுற்றுலாத் தலம் (Bukit Merah Laketown Resort) நாடளவில் மிகப் பிரபலமானது.[1] இந்தப் பகுதியில் ஓர் அணை கட்டப்பட்டது. அதனால் ஒரு பெரிய தாழ்வான பகுதி நீரில் மூழ்கியது. அதுவே ஓர் ஏரியானது. புக்கிட் மேரா ஏரி (Tasik Bukit Merah). இப்போது புக்கிட் மேரா ஏரிக்கரை சுற்றுலா தலமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_மேரா_(கிரியான்)&oldid=3992055" இலிருந்து மீள்விக்கப்பட்டது