சிக்குஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிக்குஸ்
Chikus
சிக்குஸ் is located in மலேசியா மேற்கு
சிக்குஸ்
சிக்குஸ்
ஆள்கூறுகள்: 4°4′N 101°7′E / 4.067°N 101.117°E / 4.067; 101.117
நாடு மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
உருவாக்கம்1880
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்www.mpti.gov.my

சிக்குஸ் என்பது (மலாய்:Chikus; ஆங்கிலம்:Chikus; சீனம்:筑氏) மலேசியா, பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரத்திற்கு அருகில் சுங்கை பத்தாங் பாடாங்; சுங்கை மானிக் ஆறுகள் ஓடுகின்றன. அருகில் உள்ள நகரம் தெலுக் இந்தான். மிக அருகில் தாப்பா ரோட் இரயில் நிலையம் உள்ளது.

டிரான்ஸ் பேராக் - சுங்கை மானிக் நெல் வேளாண்மைத் திட்டத்திற்கு ஒரு முக்கியப் பகுதியாக விளங்குகிறது. இது ஒரு கிராமப்புறச் சிறுநகரம். இங்கு வாழ்பவர்களில் அதிகமானோர் மலாய்க்காரர்கள். நெல் வேளாண்மையில் ஈடுபட்டு உள்ளார்கள். மற்ற தொழில்கள் எண்ணெய்ப் பனை உற்பத்தி; டுரியான் பழத்தோட்டங்கள்.

சிக்குஸ் மக்கள் பரவல்[தொகு]

சிக்குஸ் ஒரு கிராமப்புற நகரம். பிற நகரங்களில் இருந்து சற்று ஒதுக்குப் புறமாக அமைந்து உள்ளது. விரல்விட்டு எண்ணும் அளவிற்குத் தான் தமிழர்கள் உள்ளார்கள். ஆக அத்தி பூத்தால் போலத்தான் தமிழர்களைப் பார்க்கலாம். 10 கி.மீ. அப்பால் []தாப்பா]] நகரம் உள்ளது. இங்குதான் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

அத்தாடூரி பாலம் பாதிப்பு[தொகு]

2021 ஜனவரி மாதம் தாப்பா பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் சிக்குஸ் நகரத்திற்கு அருகில் இருந்த அத்தாடூரி (Attaduri) பாலம் பெரிதும் சிதைவுற்றது.[1] 22 இலட்சம் ரிங்கிட் செலவில் செப்பனிடும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்குஸ்&oldid=3150099" இருந்து மீள்விக்கப்பட்டது