உலு பேராக் மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°20′N 101°15′E / 5.333°N 101.250°E / 5.333; 101.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராக்
மலேசியா
உலு பேராக் மாவட்டம்
Daerah Hulu Perak
உலு பேராக் மாவட்டம் அமைவிடம் பேராக்
உலு பேராக் மாவட்டம் அமைவிடம் பேராக்
ஆள்கூறுகள்: 5°20′N 101°15′E / 5.333°N 101.250°E / 5.333; 101.250
தொகுதிகிரிக்
நகராட்சிகிரிக் மாவட்ட மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிமியோர் சைபுல் பாடிலா (MEOR SHAHIBUL FADILAH)
பரப்பளவு
 • மொத்தம்6,560.43 km2 (2,533.00 sq mi)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்89,067
 • Estimate (2015)1,90,700
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு+6-05
வாகனப் பதிவுA

உலு பேராக் (Daerah Hulu Perak) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். அந்த மாநிலத்திலேயே பெரிய மாவட்டமும் ஆகும். இந்த மாவட்டத்தின் கிழக்கே கிளாந்தான் மாநிலம்; மேற்கில் கெடா மாநிலம்; தெற்கே கோலாகங்சார் மாவட்டம், தென்மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; ஆகிய பகுதிகள் உள்ளன. தவிர தாய்லாந்தின் பெத்தோங் மாவட்டத்தின் ஒரு பகுதியை எல்லையாகக் கொண்டு உள்ளது.[1]

மாவட்டத்தின் மிக உயரமான இடம் தித்திவாங்சா மலைகளில் அமைந்துள்ளது. தாய்லாந்து / மலேசிய எல்லைக்கும்; தெமாங்கூர் (Temenggor) ஏரிக்கும் அருகில் 1,533 மீட்டர் உயரமுள்ள உலு திதி பாசா சிகரம் தான் அந்த உயரமான இடம்.[2]

வரலாறு[தொகு]

19-ஆம் நூற்றாண்டு வரை, சிறிது காலத்திற்கு இந்த மாவட்டத்தின் ஒரு பகுதி பழைய சயாம் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்தது. சயாம் என்பது தற்சமயம் தாய்லாந்து என்று அழைக்கப் படுகிறது.

சயாம் கட்டுப்பாட்டின் கீழ் அப்போது இருந்த பகுதிகளில் இன்றைய கிரிக்; பெங்காலான் ஊலு (குரோ), கெருனை (Kerunai); பெலும் காடுகள்; மற்றும் தெமாங்கூர் ஏரிகள் போன்ற இடங்கள் அடங்கும்.

அன்றைய காலக்கட்டத்தில் அங்கு ரெமான் (Reman) எனும் மலாய் சிற்றரசு இருந்தது. ரெமான் சிற்றரசின் தலைநகரம் பெங்காலான் ஊலு எனும் இடத்திற்கு அருகில் அமைந்து இருந்தது.[3]

தாய்லாந்து - பேராக் எல்லை ஒப்பந்தம்[தொகு]

பிரித்தானியர்களின் பாதுகாக்கப்பட்ட மாநிலமாக பேராக் மாறியதும், 1882-ஆம் ஆண்டில் ஓர் எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது. கிரிக் நகரில் இருந்து 5 கி.மீ தெற்கே இருக்கும் புக்கிட் நாஷா எனும் இடத்தில், பேராக் மாநிலத்திற்கும் தாய்லாந்து நாட்டிற்கும் இடையிலான அந்த எல்லை ஒப்பந்தம் வரையப் பட்டது.[4]

1899-ஆம் ஆண்டில் கிரிக் நகரத்தையும்; அதைச் சுற்றியுள்ள இடங்களையும் பேராக் மாநிலத்திற்குச் சயாம் நாடு (தாய்லாந்து) மாற்றிக் கொடுத்தது. அப்போது பேராக் மாநிலம், மலாய் மாநிலங்களின் கூட்டாட்சியின் (Federated Malay States) கீழ் இருந்தன. இன்றைய மலேசியா-தாய்லாந்து எல்லை, 1909-ஆம் ஆண்டில் இரு நாடுகளும் இடையே உறுதி செய்யப்பட்டது.[5]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

Map of Hulu Perak District

உலு பேராக் மாவட்டம் 10 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மூன்று மாவட்ட மன்றங்கள் உள்ளன. அவையாவன:[6]

பெங்காலான் உலு மாவட்ட மன்றத்தின் (Pengkalan Hulu District Council) கீழ்:

  • பெங்காலான் உலு (Pengkalan Hulu)
  • பெலுக்கார் செமாங் (Belukar Semang)

கிரிக் மாவட்ட மன்றத்தின் (Gerik District Council) கீழ்:

  • கிரிக் (Gerik)
  • பெலும் Belum
  • கெனரிங் Kenering (with Lawin)
  • கெருனை Kerunai
  • தெமாங்கூர் (Temenggor)

லெங்கோங் மாவட்ட மன்றத்தின் (Lenggong District Council) கீழ்:

  • லெங்கோங் (Lenggong)
  • டுரியான் பிபிட் (Durian Pipit)
  • தெமலோங் (Temelong)

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்[தொகு]

பின்வரும் உலு பேராக் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[7]

உலு பேராக் இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 77,386 86.9%
சீனர்கள் 8,628 9.6%
இந்தியர்கள் 1,658 1.9%
மற்றவர்கள் 1,395 1.6%
மொத்தம் 89,067 100%

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) உலு பேராக் மாவட்டத்தின் கிரிக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மான் (Hasbullah Osman) கடந்த 2020 நவம்பர் 16-ஆம் தேதி மாரடைப்பால் காலமானர்.

மலேசியாவில் அவசரகாலம் நடைமுறையில் இருப்பதால் கிரிக் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.[8]

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P54 கிரிக் காலியாக உள்ளது காலியாக உள்ளது
P55 லெங்கோங் சம்சுல் அனுவார் நசாரா பாரிசான் நேசனல் (அம்னோ)

பேராக் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் உலு பேராக் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P54 N01 பெங்காலான் உலு அஸ்னால் இப்ராகிம் பாரிசான் நேசனல் (அம்னோ)
P54 N02 தெமாங்கூர் சால்பியா முகமட் பாரிசான் நேசனல் (அம்னோ)
P55 N03 கெனரிங் முகமட் தார்மிசி இட்ரிஸ் பாரிசான் நேசனல் (அம்னோ)
P55 N04 கோத்தா தம்பான் சாரானி முகமட் பாரிசான் நேசனல் (அம்னோ)

மேலும் காண்க[தொகு]

மலேசிய மாவட்டங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gerik Township Board was set up in 1928, and the area was gazetted on 17 February 1928". Archived from the original on 28 பிப்ரவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Gunong Ulu Titi Basah: Thailand". Geographic.org. 1994-04-06. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
  3. Pada penghujung abad yang ke 19, sebuah peperangan telah meletus di Hulu Perak. Peperangan ini telah melibatkan daerah kecil di Lenggong yang dinamakan sebagai perang saudara.
  4. "Malaysia-Thailand Boundary" (PDF), International Boundary Study, 57, 15 November 1965, archived from the original (PDF) on 2 ஏப்ரல் 2020, பார்க்கப்பட்ட நாள் 5 மே 2021 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  5. "Laporan Tahunan Jabatan Ukur dan Pemetaan 2018 (Department of Survey and Mapping Annual Report 2018)" (PDF). Department of Survey and Mapping, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
  6. "Portal Rasmi Pejabat Daerah Dan Tanah Hulu Perak, Gerik - Geografi Daerah". pdtgerik.perak.gov.my.
  7. மலேசியா 2010 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
  8. The Election Commission will not proceed with the Gerik by-election in Perak and the Bugaya by-election in Sabah following the proclamation of Emergency in the two constituencies.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hulu Perak District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலு_பேராக்_மாவட்டம்&oldid=3603943" இலிருந்து மீள்விக்கப்பட்டது