டாமார் லாவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாமார் லாவுட்
Damar Laut
டாமார் லாவுட் படகுத் துறை
டாமார் லாவுட் படகுத் துறை
டாமார் லாவுட் is located in மலேசியா மேற்கு
டாமார் லாவுட்
டாமார் லாவுட்
ஆள்கூறுகள்: 4°14′N 100°37′E / 4.233°N 100.617°E / 4.233; 100.617
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்கி.பி.1850
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

டாமார் லாவுட் (மலாய்:Damar Laut; ஆங்கிலம்:Damar Laut; சீனம்:达马尔·劳特) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுபட்டினம். இந்த நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ள நகரங்கள் லூமுட்; மற்றும் சித்தியவான்.

டாமார் லாவுட் கடற்கரை அருகாமையில் அமைந்து உள்ளது. மேற்கு திசையில் டிண்டிங்ஸ் நீரிணையும், பங்கோர் தீவும் உள்ளன.[1] சித்தியவான் நகரில் இருந்து சாலை வழியாகச் சென்றால் 15 நிமிடங்கள் பிடிக்கும். லூமுட் படகுத் துறையில் இருந்து படகு மூலமாகவும் டாமார் லாவுட் பட்டினத்திற்குச் செல்லலாம்.[2]

டாமார் என்பது ஒரு வகையான மரத்தின் பெயர். இந்த மரத்தில் இருந்து ஒரு வகையான பிசின் கிடைக்கிறது. மீன்பிடிப் படகுகளில் துளைகள் விழுந்தால் ஒட்டுவதற்கு அந்தப் பிசினைப் பயன்படுத்துகிறார்கள். பிசின் பொடியை மண்ணெண்ணெயுடன் கலந்து துளைகளில் ஒட்டுகிறார்கள்.

டாமார் லாவுட் பட்டினத்திற்கு அருகிலுள்ள சுற்றுலா இடங்கள் தெலுக் பாத்தேக்; லூமுட் மற்றும் கம்போங் தஞ்சோங் பத்து (Kampung Tanjung Batu). தவிர அரச மலேசிய கடற்படை தளமும் பத்து கி.மீ. தொலைவில் தான் உள்ளது.

இங்கு புலி இறால் (Tiger Prawns) எனும் ஒரு வகையான இறால் மீன் கிடைக்கிறது. சீன மீனவர்கள் இறால் மீன் குளங்களை உருவாக்கி இறால் அறுவடை செய்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாமார்_லாவுட்&oldid=3149103" இலிருந்து மீள்விக்கப்பட்டது