கோப்பேங் மக்களவைத் தொகுதி
கோப்பேங் (P071) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Gopeng (P071) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கம்பார் மாவட்டம் கிந்தா மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 143,657 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | கோப்பேங் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | கோப்பேங், கம்பார், கோத்தா பாரு (பேராக்), மம்பாங் டி அவான், கோலா டிப்பாங், மாலிம் நாவார், லாவான் கூடா, சிம்பாங் பூலாய் |
பரப்பளவு | 577 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | தான் கார் கிங் (Tan Kar Hing) |
மக்கள் தொகை | 216,236 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கோப்பேங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gopeng; ஆங்கிலம்: Gopeng Federal Constituency; சீனம்: 务边国会议席) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டம் (Kampar District); கிந்தா மாவட்டம் (Kinta District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P071) ஆகும்.[7]
கோப்பேங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து கோப்பேங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோப்பேங்
[தொகு]கோப்பேங் நகரம், பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி. கோப்பேங் நகரத்திற்கு மிக அருகில் சிம்பாங் பூலாய் எனும் நகரம் உள்ளது. பேராக் மாநிலத்தில் முதன்முதலில் ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட நகரங்களில் கோப்பேங் நகரமும் ஒன்றாகும்.
1890-ஆம் ஆண்டு வரை கிந்தா பள்ளத்தாக்கில் கோப்பேங் ஒரு முன்னணி ஈயச் சுரங்க நகரமாக விளங்கியது. 1850-ஆம் ஆண்டுகளிலேயே மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது.
கோப்பேங் தமிழர்கள்
[தொகு]1900-ஆம் ஆன்டுகளில் கோப்பேங் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. தமிழர்களும் கணிசமான அளவில் இருந்தனர். அதே சமயத்தில் பிரித்தானியர்களுக்குச் சொந்தமான ஈயச் சுரங்கங்களிலும் தமிழர்கள் வேலை செய்தனர்.
பிரித்தானியர்கள் அந்தச் சுரங்கங்களை மூடியதும் தமிழர்கள் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டனர். ஆடு மாடுகளை வளர்த்தனர். கோப்பேங்கில் லாவான் கூடா எனும் ஒரு தமிழர்ப் பகுதி உள்ளது. இங்கு கணிசமான அளவிற்கு தமிழர்கள் உள்ளனர். ஓரளவிற்கு வசதியாகவும் வாழ்கின்றனர்.
கோப்பேங் மக்களவைத் தொகுதி
[தொகு]கோப்பேங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் கிந்தா தொகுதியில் இருந்து கோப்பேங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P064 | 1986–1987 | டான் கூன் சுவான் (Tan Koon Swan) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
1987–1990 | திங் சியூ பே (Ting Chew Peh) | |||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P067 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P071 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | லீ பூன் சாய் (Lee Boon Chy) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | தான் கார் கிங் (Tan Kar Hing) |
கோப்பேங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
143,657 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
105,000 | 73.09% | ▼ - 8.12% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
103,638 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
270 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,092 | ||
பெரும்பான்மை (Majority) |
27,148 | 26.20% | ▼ - 9.38 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [8] |
கோப்பேங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
தான் கார் கிங் (Tan Kar Hing) |
பாக்காத்தான் | 103,638 | 55,880 | 53.92% | - 7.83% ▼ | |
முகமது பர்கான் அப்துல் ரகீம் (Muhammad Farhan Abdul Rahim) |
பெரிக்காத்தான் | - | 28,732 | 27.72% | + 27.72% | |
திங் சாவோ சோங் (Ting Zhao Song) |
பாரிசான் | - | 18,393 | 17.75% | - 6.41 % ▼ | |
பாலசந்திரன் கோபால் (Balachandran Gopal) |
வாரிசான் | - | 633 | 0.61% | + 0.61% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
மேலும் காண்க
[தொகு]- கோப்பேங்
- கம்பார்
- மம்பாங் டி அவான்
- கோலா டிப்பாங்
- மாலிம் நாவார்
- கோத்தா பாரு
- மலேசியத் தேர்தல் தொகுதிகள்