உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய மலாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய மலாயர்
Malaysian Malays
Orang Melayu Malaysia
ملايو مليسيا
மலேசிய மலாயர்
மொத்த மக்கள்தொகை
17,610,458
மலேசிய மக்கள் தொகையில் 57.9% (2023)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா
மொழி(கள்)
மலாய்
சமயங்கள்
சன்னி இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்

மலேசிய மலாயர் (மலாய்: Orang Melayu Malaysia; ஆங்கிலம்: Malaysian Malays; சீனம்: 亚罗牙也县) என்பவர்கள் மலாய் இனத்தைச் சேர்ந்த மலேசியர்கள் ஆவார்கள். இவர்களின் வம்சாவளியினர் மலாய் உலகில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தோன்றியவர்கள் ஆவார்கள்.

2023-ஆம் ஆண்டு மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மலேசியாவின் மொத்த மக்கள்தொகையில் 17.6 மில்லியன்; அதாவது 57.9% விழுக்காடாக உள்ளனர். இவர்கள் நாட்டின் மிகப்பெரிய இனக்குழுவினர் ஆகும்.

இவர்களை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்: பூர்வீக மலாயர்கள் அல்லது உள்ளூர் மலாயர்கள் (Indigenous Malays or Local Malays); மற்றும் வர்த்தக மலாயர்கள் அல்லது வெளிநாட்டு மலாயர்கள் (Trading Malays or Foreign Malays).[2][3]

பொது

[தொகு]

பூர்வீக மலாயர்கள்

[தொகு]

பூர்வீக மலாயர்கள் மலாய் தீபகற்பம் மற்றும் போர்னியோவின் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மலாய் கலாசாரத்தை கடைபிடிக்கும் மக்களைக் கொண்டுள்ளனர்.[3] குறிப்பிடத்தக்க குழுக்களில் புரூணை மலாயர்; கெடா மாநிலத்தின் மலாயர்கள்; கிளாந்தான் மாநிலத்தின் மலாயர்கள்; பகாங் மாநிலத்தின் மலாயர்கள்; பேராக் மாநிலத்தின் மலாயர்கள்; சரவாக் மாநிலத்தின் மலாயர்கள்; மற்றும் திராங்கானு மாநிலத்தின் மலாயர்கள்; ஆகியோர் அடங்குவர்.

வெளிநாட்டு மலாயர்கள்

[தொகு]

வர்த்தக மலாயர்கள் அல்லது வெளிநாட்டு மலாயர்கள் என்பவர்கள் மலாய் தீவுக்கூட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து குடியேறியவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மலாய் சுல்தான்களின் குடிமக்களாக மாறி, வெவ்வேறு காலங்களில் மலாய் கலாசாரத்தின் வாழ்க்கை முறை மற்றும் மதம் போன்ற பொதுவான ஒற்றுமையால் உள்வாங்கப்பட்டவர்கள் ஆவார்கள். [4][5][6][7]

வெளிநாட்டு மலாயர்களின் வம்சாவளியினர்

[தொகு]

சிறுபான்மை மலாயர்கள்

[தொகு]

சில வெளிநாட்டு மலாயர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்தும் வந்து இருக்கலாம். அதில் இந்தோசீனாவின் சாம் மக்கள், ஆஸ்திரேலிய கொக்கோசு தீவுகளின் கொக்கோசு மலாயர்கள்; மற்றும் தெற்கு தாய்லாந்தின் பட்டாணி மலாயர்களும் அடங்கும்.

மலாய் முசுலீம் கலாசாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, பல நாடுகளில் இருந்து அண்மைய காலத்தில் குடியேறிய வம்சாவளியைச் சேர்ந்த சிறுபான்மை மலாயர்களும் அவர்களில் உள்ளனர் .

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Demographic Statistics Malaysia - First Quarter of 2023" (PDF). Department of Statistics, Malaysia. 2023. பார்க்கப்பட்ட நாள் 25 May 2023.
  2. Mohd Hazmi Mohd Rosli; Rahmat Mohamad (5 June 2014). "Were the Malays immigrants?". The Malay Mail Online. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.
  3. 3.0 3.1 Miller & Williams 2006, ப. 45–46
  4. Gulrose Karim 1990, ப. 74
  5. Suad Joseph & Afsaneh Najmabadi 2006, ப. 436
  6. Gulrose Karim 1990, ப. 74
  7. Suad Joseph & Afsaneh Najmabadi 2006, ப. 436
  • Miller, Terry E.; Williams, Sean (2006), Other Malays: Nationalism and Cosmopolitanism in the Modern Malay World, University of Hawaii Press
  • Gulrose Karim (1990). Information Malaysia 1990–91 Yearbook. Kuala Lumpur: Berita Publishing Sdn. Bhd. p. 74.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மலாயர்&oldid=3918726" இலிருந்து மீள்விக்கப்பட்டது