பட்டாணி மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாணி
மாநிலம்
Pattani
பட்டாணி பெரிய மசூதி
பட்டாணி பெரிய மசூதி
பட்டாணி-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பட்டாணி
சின்னம்
நாடு தாய்லாந்து
மாநிலம் பட்டாணி
தலைநகரம்பட்டாணி நகரம்
அரசு
 • ஆளுநர்நின்கான் பூன்லுவாங்
Niphan Boonluang
(2021)
பரப்பளவு
 • மொத்தம்1,940 km2 (750 sq mi)
பரப்பளவு தரவரிசைதாய்லாந்து மாநிலங்கள்
68-ஆவது நிலை
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்718,077
 • தரவரிசைதாய்லாந்து மாநிலங்கள்
37-ஆவது நிலை
 • அடர்த்தி370/km2 (1,000/sq mi)
 • அடர்த்தி தரவரிசைதாய்லாந்து மாநிலங்கள்
9-ஆவது நிலை
அடைவுக் குறியீடு[2]
 • (2017)0.4950 "low"
தாய்லாந்து மாநிலங்கள்
74-ஆவது நிலை
நேர வலயம்தாய்லாந்து நேரம்
தாய்லாந்து அஞ்சல் சுட்டு எண்94xxx
தாய்லாந்து தொலைபேசி குறியீடு எண்073
இணையதளம்www.pattani.go.th

பட்டாணி (ஆங்கிலம்: Pattani; தாய்: ปัตตานี); ஜாவி; ڤطاني ) என்பது தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் அமைந்த மாநிலம். இந்த மாநிலத்தின் தலைநகரம் பட்டாணி நகரம் ஆகும். இந்த மாநிலத்திற்கு அருகில் நாரதிவாட் (Narathiwat); சோங்கலா (Songkhla); சத்துன் (Satun); யாலா (Yala); ஆகிய மாநிலங்கள் உள்ளன.

பட்டாணி மாநிலம் தீபகற்ப மலேசியா பெருநிலப்பகுதியில், தாய்லாந்து வளைகுடா (Gulf of Thailand) கடற்கரையுடன் ஒட்டி அமைந்து உள்ளது. தெற்கில் சங்கலகிரி மலைத்தொடர் (Sankalakhiri Mountain Range) உள்ளது. அந்த மலைத் தொடரில் புடோ-சு-நிகை பாடி தேசிய பூங்கா (Budo-Su-ngai Padi National Park), மற்றும் யாலா; நாரதிவாட் மாநிலங்களின் எல்லைகள் உள்ளன.

இந்த மாநிலத்தின் 110 சதுர கி.மீ.; அதாவது மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 5.6 விழுக்காடு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு உள்ளது.[3]

சொற்பிறப்பியல்[தொகு]

பட்டாணி என்பது மலாய்ப் பெயரான பட்டானி (ஆங்கிலம்: Pattani; ஜாவி: ڤتاني) என்பதன் தாய் மொழி தழுவலாகும். "இந்தக் கடற்கரை" என்று பொருள்படும்.[4]

புராணக் கதைகளின் படி, முன்பு காலத்தில் பட்டாணியின் தலைவர் வேட்டையாடச் சென்றார். ஓர் ஆடு அளவுக்கு ஒரு சருகுமானைப் பார்த்தார். அந்தச் சருகு மான் திடீரென்று காணாமல் போனது. அந்தச் சருகு மான் எங்கு சென்றது என்று அவர் விசாரித்தார், அவருடைய ஆட்கள் "பட நி லா" ("Pata ni lah") என்று பதிலளித்தனர்.

மாறன் மகாவம்சன் மகள் பத்தினி[தொகு]

பின்னர் அவர்கள் அந்தச் சருகு மானைத் தேடினார்கள். ஆனால் அதற்குப் பதிலாக ஒரு முதியவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் தன் பெயர் சே' தானி (Che' Tani) என்று கூறினார். பின்னர் சருகு மான் காணாமல் போன இடத்தில் ஒரு நகரத்தை கட்ட தலைவர் உத்தரவிட்டார். எனவே இந்த நகரம் அந்த முதியவரின் பெயரால் பட்டாணி என்று அழைக்கப் படுவதாகவும் னம்பப்படுகிறது.

மற்றொரு பரிந்துரை: சமஸ்கிருதச் சொல்லான பத்தினி (Pathini) என்பதில் இருந்து வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அதாவது முந்தைய இலங்காசுகம் பேரரசை (Langkasuka Empire) நிறுவிய மாறன் மகாவம்சன் (Merong Mahawangsa) என்பவரின் மகளின் பெயர் பத்தினி. அந்தப் பெயரில் இருந்து பட்டாணிக்குப் பெயர் வந்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

வரலாறு[தொகு]

வரலாற்று ரீதியாக, பட்டாணி மாநிலம் முன்னர் காலத்தில் மலாய் மக்களின் பட்டாணி இராச்சியத்தின் (Patani Kingdom) மையமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக பட்டாணி மாநிலம் சயாமின் கண்காணிப்பிலும் இருந்து வந்தது.

1786-இல் பட்டாணி இராச்சியத்தை சயாம் கைப்பற்றியது. அதில் இருந்து சயாமினால் பட்டாணி ஆளப்பட்டு வருகிறது. பட்டாணி இராச்சியம் 7 சிறிய மாநிலங்களாக மாற்றப் பட்டன.

 1. பட்டாணி - Patani
 2. நோங்சிக் - Nhongchik
 3. ராமன் - Raman
 4. ரா-ங்கே - Ra-ngae
 5. சிபுரி - Saiburi
 6. யாலா - Yala
 7. யாரிங் - Yaring

1906-ஆம் ஆண்டில் 4 பெரிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன:

 1. பட்டாணி - Patani
 2. நாரதிவாட் - Narathiwat
 3. சிபுரி - Saiburi
 4. யாலா - Yala

இப்போது பட்டாணி, தாய்லாந்து நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "2018 Annual Population and House Statistics Report" [Statistics, population and house statistics for the year 2018]. Registration Office Department of the Interior, Ministry of the Interior. 31 December 2018. Archived from the original on 14 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. Human achievement index 2017 by National Economic and Social Development Board (NESDB), pages 1-40, maps 1-9, retrieved 14 September 2019, ISBN 978-974-9769-33-1
 3. "Table 2 Forest Areas Seperate by province, 2019" [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department (in Thai). 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021, information, Forest statistics Year 2019{{cite web}}: CS1 maint: postscript (link) CS1 maint: unrecognized language (link)
 4. Wyatt, David K. (December 1967). "A Thai Version of Newbold's "Hikayat Patani"". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 40 (2 (212)): 16–37. 
 5. "A Brief Introduction to the Malay Kingdom of Patani". Islamic Human Rights Commission. 21 December 2004.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pattani Province
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாணி_மாநிலம்&oldid=3770045" இலிருந்து மீள்விக்கப்பட்டது