மலேசியப் பொதுத் தேர்தல், 1964

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய பொதுத் தேர்தல், 1964

← 1959 25 ஏப்ரல் 1964 1969 →

மலேசிய மக்களவையின் 159 இடங்கள்
அதிகபட்சமாக 53 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்2,681,895
வாக்களித்தோர்80.03%
  First party Second party Third party
  MPSF
தலைவர் துங்கு அப்துல் ரகுமான் தான் சி கூன் புர்கானுடின் எல்மி
கட்சி
கூட்டணி

மலாயா மக்கள் சோசலிச முன்னணி

பாஸ்
முந்தைய
தேர்தல்
51.8%, 74 இடங்கள் 12.9%, 8 இடங்கள் 21.3%, 13 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
89 2 9
மாற்றம் 15 6 4
மொத்த வாக்குகள் 1,204,340 330,898 301,187
விழுக்காடு 58.5% 16.1% 14.6%
மாற்றம் 6.7pp 3.2pp 6.7pp

  Fourth party Fifth party Sixth party
  UDP
தலைவர் லிம் சோங் இயூ சீனிவாசகம் பத்மராஜா லீ குவான் யூ
கட்சி
ஐக்கிய மக்களாட்சி கட்சி

மக்கள் முற்போக்கு கட்சி

மக்கள் செயல் கட்சி
முந்தைய
தேர்தல்
6.3%, 4 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
1 2 1
மாற்றம் புதிது 2 புதிது
மொத்த வாக்குகள் 88,223 69,898 42,130
விழுக்காடு 4.3pp 3.4% 2.0%
மாற்றம் புதிது 2.9pp புதிது


முந்தைய பிரதமர்

துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய கூட்டணி கட்சி

பிரதமர்-அமர்வு

துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய கூட்டணி கட்சி


மலேசியப் பொதுத் தேர்தல், 1964 (ஆங்கிலம்: 1964 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1964) என்பது 1964 ஏப்ரல் மாதம் 25-ஆம் திகதி மலேசியாவில் நடைபெற்ற 2-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி மலேசியா உருவாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல்; மற்றும் 31 ஆகஸ்டு 1957-இல் மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்ற பிறகு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலாகவும் அமைகிறது.[1]

மலேசியாவின் அப்போதைய 159 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. சபா, சரவாக், சிங்கப்பூர் மாநிலங்கள் இந்தப் பொதுத் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, மக்களவை இடங்களின் எண்ணிக்கை 159-ஆக இருந்தது.[2]

அண்டை நாடுகளில் இருந்து, குறிப்பாக இந்தோனேசியாவில் இருந்து மலேசியா மோதல் பதற்றத்தை எதிர்கொள்ளும் போது இந்தத் தேர்தல் நடைபெற்றது. இந்தோனேசியா - மலேசியா மோதல் பிரச்சினையும், மலேசியாவைக் காலனித்துவப் படுத்தும் சுகர்ணோவின் இலட்சியமும், இந்தத் தேர்தலில் மிகப்பெரிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டன.

பொது[தொகு]

இந்தப் பொதுத் தேர்தலில் பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும்; ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 14 மாநிலங்களில்; 11 மாநிலங்களில் உள்ள 282 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக், சிங்கப்பூர் மாநிலங்களில் மட்டும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான மலேசிய கூட்டணி கட்சி, மொத்த 104 இடங்களில் 89 இடங்களை வென்றது. மலேசிய கூட்டணி கட்சிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 78.9%.

சிங்கப்பூர் பிரச்சினை[தொகு]

இந்தத் தேர்தல், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப் படுவதற்கும் பங்களித்தது. சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மக்கள் செயல் கட்சி, தீபகற்ப மலேசியாவிலும் போட்டியிட்டது. மக்கள் செயல் கட்சியின் தேர்தல் பேரணிகள் பெரும் கூட்டத்தை ஈர்த்தாலும், பொதுத்தேர்தலில் அந்தக் கட்சியினால் ஒரே ஓர் இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது.

கோலாலம்பூர் பங்சார் நாடாளுமன்றத் தொகுதியில்; (தற்போது செபுத்தே லெம்பா பந்தாய் மக்களவை தொகுதிகளின் ஒரு பகுதி) போட்டியிட்ட தேவன் நாயர் மட்டுமே மக்கள் செயல் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார். தேவன் நாயர், பின்னர் காலத்தில் மூன்றாவது சிங்கப்பூர் அதிபர் பதவியை வகித்தவர் ஆவார்.[3]

மலேசியப் பொதுத் தேர்தல்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநில அளவிலான மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.[4]

தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரை மலேசியப் பிரதமர் அல்லது மலேசியப் பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக் கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[5]

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.

ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%Seats
தேர்வுநியமனம்மொத்தம்+/–
மலேசிய கூட்டணி கட்சிஅம்னோ7,94,57838.6259059+7
மலேசிய சீனர் சங்கம்3,77,96918.3727027+8
மலேசிய இந்திய காங்கிரசு31,7931.553030
மொத்தம்12,04,34058.5389089+15
மலாயா மக்கள் சோசலிச முன்னணிமலாயா தொழிலாளர் கட்சி2,12,54610.33202–4
மலாயா தொழிலாளர் கட்சி1,03,0455.01000–2
தேசிய சட்டமன்ற கட்சி15,3070.74000புதிது
மொத்தம்3,30,89816.08202–6
மலேசிய இசுலாமிய கட்சி3,01,18714.64909–4
ஐக்கிய மக்களாட்சி கட்சி88,2234.29101புதிது
மக்கள் முற்போக்கு கட்சி69,8983.40202–2
மக்கள் செயல் கட்சி42,1302.0511213புதிது
தேசியக் கட்சி7,3190.36000–1
ஐக்கிய சபா தேசிய அமைப்பு 66புதிது
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி 66புதிது
ஐக்கிய பசோக்மோமோகுன் கடாசன் அமைப்பு 55புதிது
சரவாக் மக்கள் முன்னணி 55புதிது
சபா சீனர் சங்கம் 44புதிது
சரவாக் தேசியக் கட்சி 44புதிது
சரவாக் சீனர் சங்கம் 33புதிது
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி 33புதிது
சரவாக் தேசிய கட்சி 33புதிது
சோசலிச முன்னணி 33புதிது
ஐக்கிய பசோக் மோமோகன் அமைப்பு 11புதிது
சுயேச்சைகள்13,5090.66000–3
மொத்தம்20,57,504100.0010455159+55
செல்லுபடியான வாக்குகள்20,57,50495.85
செல்லாத/வெற்று வாக்குகள்89,1044.15
மொத்த வாக்குகள்21,46,608100.00
பதிவான வாக்குகள்/வருகை26,82,41680.03
மூலம்: Nohlen et al., Singapore Elections, Singapore Elections

மேற்கோள்கள்[தொகு]

  1. Dieter Nohlen; Florian Grotz; Christof Hartmann (15 November 2001). Elections in Asia and the Pacific : A Data Handbook: Volume II: South East Asia, East Asia, and the South Pacific. OUP Oxford. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-924959-6.
  2. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  3. "Chengara Veetil Devan Nair (born. 5 August 1923, Jasin, Malacca, Malaysia died 7 December 2005, Canada), better known as just Devan Nair, was Singapore's third president and first Indian president. The son of a rubber plantation clerk, Nair moved from Malaysia to Singapore with his family when he was 10 years old". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  4. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
  5. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times. 

வெளி இணைப்புகள்[தொகு]