மலேசியப் பொதுத் தேர்தல், 1982

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பொதுத் தேர்தல், 1982

← 1978 22–26 ஏப்ரல் 1982 1986 →

மலேசிய மக்களவையின் 154 இடங்கள்
அதிகபட்சமாக 78 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்6,081,628
வாக்களித்தோர்74.39%
  First party Second party Third party
 
தலைவர் மகாதீர் முகமது லிம் கிட் சியாங் அசுரி மூடா
கட்சி
பாரிசான் நேசனல்

ஜசெக

பாஸ்
முந்தைய
தேர்தல்
57.23%, 130 இடங்கள் 19.13%, 16 இடங்கள் 15.48%, 5 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
132 9 5
மாற்றம் 2 7
மொத்த வாக்குகள் 2,522,079 815,473 602,530
விழுக்காடு 60.54% 19.58 14.46%
மாற்றம் 3.31pp 0.45pp 0.98pp

முந்தைய பிரதமர்

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்

பிரதமர்-அமர்வு

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்


மலேசியப் பொதுத் தேர்தல், 1982 (ஆங்கிலம்: 1982 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1982) என்பது 1982 ஏப்ரல் 22- 26-ஆம் தேதிகளில், மலேசியாவில் நடைபெற்ற 6-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 154 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 293 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 154 இடங்களில் 132 இடங்களை வென்றது. பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 60.54%. 1981-இல் மலேசியப் பிரதமர் பதவிக்கு மகாதீர் பின் முகமது நியமிக்கப்பட்ட பிறகு, இந்தத் தேர்தலே அவருடைய முதல் பொதுத் தேர்தல் ஆகும்.[1]

பொது[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநில அளவிலான மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.[2]

தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரை மலேசியப் பிரதமர் அல்லது மலேசியப் பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக் கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[3]

தேசியப் பொதுத் தேர்தல்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.

ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%Seats+/–
பாரிசான் நேசனல்அம்னோ25,22,07960.54700
மலேசிய சீனர் சங்கம்24+7
சபா மக்கள் ஐக்கிய முன்னணி10+1
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி80
சரவாக் தேசியக் கட்சி6–3
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி5–1
கெராக்கான்5+1
மலேசிய இந்திய காங்கிரசு4+1
ஐக்கிய சபா தேசிய அமைப்பு0–5
மக்கள் முற்போக்கு கட்சி00
மொத்தம்132+2
ஜனநாயக செயல் கட்சி8,15,47319.589–7
மலேசிய இசுலாமிய கட்சி6,02,53014.4650
மலேசிய மக்கள் கட்சி39,4190.9500
ஐக்கிய பசோக் நுனுக்ரகாங் தேசிய அமைப்பு14,9580.360புதிது
சபா சீன ஐக்கிய கட்சி11,6000.280புதிது
சரவாக் டயாக் இனக்கட்சி1,4150.0300
மலேசியச் சமூக மக்களாட்சி கட்சி4640.0100
சமூக ஐக்கிய சங்கக் கட்சி3520.0100
சரவாக் மக்கள் அமைப்பு1780.000–1
சுயேச்சைகள்1,57,2293.778+7
மொத்தம்41,65,697100.001540
செல்லுபடியான வாக்குகள்41,65,69796.96
செல்லாத/வெற்று வாக்குகள்1,30,6053.04
மொத்த வாக்குகள்42,96,302100.00
பதிவான வாக்குகள்/வருகை57,75,59574.39
மூலம்: CLEA

மேற்கோள்கள்[தொகு]

  1. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  2. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
  3. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times. 

வெளி இணைப்புகள்[தொகு]