மலேசியாவின் ஐந்தாவது மக்களவை, 1978–1982

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவின் ஐந்தாவது மக்களவை
5th Malaysian Parliament
Parlimen Malaysia Kelima
(1978–1982)
4-ஆவது 6-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை31 சூலை 1978 – 29 மார்ச் 1982
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1978
அரசுஉசேன் இரண்டாம் அமைச்சரவை (சூலை 16, 1981 வரை)
மகாதீர் முதலாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்154
மலேசிய மக்களவைத் தலைவர்சையட் நாசிர் இசுமாயில்
துணை மக்களைவைத் தலைவர்மன்சூர் ஒசுமான்
செயலாளர்அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ்
பிரதமர்உசேன் ஓன் (16 சூலை 1981 வரையில்)
மகாதீர் பின் முகமது
எதிரணி தலைவர்லிம் கிட் சியாங்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்யகாயா பெத்ரா (29 மார்ச் 1979 வரையில்)
பகாங் சுல்தான் அகமட் சா
அமர்வுகள்
1st31 சூலை 1978 – 11 டிசம்பர் 1979
2nd17 மார்ச் 1980 – 12 டிசம்பர் 1980
3rd16 மார்ச் 1981 – 21 டிசம்பர் 1981
4th8 மார்ச் 1982 – 19 மார்ச் 1982

மலேசியாவின் ஐந்தாவது மக்களவை 1978–1982 (மலாய்: Parlimen Malaysia Kelima (1974–1978) அல்லது Parlimen Malaysia ke-5; ஆங்கிலம்: 5th Parliament of Malaysia (1978–1982) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஐந்தாவது மக்களவை ஆகும்.

5-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 31 சூலை 1978-இல் நடைபெற்றது.[1]

பொது[தொகு]

1978-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1978 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் ஐந்தாவது மக்களவை கூடியது.

மக்களவை தலைவராக சையட் நாசிர் இசுமாயில் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் உசேன் ஓன் அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.

மக்களவை அமைப்பு (1978–1982)[தொகு]

1978-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 154 இடங்களுக்கு 370 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 130 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது.

கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1978
பாரிசான் நேசனல் பாரிசான் (BN) 130
அம்னோ அம்னோ (UMNO) 70
மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA) 17
மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC) 3
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS) 5
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி கெராக்கான் (GERAKAN) 4
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP) 0
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP) 16
மலேசிய சமூகக் கட்சி சமூகக் கட்சி (PSRM) 0
சபா மக்கள் ஐக்கிய முன்னணி சபாமுன்னணி (BERJAYA) 0
ஐக்கிய சபா ஐக்கிய சபா (USNO) 5
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி பூமிபுத்ரா (PBB) 8
சரவாக் தேசிய கட்சி சரவாக் தேசியம் (SNAP) 9
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி சரவாக் மக்கள் (SUPP) 6
சரவாக் மக்கள் அமைப்பு சாப்போ (SAPO) 1
சுயேச்சை சுயேச்சை 1
- மொத்தம் 154

மேற்கோள்கள்[தொகு]

  1. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.