உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய கல்வி அமைச்சு

ஆள்கூறுகள்: 02°56′36.14″N 101°42′31.7″E / 2.9433722°N 101.708806°E / 2.9433722; 101.708806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய கல்வி அமைச்சு
Kementerian Pendidikan Malaysia
Ministry of Education Malaysia

KPM / MoE

மலேசிய கல்வித் துறை அமைச்சகம் புத்ராஜெயா
துறை மேலோட்டம்
அமைப்பு1955 (69 ஆண்டுகளுக்கு முன்னர்) (1955)
முன்னிருந்த அமைப்புகள்
  • * மலேசிய கல்வித் துறை அமைச்சு
  • * மலேசிய உயர்க்கல்வித் துறை அமைச்சு
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Block E8, Parcel E, Federal Government Administrative Centre, 62604 புத்ராஜாயா
02°56′36.14″N 101°42′31.7″E / 2.9433722°N 101.708806°E / 2.9433722; 101.708806
பணியாட்கள்549,159 (2018)
ஆண்டு நிதிMYR 64,122,868,300 (2022 - 2023)[1]
அமைச்சர்
  • * பட்லினா சிடேக்
    (Fadhlina Sidek)[2]
துணை அமைச்சர்
  • * லிம் உய் இங்
    (Lim Hui Ying)
அமைப்பு தலைமைகள்
  • * நிக் நசருதின் சவாவி
    (Nik Nasarudin Mohd Zawawi), பொதுச் செயலர்
  • * பகாருடின் கசாலி
    (Pkharuddin Ghazali),
    தலைமை இயக்குனர்
வலைத்தளம்www.moe.gov.my
முகநூலில் மலேசிய கல்வி அமைச்சு

மலேசிய கல்வி அமைச்சு (மலாய்: Kementerian Pendidikan Malaysia; ஆங்கிலம்: Ministry of Education Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

இந்த அமைச்சு, மலேசியாவின் கல்வித் துறை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும்; செயல் பாடுகளுக்கும் பொறுப்பு வகிக்கும் முதன்மை அரசாங்க அமைப்பாகச் செயல் படுகின்றது. அத்துடன் கல்வி சார்ந்த அனைத்துக் கொள்கைகளையும் நிர்வகித்துப் பராமரிக்கும் பொறுப்புகளையும் கொண்டுள்ளது.

மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, அறிவிக்கப்பட்டது. மலேசியக் கல்வி அமைச்சராக பாட்லினா சீடேக் (Fadhlina Sidek) என்பவர் நியமிக்கப்பட்டார். மறுநாள் 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, 28 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.[3]

பொது

[தொகு]

மலேசிய கல்வித் துறை அமைச்சு உருவாக்கப்பட்ட தொடக்கக் காலத்தில், மலேசிய கல்வி அமைச்சு (Kementerian Pendidikan) என்று பொதுவாக அழைக்கப்படது. அந்த அமைச்சு கல்வி தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாக இருந்தது.

2004-ஆம் ஆண்டில், மலேசியக் கல்வி அமைச்சு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவின் பெயர் மலேசிய கல்வி அமைச்சு (Kementerian Pelajaran). பாலர் பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டது. மற்றொரு பிரிவின் பெயர் மலேசிய உயர்கல்வி அமைச்சு (Ministry of Higher Education).

பிரதமர் நஜீப் ரசாக் (Prime Minister Najib Razak) பிரதமராகப் பொறுப்பு வகித்த காலத்தில், இரண்டு அமைச்சுகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், 2015-இல் மீண்டும் இரு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாகச் செயல்பட்டன.

பொறுப்பு துறைகள்

[தொகு]
  • கல்வி முறை (Education System)
  • கட்டாயக் கல்வி (Compulsory Education)
  • மூன்றாம் நிலைக் கல்வி (PreTertiary Education)
  • பாடத்திட்டத் தரநிலை (Curriculum Standard)
  • பாடநூல்கள் (Textbooks)
  • தரப்படுத்தப்பட்ட சோதனை (Standardised Test)
  • மொழிக் கொள்கை (Language Policy)
  • மொழிப் பெயர்ப்பு (Translation)
  • தெரிந்தெடுப்பு பள்ளிகள் (Selective Schools)
  • திறன் பள்ளிகள் (Comprehensive Schools)
  • தொழில்நுட்ப, தொழிற்கல்வி, பயிற்சி (Technical, Vocational Education, Training) (TVET)

அமைப்பு

[தொகு]
  • கல்வித் துறை அமைச்சர்
    • துணைக் கல்வித் துறை அமைச்சர்
      • பொதுச் செயலாளர்
        • பொதுச் செயலாளர் அதிகாரத்தின் கீழ்
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
          • சட்ட ஆலோசகர் அலுவலகம் (Legal Advisor Office)
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
          • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
          • கல்விச் செயல்நிறைவு மற்றும் வழங்குதல் பிரிவு (Education Performance and Delivery Unit)
        • துணைச் செயலாளர் (கல்வி மேம்பாடு) (Education Development)
          • கல்வி மேம்பாட்டு பிரிவு (Education Development Division)
          • கொள்முதல் மற்றும் சொத்து நிர்வாகப் பிரிவு (Procurement and Asset Management Division)
          • கொள்கை மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு (Policy and International Relations Division)
          • புலமை உதவித்தொகை பிரிவு (Scholarship Division)
          • பள்ளி தணிக்கை பிரிவு (School Audit Division)
        • துணை செயலாளர் (நிர்வாகம்) (Management)
          • நிதி பிரிவு (Finance Division)
          • மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
          • கணக்குப் பிரிவு (Account Division)
          • தகுதி மேம்பாட்டு மற்றும் மதிப்பீட்டு பிரிவு (Competency Development and Assessment Division)
          • உளவியல் மற்றும் ஆலோசனை பிரிவு (Psychology and Counselling Division)
          • தகவல் முகாமைத்துவம் பிரிவு (Information Management Division)
          • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
        • கல்வி தலைமை இயக்குனர்
          • கல்வித் துணை இயக்குநர்-கல்வி (கல்வி மேம்பாட்டுக் கொள்கை) (Education Development Policy)
            • கல்வித் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு (Educational Planning and Research Division)
            • பாடத்திட்ட மேம்பாட்டு பிரிவு (Curriculum Development Division)
            • தேர்வு கழகம் (Examination Syndicate)
            • கல்வி தொழில்நுட்பப் பிரிவு (Educational Technology Division)
            • பாடநூல் பிரிவு (Textbook Division)
            • மலேசிய தேசிய நூல் மன்றம் (The National Book Council of Malaysia)
          • கல்வி துணை இயக்குநர் (கல்வி இயக்கம்) (Education Operation)
            • பள்ளி மேலாண்மை பிரிவு (School Management Division)
            • தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்விப் பிரிவு (Technical and Vocational Education Division)
            • இசுலாமியக் கல்வி பிரிவு (Islamic Education Division)
            • சிறப்புக் கல்விப் பிரிவு (Special Education Division)
            • முழு உறைவிடம் மற்றும் சிறப்புப் பள்ளிகள் நிர்வாகப் பிரிவு (Fully Residential and Excellence Schools Management Division)
            • விளையாட்டு பிரிவு (Sports Division)
            • தனியார் கல்விப் பிரிவு (Private Education Division)
            • புறப்பாட நடவடிக்கை மற்றும் கலைகள் பிரிவு (Co-Curricular and Arts Division)
          • கல்வி துணை இயக்குனர் (தொழில்முறை கற்பித்தல் மேம்பாடு) (Teaching Professionalism Development)
            • ஆசிரியர் பயிற்சிப் பிரிவு (Teacher Training Division)
            • அமினுதீன் பாக்கி கழகம் (Aminuddin Baki Institute)
            • பள்ளிகள் ஆய்நர் (Inspectorate of Schools)
            • ஆசிரியர் கல்விக் கழகம் (Institute of Teacher Education)
          • கல்வி இயக்குனர் ஆணையத்தின் கீழ்
            • பதின்நிலை பிரிவு (Matriculation Division)
            • ஜொகூர் மாநிலக் கல்வி துறை (Johor State Education Department)
            • கெடா மாநிலக் கல்வித் துறை (Kedah State Education Department)
            • கிளாந்தான் மாநிலக் கல்வித் துறை (Kelantan State Education Department)
            • கோலாலம்பூர் கல்வி துறை (Kuala Lumpur FT Education Department)
            • லபுவான் கல்வித் துறை (Labuan FT Education Department)
            • மலாக்கா மாநிலக் கல்வித் துறை (Malacca State Education Department)
            • நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் துறை (NS Education Department)
            • பகாங் மாநிலக் கல்வித் துறை (Pahang State Education Department)
            • பினாங்கு மாநிலக் கல்வித் துறை (Penang State Education Department)
            • பேராக் மாநிலக் கல்வித் துறை (Perak State Education Department)
            • பெர்லிஸ் மாநிலக் கல்வித் துறை (Perlis State Education Department)
            • புத்ராஜாயா கல்வித் துறை (Putrajaya FT Education Department)
            • சபா மாநிலக் கல்வித் துறை (Sabah State Education Department)
            • சரவாக் மாநிலக் கல்வித் துறை (Sarawak State Education Department)
            • சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை (Selangor State Education Department)
            • திராங்கானு மாநிலக் கல்வித் துறை (Terengganu State Education Department)

கூட்டரசு நிறுவனங்கள்

[தொகு]

கல்வி சார்ந்த சட்டங்கள்

[தொகு]

மலேசியக் கல்வித் துறை அமைச்சு, கல்வி சார்ந்த பல முக்கிய சட்டங்கள்; மற்றும் கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பிலும் உள்ளது.

  • கல்வி நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 1976 [சட்டம் 174]
    • (Educational Institutions (Discipline) Act 1976 [Act 174])
  • டேவான் பகாசா டான் புசுதகா சட்டம் 1959 [சட்டம் 213]
    • (Dewan Bahasa dan Pustaka Act 1959 [Act 213])
  • மலேசியத் தேர்வுகள் மன்றச் சட்டம் 1980 [சட்டம் 225]
    • (Malaysian Examinations Council Act 1980 [Act 225])
  • கல்விச் சட்டம் 1996 [சட்டம் 550]
    • (Education Act 1996 [Act 550])

அரசியல் முக்கியத்துவம்

[தொகு]

வரலாற்று அடிப்படையில் துங்கு அப்துல் ரகுமான் அவர்களைத் தவிர மற்ற அனைத்து மலேசியப் பிரதமர்களும் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளனர். ஆகவே, மலேசிய கல்வி அமைச்சர் பதவி என்பது மலேசியப் பிரதமர் பதவிக்கு ஒரு படிக்கல்லாகக் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ministry of Education Malaysia" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  2. "Fadhlina Sidek Menteri Pendidikan". kosmo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2022.
  3. "Anwar Ibrahim appointed as Malaysia's 10th Prime Minister". Bernama. 24 November 2022. https://pru15.bernama.com/news-en.php?id=2141779. 

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கல்வி_அமைச்சு&oldid=4015838" இலிருந்து மீள்விக்கப்பட்டது