மலேசியத் தேர்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலேசியாவில் தேர்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசியத் தேர்தல்கள் (மலாய்: Pilihan Raya Umum Malaysia; ஆங்கிலம்: Elections in Malaysia) என்பது 1955-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டு வரை மலேசியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தல்கள்; மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களைக் குறிப்பிடுவதாகும்.[1]

மலேசியாவில் இரண்டு நிலைகளில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. முதலாவது மத்திய அரசு தேர்தல்; இது நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது மாநில அளவிலான தேர்தல்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்காக நடைபெறும் தேர்தல். மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவராகப் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.

நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன. முதலாவது அவை மலேசிய மக்களவை; மற்றோர் அவை மலேசிய மேலவை. இந்த அவைகளில் மலேசிய மக்களவை டேவான் ராக்யாட் என்று அழைக்கப்படுகிறது. மலேசிய மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப்படுகிறது.

மலேசிய மக்களவையின் 222 உறுப்பினர்களும் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அந்தக் கட்சி அரசாங்கத்தை அமைக்கின்றது. நாடாளுமன்றத்தின் மேலவைக்கு தேர்தல் நடைபெறுவது இல்லை. மேலவை உறுப்பினர்கள் மலேசிய அரசர் அவர்களால் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்[தொகு]

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். எனினும், அந்த ஐந்தாண்டுகள் முடிவடைவதற்கு முன்னாலேயே, நாடாளுமன்றத்தை பேரரசரின் அனுமதியுடன் பிரதமர் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இரண்டு மாதங்களில் மேற்கு மலேசியாவில் தேர்தல் நடத்தப்படவேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.[2]

மேற்கு மலேசியாவில் பெர்லிஸ். கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், பகாங், கிளாந்தான், திரங்கானு, கோலாலம்பூர், புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசங்கள் உள்ளன. கிழக்கு மலேசியாவில் (சபா, சரவாக்) மாநிலங்கள் உள்ளன. இதில் லபுவான் ஒரு கூட்டரசுப் பிரதேசமாகும்.[3]

மலாயா/மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் பட்டியல்[தொகு]

# ஆண்டு அரசு*** எதிரணி மொத்த இடங்கள் கலைப்பு வேட்பு தேர்தல்
இடங்கள் % இடங்கள் % வாக்கு இடங்கள் % வாக்கு % வாக்கு
மலாயா கூட்டரசின் சட்ட மேலவை
- 1955 51 98.1 79.6 1 1.9 20.4 52 1 சூன் 1955 15 சூன் 1955 27 சூலை 1955
மலேசிய நாடாளுமன்றம்
1* 1959 74 71.15 51.7 30 28.85 48.3 104 27 சூன் 1959 15 சூலை 1959 19 ஆகஸ்டு 1959
மலேசிய நாடாளுமன்றம்
2 1964** 89 55.97 58.5 70 44.02 41.4 159 2 மார்ச் 1964 21 மார்ச் 1969 25 ஏப்ரல் 1964
3 1969 95 65.97 49.3 49 34.03 50.7 144 20 மார்ச் 1969 5 ஏப்ரல் 1969 10 மே - 4 சூலை 1969
4 1974 135 87.66 60.7 19 12.34 39.3 154 31 July 1974 8 ஆகஸ்டு 1974 24 ஆகஸ்டு - 14 செப்டம்பர் 1974
5 1978 130 84.42 57.2 24 15.58 42.8 154 12 சூன் 1978 21 சூன் 1978 8 - 22 சூலை 1978
6 1982 132 85.71 60.5 22 14.29 39.5 154 29 மார்ச் 1982 7 ஏப்ரல் 1982 22 - 26 ஏப்ரல் 1982
7 1986 148 83.62 55.8 29 16.38 41.5 177 19 சூலை 1986 24 சூலை 1986 2 & 3 ஆகஸ்டு 1986
8 1990 127 70.55 53.4 53 29.45 46.6 180 4 அக்டோபர் 1990 11 அக்டோபர் 1990 20 & 21 அக்டோபர் 1990
9 1995 162 84.38 65.2 30 15.62 34.8 192 6 ஏப்ரல் 1995 15 ஏப்ரல் 1995 24 & 25 ஏப்ரல் 1995
10 1999 148 76.68 56.5 45 23.32 43.5 193 10 நவம்பர் 1999 20 நவம்பர் 1999 29 நவம்பர் 1999
11 2004 198 90.41 63.9 21 9.59 36.1 219 4 மார்ச் 2004 13 மார்ச் 2004 21 மார்ச் 2004
12 2008 140 63.06 50.27 82 36.94 46.75 222 13 பிப்ரவரி 2008 24 பிப்ரவரி 2008 8 மார்ச் 2008
13 2013 133 59.91 46.53 89 40.09 53.47 222 3 ஏப்ரல் 2013 20 ஏப்ரல் 2013 5 மே 2013
14 2018 125 56.31 49.86 97 43.69 50.14 222 7 ஏப்ரல் 2018 28 ஏப்ரல் 2018 9 மே 2018
15 2022 148 66.7 59.0 74 33.3 41.0 222 10 அக்டோபர் 2022 5 நவம்பர் 2022 19 நவம்பர் 2022
* 1959 கூட்டாட்சித் தேர்தல்கள் மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்ற பிறகு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் ஆகும்.
** சிங்கப்பூர், சபா மற்றும் சரவாக் ஆகியவை 1963-இல் மலாயாவுடன் இணைந்தன. ஆனால், 1964 கூட்டாட்சித் தேர்தலில் இடைக்கால ஏற்பாட்டின் கீழ் பங்கேற்கவில்லை. சிங்கப்பூர் 1965-இல் மலேசியாவை விட்டு வெளியேறியது.
*** "அரசு" என்பது 1964-இல் மலேசிய கூட்டணி கட்சி; கூட்டணி மற்றும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி; 1969-இல்; பாரிசான் நேசனல்; 1974 முதல் 2013 வரை; பாக்காத்தான் அரப்பான்; 2018-2022-இல்; பாக்காத்தான் அரப்பான், பாரிசான் நேசனல், சரவாக் கட்சிகள் கூட்டணி, சபா மக்கள் கூட்டணி, மற்றும் வாரிசான்
Source: Arah Aliran Malaysia: Penilaian Pilihan Raya (PDF)

மேற்கோள்கள்[தொகு]

  1. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. ISBN 967-969-331-7.
  2. Junaidi Awang Besar; Mohd Fuad Mat Jali; Rosmadi Fauzi; Amer Saifude Ghazali (18 October 2012). "Influence of gerrymandering on voting patterns in the Constituency Legislative Assembly Area of Kajang and Bangi, Malaysia". Geografia: International Journal of Development, Society and Environment. http://www.ukm.my/geografia/images/upload/1.abstrak-geografia-okt%20%202012-junaidi-ukm-bm-kat1.pdf. பார்த்த நாள்: 22 May 2013. 
  3. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". The New Straits Times. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியத்_தேர்தல்கள்&oldid=3905194" இலிருந்து மீள்விக்கப்பட்டது