உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவின் நீதித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவின் நீதித்துறை (ஆங்கிலம்: Judiciary of Malaysia; மலாய்: Sistem Kehakiman Malaysia;) என்பது மலேசியாவில் நீதித்துறைச் செயல்பாட்டின் அமைப்பு முறையாகும். மலேசியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பு முறைமையைப் பெரும்பாலும் மையப் படுத்தப்படுத்தி 'மலேசியாவின் நீதித்துறை இயங்குகிறது.[1]

இருப்பினும் மலேசிய நீதித்துறையில் ஆங்கில பொதுச் சட்டம் (English Common Law) மற்றும் இஸ்லாமியச் சட்டம் (Islamic Jurisprudence) ஆகிய இரு சட்டங்களின் தாக்கங்களும் மிகுதியாய் உள்ளன.

நீதித் துறை அமைப்பு

[தொகு]
சுல்தான் அப்துல் சமாட் கட்டடம்; மெர்டேகா சதுக்கத்திற்கு அருகில் உள்ளது. இந்தக் கட்டடம் முன்பு நாட்டின் உயர் நீதிமன்றங்களைக் கொண்டு இருந்தது. இன்று அந்த நீதிமன்றங்கள் புத்ராஜெயாவிற்கு மாற்றப்பட்டு உள்ளன

மலேசியாவின் நீதித் துறையில், பொதுவாக இரண்டு வகையான நீதிப் பிரிவுகள் உள்ளன. கிரிமினல் விசாரணை (Criminal Trial) எனும் குற்ற விசாரணை. அடுத்தது சிவில் விசாரணை (Civil Trial) எனும் உரிமையியல் நீதிமன்ற விசாரணை என இருவகை விசாரணைகள்.[2]

மலேசிய நீதிமன்றங்களின் படிநிலை அமைப்பு

[தொகு]

மாஜிஸ்திரேட் குற்றவியல் நீதிமன்றம் (Magistrates' Court)

குற்றவியல் அமர்வு நீதிமன்றம் (Sessions Court)

உயர் நீதிமன்றம் (High Court)

மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal)

உச்ச நீதிமன்றம் (Federal Court)

நீதிமன்றங்களின் அதிகார வரம்பு

[தொகு]

சிவில் அல்லது கிரிமினல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு துணை மலேசிய நீதிமன்றங்கள் சட்டம் 1948 (Subordinate Courts Act 1948) மற்றும் மலேசிய நீதிமன்றங்கள் நீதித்துறை சட்டம் 1964 (Courts of Judicature Act 1964) ஆகியவற்றுக்குள் அடங்கி உள்ளது.[3]

மலேசிய அரசியலமைப்பின் 121-ஆவது பிரிவு, மலாயாவில் உள்ள உயர்நீதிமன்றம் மற்றும் சபா மற்றும் சரவாக்கில் உள்ள உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டு உயர் நீதிமன்றங்களையும் ஓர் ஒருங்கிணைந்த அதிகார வரம்பிற்குள் கொண்டு வருகிறது. இதனால், தீபகற்ப மலேசியாவிற்கும்; கிழக்கு மலேசியாவிற்கும் இரண்டு தனித்தனி உள்ளூர் அதிகார வரம்புகள் உள்ளன.

நீதித்துறைப் பதவிகள்

[தொகு]
பழைய உயர்நீதிமன்றக் கட்டடம், கோலாலம்பூர்
நீதி அரண்மனை, புத்ராஜெயா

மலேசியாவின் நீதித்துறையில் மிக உயர்ந்த பதவி மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (Chief Justice of the Federal Court of Malaysia) ஆகும். மலேசியாவின் தலைமை நீதிபதி (Chief Justice of Malaysia) என்றும் அழைக்கப் படுகிறது.

இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் (President of the Court of Appeal); மலாயாவின் தலைமை நீதிபதி (Chief Judge of Malaya); மற்றும் தலைமை நீதிபதி சபா சரவாக் (Chief Judge of Sabah and Sarawak).

நீதிமன்றங்களின் படிநிலை

[தொகு]

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் பெடரல் நீதிமன்றம் ஆகியவை நீதிமன்றங்களில் உயர்வானவையாக கருதப் படுகின்றன.

அதே சமயத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள்; அமர்வு நீதிமன்றங்கள்; ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் அடுத்த நிலை துணை நீதிமன்றங்களாக வகைப் படுத்தப் படுகின்றன.

தற்போதைய நீதிபதிகள்

[தொகு]

மலேசிய உச்ச நீதிமன்றம் (Chief Justice of the Federal Court of Malaysia) தற்போதைய தலைமை நீதிபதி துன் துங்கு மைமுன் துவான் மாட்.

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (President of the Court of Appeal) தற்போதைய தலைவர் டத்தோ ரோகானா யூசுப்.

மலாயாவின் தலைமை நீதிபதி (Chief Judge of Malaya) டான் ஸ்ரீ டத்தோஸ்ரீ அசாகார் முகமது.

சபா மற்றும் சரவாக்கின் தலைமை நீதிபதி (Chief Judge of Sabah and Sarawak) டத்தோ அபாங் இசுகந்தர் அபாங் அசிம்.

2003-ஆம் ஆண்டு முதல், மலேசியாவின் இரண்டு முதன்மை உயர் நீதிமன்றங்களான மலேசிய உச்ச நீதிமன்றமும் மற்றும் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றமும்; புத்ராஜாயாவில் உள்ள மலேசிய நீதி அரண்மனையில் (Palace of Justice) அமைந்துள்ளன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A BRIEF HISTORY OF THE MALAYSIAN COURT SYSTEM - Thomas Philip Advocates and Solicitors, Kuala Lumpur, Malaysia". www.thomasphilip.com.my. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
  2. "The Federal Court is the supreme court; it is the final court of appeal, and it has exclusive jurisdiction in constitutional matters and in issues arising between states or between the federal government and states". Judicial System of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
  3. "Malaysian Court System – The hierarchy of courts of Malaysia starts with the Magistrates Court as the first level followed by the Sessions Court, High Court, Court of Appeal and the Federal Court of Malaysia". www.globalbersih.org. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
  4. "History of Building – CACJ" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியாவின்_நீதித்துறை&oldid=3967837" இலிருந்து மீள்விக்கப்பட்டது