உள்ளடக்கத்துக்குச் செல்

நஜீப் இரண்டாம் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நஜீப் இரண்டாம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 19-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Najib Kedua; ஆங்கிலம்: Second Najib Cabinet; சீனம்: 第二届纳吉内阁); என்பது மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான மலேசியாவின் 19-ஆவது அமைச்சரவை ஆகும்.

மலேசியாவின் 19-ஆவது நாடாளுமன்ற அமைச்சரவையைப் பிரதமர் நஜீப் ரசாக், 2013 மே 15 மாலை 5.15-க்கு அறிவித்தார். 2013 மே 5-இல் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

இருப்பினும், எதிர்க் கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் ராக்யாட், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் ஏழு இடங்களைக் கூடுதலாகக் கைப்பற்றியது. மலேசியப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 133 இடங்களையும், அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் 89 இடங்களையும் கைப்பற்றின.

பொது

[தொகு]

இந்த அமைச்சரவையில் மலேசிய சீனர் சங்கத்தைச் சார்ந்த எவரும் பிரதிநிதிக்கப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் மிக மோசமான தோல்வியைக் கண்டது. அதனால், மலேசியப் பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி, மேலும் குறைவான இடங்களைப் பெறுமானால், மலேசிய சீனர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் எவரும் அரசாங்கப் பதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று, தேர்தலுக்கு முன்னரே அக்கட்சியின் தலைமைத்துவம் அறிவிப்பு செய்து இருந்தது.

இந்தப் பொதுத் தேர்தலிலும் அக்கட்சி மிக மோசமான தோல்வியைக் கண்டது. அதனால், நடுவண் அரசாங்கத்திலும் மாநில அரசாங்கத்திலும், மலேசிய சீனர்கள் எவரும் அரசுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒழுங்கு நடவடிக்கை

[தொகு]

ஜொகூர் மாநில மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் ஜொகூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மலேசிய சீனர் சங்கத்தின் உச்சமன்றக்குழு அறிவித்துள்ளது.

சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதலான அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய முன்னணிக்கு அந்த மாநிலங்களின் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியதால், அந்த மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலான அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளன.

மலேசிய இந்திய அமைச்சர்கள்

[தொகு]

மலேசியாவின் புது அமைச்சரவையில் இந்தியர்கள் இருவர் முழு அமைச்சர்களாகவும், நால்வர் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள்:

மலேசிய இந்திய துணை அமைச்சர்கள்

[தொகு]

மலேசிய அமைச்சரவை முழுப் பட்டியல்

[தொகு]
அமைச்சு அமைச்சர் கட்சி
மலேசியப் பிரதமர்
மலேசியத் துணைப் பிரதமர்
அமைச்சரவை செயலாளர்
நஜீப் துன் ரசாக்
முகைதீன் யாசின்
டாக்டர் அலி ஹம்சா
அம்னோ
அம்னோ
பிரதமர் துறை அமைச்சர்கள்







    பிரதமர் துறை துணை அமைச்சர்கள்
ஜாமில் கிர் பகாரோம்
செனட்டர் அப்துல் வாகிட் ஒமார்[1]
செனட்டர் இட்ரிஸ் ஜாலா
ஜோசப் குருப்
ஷகிடான் காசிம்
நான்சி சுக்ரி
ஜோசப் எந்துலு பெலாவுன்
செனட்டர் பால் லோ கெங்[2]
    ரசாலி இப்ராஹிம்
    செனட்டர் பி. வேதமூர்த்தி
அம்னோ
சுயேட்சை
சுயேட்சை
ச.ஐ.ம.கட்சி
அம்னோ
ஐ.பெ.பூ.கட்சி
ச.ம.கட்சி
சுயேட்சை
அம்னோ
சுயேட்சை
நிதி அமைச்சர்
நிதி அமைச்சர் II
    துணை நிதி அமைச்சர்
நஜீப் துன் ரசாக்
அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா
    அகமட் மாஸ்லான்
அம்னோ
அம்னோ
அம்னோ
கல்வி அமைச்சர் & உயர்க்கல்வி அமைச்சர் I
கல்வி அமைச்சர் & உயர்க்கல்வி அமைச்சர் II
    துணைக் கல்வி அமைச்சர் & துணை உயர்க்கல்வி அமைச்சர் I
    துணைக் கல்வி அமைச்சர் & துணை உயர்க்கல்வி அமைச்சர் II
முகைடின் யாசின்
இட்ரிஸ் ஜூசோ
    மேரி யாப் காயின் சிங்
    பி. கமலநாதன்
அம்னோ
அம்னோ
ஐக்கிய சபா கட்சி
ம.இ.கா
போக்குவரத்து அமைச்சர்
    துணைப் போக்குவரத்து அமைச்சர்
ஹிஷாமுடின் உசேன் (இடைக்கால அமைச்சர்)[3]
    அப்துல் அசீஸ் காப்ராவி
அம்னோ
அம்னோ
பயிர்த்தொழில், மூலப்பொருட்கள் அமைச்சர்
    துணைப் பயிர்த்தொழில், மூலப்பொருட்கள் அமைச்சர்
டகளஸ் உங்கா எம்பாஸ்
    நோரியா கான்சோன்
ஐ.பா.பூ.கட்சி
அம்னோ
உள்துறை அமைச்சர்
    துணை உள்துறை அமைச்சர்
அகமட் ஷாகிட் ஹமிடி
    வான் சுனாய்டி துங்கு ஜாபார்
அம்னோ
ஐ.பா.பூ.கட்சி
தொடர்புதுறை பல்லூடக அமைச்சர்
    துணைத் தொடர்புதுறை பல்லூடக அமைச்சர்
அகமட் சாப்ரி சிக்
    ஜைலானி ஜொகாரி
அம்னோ
அம்னோ
சக்தி, பச்சைத் தொழினுட்பம், நீர்வள அமைச்சர்
    துணைச் சக்தி, பச்சைத் தொழினுட்பம், நீர்வள அமைச்சர்
டாக்டர் மெக்சிமஸ் ஜோனிட்டி ஓங்கிலி
    மாட்சிர் காலிட்
ஐக்கிய சபா கட்சி
அம்னோ
கிராமப்புற வட்டார அமைச்சர்
    துணைக் கிராமப்புற வட்டார அமைச்சர்
ஷாபி அப்டால்
    அலெக்சாந்தர் நந்தா லிங்கி
அம்னோ
ஐ.பா.பூ.கட்சி
அனைத்துலக வாணிகத் தொழில்துறை அமைச்சர்
    துணை அனைத்துலக வாணிகத் தொழில்துறை அமைச்சர்
முஸ்தாபா முகமட்
    ஹமீம் சாமுரி
அம்னோ
அம்னோ
அறிவியல் தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சர்
    துணை அறிவியல் தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சர்
டாக்டர் எவோன் எபின்
    டாக்டர் அபு பாக்கார் முகமட் டியா
ஐ.பா.க.மூ.அமைப்பு
அம்னோ
இயற்கை வளம் சுற்றுச் சூழல் அமைச்சர்
    துணை இயற்கை வளம் சுற்றுச் சூழல் அமைச்சர்
டத்தோ ஸ்ரீ கோவிந்தசாமி பழனிவேல்
    டாக்டர் ஜேம்ஸ் டாவோஸ் மாமிட்
ம.இ.கா
ஐ.பா.பூ.கட்சி
சுற்றுலா கலாசார அமைச்சர்
    துணை சுற்றுலா கலாசார அமைச்சர்
முகமட் நாஸ்ரி அப்துல் அசீஸ்
    ஜோசப் சாலாங் காண்டும்
அம்னோ
ச.ம.கட்சி
விவசாயம் விவசாயச்சார் தொழில்துறை அமைச்சர்
    துணை விவசாயம் விவசாயச்சார் தொழில்துறை அமைச்சர்
இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
    தாஜுடின் அப்துல் டஹ்மான்
அம்னோ
அம்னோ
தற்காப்பு அமைச்சர்
    துணைத் தற்காப்பு அமைச்சர்
இசாமுடின் உசேன்
    அப்துல் ரஹீம் பாக்ரி
அம்னோ
அம்னோ
பொதுப்பணித் துறை அமைச்சர்
    துணை பொதுப்பணித் துறை அமைச்சர்
ஃபாட்சிலா யூசுப்
    ரோஸ்னா அப்துல் ரசீட் சிர்லீன்
ஐ.பா.பூ.கட்சி
அம்னோ
சுகாதார அமைச்சர்
    துணைச் சுகாதார அமைச்சர்
டத்தோ டாக்டர் ச. சுப்பிரமணியம்
    ஹில்மி யாஹ்யா
ம.இ.கா
அம்னோ
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்
    துணை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்
கைரி ஜமாலுடின்
    மு. சரவணன்
அம்னோ
ம.இ.கா
மனிதவள அமைச்சர்
    துணை மனிதவள அமைச்சர்
ரிச்சர்ட் ரியோட் ஜாயிம்
    இஸ்மாயில் முத்தாலிப்
ச.ஐ.ம.கட்சி
அம்னோ
உள்நாட்டு வாணிப கூட்டுறவு பயனீட்டுத் துறை அமைச்சர்
    துணை உள்நாட்டு வாணிப கூட்டுறவு பயனீட்டுத் துறை அமைச்சர்
அசான் மாலிக்
    அகமட் பாசா ஹனிபா
அம்னோ
அம்னோ
வீடமைப்பு உள்ளாட்சி நகர்ப்புற நலத் துறை அமைச்சர்
    துணை வீடமைப்பு உள்ளாட்சி நகர்ப்புற நலத் துறை அமைச்சர்
அப்துல் ரஹ்மான் டாலான்
    ஹாலிமா சாதிக்
அம்னோ
அம்னோ
மகளிர் குடும்ப சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சர்
    துணை மகளிர் குடும்ப சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சர்
ரொஹானி அப்துல் காரிம்
    அஷீசா முகமட் டின்
ஐ.பா.பூ.கட்சி
அம்னோ
வெளியுறவுத்துறை அமைச்சர்
    துணை வெளியுறவுத்துறை அமைச்சர்
அனிபா அமான்
    ஹம்சா ஜைனுடின்
அம்னோ
அம்னோ
கூட்டரசு பிரதேச அமைச்சர்
    துணைக் கூட்டரசு பிரதேச அமைச்சர்
துங்கு அட்னான் துங்கு மான்சுர்
    செனட்டர் டாக்டர் லோகா பாலா மோகன்
அம்னோ
சுயேட்சை

மேற்கோள்கள்

[தொகு]
  1. செனட்டர் - 5 ஜூன் 2013 தொடக்கம்
  2. The sole ethnic Chinese representative in the cabinet as Malaysian Chinese Association and Parti Gerakan Rakyat Malaysia|GERAKAN had decided not to take up any cabinet positions due to the poor performance in the Malaysian_general_election,_2013.
  3. The post is on hold for Malaysian Chinese Association|MCA until the party can reverse its decision not to take up any cabinet posts.

மேலும் காண்க

[தொகு]