வேதமூர்த்தி பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேதமூர்த்தி பொன்னுசாமி
Waytha Moorthy Ponnusamy
தலைவர்
இண்ட்ராப்
தனிநபர் தகவல்
பிறப்பு 16 சூலை 1966
தேசியம் மலேசியர்
அரசியல் கட்சி இண்ட்ராப்

வேதமூர்த்தி பொன்னுசாமி (Waytha Moorthy Ponnusamy, பிறப்பு: 16 சூலை 1966), ஒரு மலேசிய வழக்குரைஞர் ஆவார். இவர் மனித உரிமைகள் ஆர்வலர். தற்போது இண்ட்ராப் குழுவினருடன் இணைந்து, மலேசிய இந்துக்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.

இளமைப் பருவம்[தொகு]

மலேசியாவுக்கு குடிபெயர்ந்த பொன்னுசாமி அருணாச்சலம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது வழக்கில், தன் கல்விக்காக பெற்றோர் தங்கள் வீட்டினை விற்றதாகக் கூறியியுள்ளார். இவர் இந்தியர் என்பதால் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.