அன்வர் இப்ராகீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்வார் இப்ராகிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்வார் இப்ராகிம்
Anwar Ibrahim
AISPEAK.jpg
பெர்மாத்தாங் பாவ் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1982-1999
ஆகஸ்ட் 28 2008 - இன்று வரை
முன்னவர் சபீடி அலி (1வது)
வான் இஸ்மாயில் (2வது)
பின்வந்தவர் வான் அசிசா வான் இஸ்மாயில் (1வது)
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகஸ்ட் 26, 2008
முன்னவர் வான் அசிசா வான் இஸ்மாயில்
மலேசியாவின் 7வது துணைப் பிரதமர்
பதவியில்
டிசம்பர் 1, 1993 – செப்டம்பர் 2, 1998
முன்னவர் கபார் பாபா
பின்வந்தவர் அப்துல்லா அகமது படாவி
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகஸ்ட் 10, 1947 (1947-08-10) (அகவை 68)
பினாங்கு
அரசியல் கட்சி மக்கள் நீதிக் கட்சிபாக்காத்தான் ராக்யாட் (2006–இன்று வரை

அம்னோபாரிசான் நேசனல் (1982–1998)

வாழ்க்கை துணைவர்(கள்) வான் அசிசா வான் இஸ்மாயில்
பணி மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
சமயம் சுன்னி இசுலாம்

அன்வார் பின் இப்ராகிம் 1947 ஆகஸ்ட் 10 பிறந்த ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். [1] இவர் மலேசிய முன்னாள் துணைப் பிரதமராகவும் தற்பொழுது மலேசியாவில் மூன்று மாநிலங்களை ஆளும் பாக்காத்தான் ராக்யாட்டின் தலைவர் மற்றும் மலேசிய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பொறுப்பு வகிக்கிறார். இவர் மக்கள் நீதிக் கட்சியின் ஆலோசகரும் மலேசிய சிலாங்கூர் மாநில அரசாங்கப் பொருளாதார ஆலோசகரும் கூட.

அன்வார் என்று அழைக்கப்படும் இவர் மலேசியத் தமிழர் மத்தியில் மிக பிரபலம் ஆன அரசியல்வாதி ஆவார்.அன்வார் 1993 ல் இருந்து 1998 வரை மலேசிய துணைப் பிரதமராகப் பணியாற்றினார். எனினும் 1998ல் அவரைப் பிரதமர் மகாதீர் பின் முகமது பதவியில் இருந்து நீக்கி, ஊழல் மற்றும் ஓரினப் புணர்ச்சி வழக்கில் சிறையில் அடைத்தார். இவரைச் சிறையில் அடைத்த போது கோலாலம்பூரில் 1998ல் கலவரம் வெடித்தது. பின் 2008 ல் விடுதலை ஆனார்.

ஆரம்ப ஆண்டுகள் (1968-1982)[தொகு]

1968 ஆம் ஆண்டு முதல் 1971 மலாயாப் பல்கலைக்கழக மாணவர் ஆன அன்வார் முஸ்லீம் தேசிய மாணவர் சங்கத் தலைவராகவும், மலாயாப் பல்கலைக்கழக மலாய் மொழி சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். 1971 ஆம் ஆண்டில், அவர் ஆபீம் உறுப்பினராக ஆனார். 1974 ஆம் ஆண்டில், அன்வார் கிராமப்புற வறுமை மற்றும் பட்டினி ஆகியவற்றுக்கு எதிராக மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரசாங்க பணியில் (1982-1998)[தொகு]

1982 ஆம் ஆண்டில் ஆபீமில் இருந்து விலகி அம்னோவில் இனைந்தார். 1983இல் கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும், பின் 1984 இல் விவசாய அமைச்சராகவும், 1986 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகவும் பொறுப்புகள் வகித்தார். அவர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், யுனெசுகோவின் பொது மாநாட்டில் கல்வி அமைச்சர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 1991 ஆம் ஆண்டில்,. நிதி அமைச்சர் பதவி வகித்த காலத்தில், அவரது தாக்கம் உடனடியாக இருந்தது; மலேசியா துரித பொருளாதார வளர்ச்சி பெற்றது. 1993 ஆம் ஆண்டில் அப்போதய அம்ணொ துணைத்தலைவராக இருந்த கபார் பாபாவைத் தோற்கடித்தார். வெற்றி பெற்ற அவர் பிறகு துணைப் பிரதமராக ஆனார். முன்பு மகாதீரின் தீவிர ஆதரவாளரான அன்வார் பின் எதிரியானார். மகாதீரின் சர்வதிகார போக்கு, குடும்ப அரசியல், ஊழல், நிதி மோசடி இதற்கு முதன்மைக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.

பதவி பரிப்பு மற்றும் கைது[தொகு]

1998 ஆம் ஆண்டின் அம்னோ பொது சபையில் அன்வார் மகாதீர் உறவு முறின்தது. மகாதீர் பின்னர் ஆவரை அம்னோவிளிருந்து நிக்கினார். துனைப் பிரதமர் பதவியும் பறிபோனது. ஊழல் மற்றும் ஓறின புணர்ச்சி வழகிள் செப்டம்பர் 1998 20 அன்று கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த போது அப்போதய மலேசிய காவல் துரை தலைவர் ரஹீம் நூர்ரால் தாக்கப்பட்டார். அன்வாருக்கு 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் உயர் நீதிமண்றம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இறுதியாக 2 செப்டம்பர் 2004 இருந்து விடுதலை செய்யப்பட்டார்.[2]

இடைக்கால ஆண்டுகள் (1998-2008)[தொகு]

சீர்திருத்தம் (மலேசியா) (Reformasi movement) 1998 ல் அன்வார் இப்ராகிம் துணை பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் மூலம் தொடங்கப்பட்டது. இது நீண்டகால கூட்டணி தேசிய முன்னணி (மலேசியா) அரசுக்கு எதிராக பல வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியது. அன்வார் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வரை தொடர்ந்தது.1999ஆம் ஆண்டு மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராஹிம் ஊழல், ஒழுக்கக் கேடு காரணமாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் பெற்றார்.அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், மக்கள் நீதிக் கட்சியைத் தோற்றுவித்தார்.[3] அந்த இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய அப்போதைய அரசாங்கம் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.ஒரு நாட்டின் துணைப்பிரதமராக இருந்த ஒருவர், அரசியல் காரணங்களுக்காகச் சிறைவாசம் அனுபவிப்பதை விரும்பாத பொதுமக்களில் பலர், கணிசமான அளவிற்கு மக்கள் நீதிக் கட்சியில் சேர்ந்தனர். 2004ஆம் ஆண்டு, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அந்தத் தடை 14 ஏப்ரல் 2008இல் நீக்கப்பட்டது. அதற்குள் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் நடந்து முடிந்தது. 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்தைப் பிடித்த கெடிலான் எனும்மக்கள் நீதிக் கட்சி, 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்), மக்கள் நீதிக் கட்சி (பி.கே.ஆர்), ஜனநாயக செயல் கட்சி (ஜ.செ.க) ஆகியவை உறுப்புக் கட்சிகளாக பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் 81 இடங்களைப் பிடித்தது. [4] அது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். அந்தக் கட்டத்தில் அவருடைய மனைவி வான் அசீசா வான் இஸ்மாயில், மலேசிய நாடாளுமன்றத்தின் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். அன்வார் இப்ராஹிம் விடுதலையானதும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வான் அசீசா வான் இஸ்மாயில், அதாவது அன்வார் இப்ராஹிமின் மனைவி, தன் நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்தார்.அதன் விளைவாக, பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் 2008 ஆகஸ்டு 26இல் ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அன்வார் இப்ராஹிமிற்கு 31,195 வாக்குகள் கிடைத்தன. அன்வார் இப்ராஹிம் 15,671 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி,பாரிசான் நேசனல் வேட்பாளர் அரிப் ஷா ஒமார் ஷாவிற்கு 15,524 வாக்குகளும், சுயேட்சையாகப் போட்டியிட்டவருக்கு 92 வாக்குகளும் கிடைத்தன. சுயேட்சை வேட்பாளர், தன் வைப்புத் தொகையையும் இழந்தார்.[5]

2008 ஓரினச்சேர்க்கை வழக்கு[தொகு]

ஜூன் 29, 2008ல் இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கூறி வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கு அரசியற் காரணங்களால், பிரதமர் மற்றும்அவரது மனைவியின் தூண்டுதலில் பேரில் புனையப்பட்டுள்ளது என்று எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா கூறிவருகிறார். எனினும் இதனை காவல்துறை மறுத்துள்ளது. தக்க ஆதாரங்களுடனேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது [6][7]இதன் தீர்ப்பு சனவரி 9, 2012 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென்றும், அவருக்கு எதிரான டிஎன்ஏ சான்று நம்பக்கூடியதாக இல்லை என்று கூறி விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மலேசியப் பொதுத் தேர்தல், 2013[தொகு]

மலேசிய அரசியல் வரலாற்றில் பாரிசான் நேசனல் எனும் தேசிய முன்னணிக் கூட்டணியே, ஆளும் கட்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று வந்துள்ளது. பாரிசான் நேசனல் 14 அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பைக் கொண்ட ஒரு கூட்டணியாகும். இதன் தலையாய பங்காளிக் கட்சிகளாக அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்திய காங்கிரசு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் மலேசிய இஸ்லாமிய கட்சி, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி ஆகியவை உறுப்புக் கட்சிகளாக உள்ளன.அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.

2014 ஓரினச்சேர்க்கை வழக்கு[தொகு]

2008 ஓரினச்சேர்க்கை வழக்கில் விடுதலை பெற்றிருந்தாலும் தற்பொழுது இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் அன்வார் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கூறி உச்ச நீதிமன்றதில் வழக்கு நடைபெறுகிறது. [8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_இப்ராகீம்&oldid=1806514" இருந்து மீள்விக்கப்பட்டது