உள்ளடக்கத்துக்குச் செல்

இசாமுடின் உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசாமுடின் உசேன்
Hishammuddin Hussein
هشام الدين حسين
2014-ஆம் ஆண்டில் இசாமுடின் உசேன்
மலேசிய மூத்த அமைச்சர்
பதவியில்
30 ஆகத்து 2021 – 24 நவம்பர் 2022
பிரதமர்இசுமாயில் சப்ரி யாகோப்
முன்னையவர்இசாமுடின் உசேன்
பின்னவர்பதவி அகற்றப்பட்டது
பதவியில்
7 சூலை 2021 – 16 ஆகத்து 2021
பிரதமர்முகிதீன் யாசின்
முன்னையவர்இசுமாயில் சப்ரி யாகோப்
பின்னவர்இசாமுடின் உசேன்
மலேசிய தற்காப்பு அமைச்சர்
பதவியில்
30 ஆகத்து 2021 – 24 நவம்பர் 2022
பதவியில்
16 மே 2013 – 10 மே 2018
மலேசிய வெளியுறவு அமைச்சர்
பதவியில்
10 மார்ச் 2020 – 16 ஆகத்து 2021
மலேசியப் பிரதமர் துறை அமைச்சர்
பதவியில்
12 ஏப்ரல் 2017 – 10 மே 2018
மலேசிய போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
16 மே 2013 – 24 சூன் 2014
மலேசிய உள்துறை அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 2009 – 20 ஏப்ரல் 2013
மலேசிய கல்வி அமைச்சர்
பதவியில்
27 மார்ச் 2004 – 10 ஏப்ரல் 2009
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர்
பதவியில்
15 திசம்பர் 1999 – 26 மார்ச் 2004
மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சர்
பதவியில்
12 நவம்பர் 1996 – 14 திசம்பர் 1999
பாரிசான் நேசனல் பொருளாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 அக்டோபர் 2020
அம்னோ துணைத்தலைவர்
பதவியில்
12 மே 2018 – 30 சூன் 2018
அம்னோ துணைத்தலைவர்
பதவியில்
26 மார்ச் 2009 – 30 சூன் 2018
அம்னோ 12-ஆவது இளைஞர் பகுதி தலைவர் துணைத்தலைவர்
பதவியில்
1999–2009
செம்புரோங் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
21 மார்ச் 2004
பெரும்பான்மை16,978 (2004)
11,570 (2008)
10,631 (2013]])
6,662 (2018)
10,880 (2022)
தெங்காரா மக்களவைத் தொகுதி
பதவியில்
25 ஏப்ரல் 1995 – 21 மார்ச் 2004
பெரும்பான்மை24,518 (1995)
20,817 (1999)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இசாமுடின் உசேன்

5 ஆகத்து 1961 (1961-08-05) (அகவை 63)
ஜொகூர் பாரு, ஜொகூர், மலாயா கூட்டமைப்பு
(இப்போது மலேசியா)
துணைவர்
துங்கு மார்சில்லா துங்கு அப்துல்லா (தி. 1987)
உறவுகள்ஓன் ஜாபார் (தாத்தா)

அப்துல் ரசாக் உசேன் (மாமா)
நஜீப் ரசாக் (உறவினர்)
பிள்ளைகள்4
பெற்றோர்உசேன் ஓன் (தந்தையார்)
சுகாய்லா நோவா (தாயார்)
வாழிடம்(s)அம்பாங், கோலாலம்பூர்
கல்விமலாய் கல்லூரி கோலாகங்சார்
செயின்ட் ஜான்சு கழகம்
செல்டென்காம் கல்லூரி
முன்னாள் கல்லூரிAberystwyth University (Bachelor of Laws)
London School of Economics (Master of Laws)
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

இசாமுடின் உசேன் (மலாய்: Datuk Seri Panglima Hishammuddin bin Tun Hussein; ஜாவி: هشام الدين بن حسين; ஆங்கிலம்: Hishammuddin Hussein; சீனம்: 希山慕丁·胡先) (பிறப்பு: 5 ஆகத்து 1961) என்பவர் 2021 முதல் 2022 வரை மலேசியாவின் மூத்த அமைச்சர் (Senior Minister of Malaysia); மற்றும் மலேசிய தற்காப்பு அமைச்சராக (Minister of Defence Malaysia) பணியாற்றிய ஒரு மலேசிய அரசியல்வாதி; மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆவார்.[1]

அம்னோ (UMNO), பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான அம்னோ (United Malays National Organisation) கட்சியின் சார்பில் 1995 முதல் 2004 வரை தெங்காரா (Tenggara) தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகவும்; 2004-ஆம் ஆண்டு முதல் செம்புரோங் (Sembrong) தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகவும் சேவை செய்தவர்.

பொது

[தொகு]

இசாமுடின் உசேன், மலேசியா, ஜொகூர் பாரு நகரில் பிறந்தார். தந்தையாரின் பெயர் உசைன் ஓன். தாயாரின் பெயர் சுகைலா நோவா. இசாமுடின் உசேனின் தந்தையார் மலேசியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.

இவர் மலேசியாவில் ஒரு முக்கிய மலாய்த் தலைவரும்; மற்றும் அம்னோவின் நிறுவனருமான ஓன் ஜாபார் (Onn Jaafar) என்பவரின் பேரன் ஆவார். ஓன் ஜாபாரின் தாயார் சர்க்காசியன் (Circassian) வம்சாவளியைச் சேர்ந்தவர்; மற்றும் உதுமானியப் பேரரசு எனும் ஒட்டோமான் பேரரசில் (Ottoman Empire) பிறந்தவர்.[2]

இவர் கோலாகங்சார் மலாய் கல்லூரி (Malay College Kuala Kangsar), கோலாலம்பூர் செயின்ட் ஜான்சு பள்ளி (St. John's Institution), ஐக்கிய இராச்சியத்தின் ஆலிசு இசுமித் பள்ளி (Alice Smith School) மற்றும் செல்டென்காம் கல்லூரியில் (Cheltenham College) பயின்றார். அவர் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு முன்பு அபெரிசுட்வித் பல்கலைக்கழகத்தில் (Aberystwyth University) சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் மற்றும் இலண்டன் பொருளியல் பள்ளியில் (London School of Economics) முதுகலைப் பட்டம் பெற்றார்.[3][4]

பல்வேறு அமைச்சர் பதவிகள்

[தொகு]

இங்கிலாந்தில் இருந்து தாயகம் திரும்பி வந்ததும், இசாமுடின் உசேன் அம்னோவில் சேர்ந்தார். முதன்முதலில் 1995-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தெங்காரா (Tenggara) தொகுதியில் வெற்றி பெற்று மலேசிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சில் (Parliamentary Secretary for International Trade and Industry) நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1999-இல் மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக (Minister for Youth and Sport) பதவி உயர்வு பெற்றார். 2004-இல், முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி (Abdullah Badawi) தலைமையிலான பாரிசான் நேசனல் அரசாங்கம் ஆட்சி அமைத்தது. அப்போது அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராக இருந்த இசாமுடின் உசேன் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1999-இல், அவர் அம்னோவின் இளைஞர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009-இல் அதன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி தோற்கும் வரையில் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதி

[தொகு]

இருப்பினும் 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி தோல்வி அடைந்தாலும், இசாமுடின் உசேன் தன்னுடைய செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதியை (Sembrong) தக்க வைத்துக் கொண்டார்.

மலேசியாவின் 2020-ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடியின் தொடக்கத்தில் (2020–2022 Malaysian Political Crisis), முகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணியின் கீழ் வெளியுறவு அமைச்சராக இசாமுடின் உசேன் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பினார்.

மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022

[தொகு]

ஜூலை 2021 இல் முகிதீன் யாசின், மோசமான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட இஸ்மாயில் சப்ரி யாகோப்பிற்கு (Ismail Sabri Yaakob) பதிலாக இசாமுடின் உசேனை மூத்த அமைச்சராக முகைதீன் நியமித்தார்.

முகிதீன் யாசின் பதவி துறப்பு செய்வதாக அறிவித்த பின்னர், ஆகத்து 2021 வரையில், மலேசியப் பிரதமர் அமைச்சகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பிரதமர் இஸ்மாயில் சப்ரியின் நிர்வாகத்தின் கீழ் இசாமுடின் உசேன் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பினார்.

இஸ்மாயில் சப்ரி யாகோப் அவரை மூத்த அமைச்சராக (Senior Minister of Security Cluster) மீண்டும் நியமித்தார். பின்னர் இசாமுடின் உசேன் தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் இவர் 2013-ஆம் ஆண்டில் இருந்து முதல் 2018-ஆம் ஆண்டு வரை மலேசிய தற்காப்பு அமைச்சர் பதவி வகித்தவர் ஆகும்.

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370

[தொகு]

2014-ஆம் ஆண்டில், இசாமுடின் உசேன், மலேசிய போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 (Malaysia Airlines Flight 370) காணாமல் போனது. அது தொடர்பான விசாரணைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த இவர் பன்னாட்டு கவனத்திற்குள் ஈர்க்கப்பட்டார்.[5]

தி சிட்னி மார்னிங் எரால்டு (Sydney Morning Herald) நாளிதழ் இசாமுடினை விமர்சனம் செய்தது. அவர் "தினசரி செய்தியாளர் சந்திப்புகளின் போது தன் நாட்டின் தேடுதல் மற்றும் விசாரணையைக் கையாள்வதைப் பாதுகாக்க போராடினார்" (Hishammuddin struggled during daily press briefings to defend his country’s handling of the search and investigation) என்று விமர்சித்தது.[6]

இருப்பினும் அப்போதைய மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக், இசாமுடினை ஆதரித்தார். ஜூன் 2014-இல் லியோவ் தியோங் லாய் (Liow Tiong Lai) போக்குவரத்து அமைச்சின் பொறுப்பை ஏற்ற பின்னர், இசாமுடினின் போக்குவரத்து அமைச்சர் அளவிலான பங்கு நிறுத்தப்பட்டது.

சர்ச்சைகள்

[தொகு]

அம்னோவின் 2005-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில்; தன் இரண்டாவது அம்னோ இளைஞர் அணித் தலைவர் பதவிக் காலத்தில், மலாய் தேசியத்தின் (Malay Nationalism) சின்னமான கிரிசுக் கத்தி (Keris) எனும் மலாய் வாளை, பொது மேடையில் காட்டி சர்ச்சையில் இசாமுடின் உசேன் சிக்கிக் கொண்டார்.[7]

அந்த நிகழ்வு இனரீதியாக சினமூட்டும் செயல் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும்; மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த சில சீனர் அரசியல்வாதிகளும் விமர்சித்தனர். 2008-ஆம் ஆண்டு, மலேசியப் பொதுத் தேர்தலில் (2008 Malaysian General Election) மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் மத்தியில் அந்தச் செயல், பாரிசான் நேசனல் கூட்டணிக்கு ஆதரவை இழக்கச் செய்ததாக இசாமுடின் ஒப்புக் கொண்டார்.[8]

2020 ஆகத்து 6-ஆம் தேதி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது ஒரு போலிப் புகைத்தல் (Vaping) செய்ததை ஓர் இணையவாசி சுட்டிக் காட்டிய பின்னர் இசாமுடின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.[9]

பெரிய சகோதரர் சர்ச்சை

[தொகு]

2021 ஏப்ரல் 2-ஆம் தேதி, இரண்டு நாள்கள் சீனாவுக்கான பயணம் செயத போது, சீனாவை ’பெரிய சகோதரர்’ (Big Brother) என்று அழைத்ததற்காக ஒரு சர்ச்சையிலும் இசாமுடின் உசேன் சிக்கிக் கொண்டார்.[10] அதைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் விமர்சித்தார். இசாமுடின் உசேனின் அந்தச் சொல்லாடல், மலேசியாவின் வெளியுறவுக் கொள்கையை 25 ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளுகிறது என்றும் அன்வர் இப்ராகீம் கூறினார்.[11]

இருப்பினும் 3 ஏப்ரல் 2021 அன்று, இசாமுடின் தன் சக சீன அமைச்சர் வாங் யீ (Chinese counterpart Minister Wang Yi) என்பவரைக் குறிக்க "பிக் பிரதர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியாகவும்; அது மரியாதைக்குரிய அடையாளம் என்றும் கூறினார்.[12][13]

மலேசியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் (Anifah Aman), சீனாவை "பெரிய அண்ணன்" என்று குறிப்பிட்டது தவறு என்றும்; அந்தத் தவற்றை இசாமுடின் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.[14]

51% பூமிபுத்ரா பங்குக் கொள்கை

[தொகு]

செப்டம்பர் 27, 2021 அன்று, மலேசிய நாடாளுமன்றத்தில் பன்னிரண்டாவது மலேசியா திட்டத்தின் (Twelfth Malaysia Plan) ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பூமிபுத்ரா நிறுவனங்களுக்கான புதிய பங்குக் கொள்கையைத் தாக்கல் (New Equity Policy) செய்தார்.

இந்தக் கொள்கையானது பூமிபுத்ராக்களின் பங்குகளை உறுதி செய்வதற்காகவும்; பூமிபுத்ரா பங்குகள் அல்லது பூமிபுத்ரா நிறுவனங்கள் தொடர்பான விற்பனையானது; பூமிபுத்ரா நிறுவனங்கள், பூமிபுத்ரா கூட்டமைப்புகள் அல்லது பூமிபுத்ரா தனிநபர்களுக்கு மட்டுமே விற்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் ஒரு பாதுகாப்பு வலை (Equity Safety Net) என்று அறிவித்தார்.[15][16]

அமைச்சரவை விமர்சனங்கள்

[தொகு]

அந்தத் தாக்கல் கொள்கை, மலேசிய அமைச்சரவையில் பலவேறான விமர்சனங்களைத் தூண்டியது. மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியை சேர்ந்த சையத் சாதிக் (Syed Saddiq); அந்தப் புதிய கொள்கை நியாயமற்றது என்று குறிப்பிட்டார். ஏனெனில் அந்தக் கொள்கை, பூமிபுத்திரர் அல்லாதவர்களிடம் இருந்து பங்குகளை எடுத்து பூமிபுத்திரர்களுக்கு வழங்குவதற்குச் சமமாக அமையும் என்றும் கருத்து கூறினார்.

முன்னாள் மலேசிய சுகாதார அமைச்சர், சுல்கிப்லி அகமட் (Dzulkefly Ahmad) அந்த கொள்கையை "தற்கொலை" என்று விமர்சனம் செய்தார். அத்துடன் மலாய் தொழிலதிபர்களின் கருத்துகளின் அடிப்படையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் புதிய பூமிபுத்ரா-மட்டும் கொள்கையை (Bumiputera-only Policy) செயல்படுத்துவதற்கு எதிராக இருப்பதாகவும் சுல்கிப்லி அகமட் சுட்டிக் காட்டினார்.[17]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இசாமுடின் மனைவி துங்கு மார்சில்லா துங்கு அப்துல்லா (Tengku Marsilla Tengku Abdullah), பகாங் சுல்தானகத்தைச் சேர்ந்த ஓர் இளவரசி ஆவார். இவர்கள் 1986-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

22 பிப்ரவரி 2022 அன்று அவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று (COVID-19) இருப்பது கண்டறியப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணம் அடைந்தார்.[18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hishammuddin kembali jadi Menteri Pertahanan". BERNAMA (Sinar Harian). 27 August 2021. https://www.sinarharian.com.my/article/157978/BERITA/Nasional/Hishammuddin-kembali-jadi-Menteri-Pertahanan. 
  2. Mahadzir, Dzireena (April 1, 2007). "Taking root, branching out". Archived from the original on 4 August 2017.
  3. Hishammuddin Hussein
  4. "Hisham leaves behind unforgettable legacy". Astro Awani. 25 June 2014. https://www.astroawani.com/berita-malaysia/hisham-leaves-behind-unforgettable-legacy-38404. பார்த்த நாள்: 6 August 2022. 
  5. "Missing Malaysia Airlines plane: MH370's man in the middle, Hishammuddin Hussein". Sydney Morning Herald. 19 March 2014 இம் மூலத்தில் இருந்து 29 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211129173230/https://www.smh.com.au/world/missing-malaysia-airlines-plane-mh370s-man-in-the-middle-hishammuddin-hussein-20140319-hvkf6.html. 
  6. "MH370 saga: Hishammuddin Hussein replaced as Malaysia's transportation minister". Sydney Morning Herald. 26 June 2014 இம் மூலத்தில் இருந்து 31 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141031171549/http://www.smh.com.au/world/mh370-saga-hishammuddin-hussein-replaced-as-malaysias-transportation-minister-20140626-zslyr.html. 
  7. Gatsiounis, Ioannis (26 November 2006). The racial divide widens in Malaysia பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம். Malaysia Today.
  8. Hamdan Raja Abdullah (27 April 2008). "Hishammuddin urged to quit over keris issue". The Star இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141031214116/http://www.thestar.com.my/story/?file=%2f2008%2f4%2f27%2fnation%2f20080427141258&sec=nation. 
  9. "Hisham issued compound after vaping in Dewan Rakyat". Malaysiakini. 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  10. "PKR MP states 5 reasons why Hishammuddin should apologise to M'sians". Malaysiakini. 2021-04-04.
  11. "Anwar: Hisham may have set us back 25 years with China". Malaysiakini. 2021-04-04.
  12. Razak, Radzi (2021-04-03). "Hishammuddin: 'Big Brother' just a personal term referring to senior Chinese counterpart". www.malaymail.com (in ஆங்கிலம்).
  13. "Hishammuddin says 'big brother' remark refers to Wang Yi, not China". Malaysiakini. 2021-04-03.
  14. "Just admit your 'faux pas', Anifah tells Hisham". Malaysiakini. 2021-04-04.
  15. "Rave reviews for 12MP, but Ismail Sabri's Bumi focus splits opinions". The Vibes (in ஆங்கிலம்). 2021-09-28. Archived from the original on 10 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
  16. Anand, Ram (2021-09-29). "Malaysian PM Ismail's push on bumiputera equity faces criticism in country" (in en). The Straits Times இம் மூலத்தில் இருந்து 12 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211012013959/https://www.straitstimes.com/asia/se-asia/ismails-push-on-bumiputera-equity-faces-criticism-in-malaysia. 
  17. "The 12th Malaysia Plan and what people think of it". Free Malaysia Today இம் மூலத்தில் இருந்து 1 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211001011859/https://www.freemalaysiatoday.com/category/nation/2021/10/01/the-12th-malaysia-plan-and-what-people-think-of-it/. 
  18. Chen, Lo Tern (22 February 2022). "Hishammuddin tests positive for Covid-19". The Star (Malaysia) இம் மூலத்தில் இருந்து 2 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220223031425/https://www.thestar.com.my/news/nation/2022/02/22/hishammuddin-tests-positive-for-covid-19. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசாமுடின்_உசேன்&oldid=4052848" இலிருந்து மீள்விக்கப்பட்டது