பெர்லிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெர்லிசு
மாநிலம்
பெர்லிசு இந்திரா காயாஙான்
பெர்லிசு-இன் கொடி
கொடி
பெர்லிசு-இன் சின்னம்
சின்னம்
பண்: அமேன் அமேன் யா ராபல்சாலில்
Amin, Amin, ya Rabaljalil
      பெர்லிசு       மலேசியாவில்
      பெர்லிசு       மலேசியாவில்
தேசிய தலைநகரங்களின் பட்டியல்கங்கார்
அரச நகரம்ஆராவ்
அரசு
 • பெர்லிசு ராசாமாட்சிமை தங்கிய துவாங்கு சையட் சிராசுடின்
 • மந்திரி பெசார்முகமட் இசா சாபு பாரிசான் நேசனல்
பரப்பளவு[1]
 • மொத்தம்821 km2 (317 sq mi)
மக்கள்தொகை (2010)[2]
 • மொத்தம்2,27,025
 • அடர்த்தி276.52/km2 (716.2/sq mi)
மனித வளர்ச்சிச் சுட்டெண்
 • HDI (2010)0.714 (medium) (மலேசிய மாநிலங்கள்)
அஞ்சல் குறியீடுகள்01xxx
தொலைபேசி அழைப்பு முன் எண்04
வாகனப் பதிவுவாகனங்கள் பதிவுப் பட்டை முன்குறி R
சயாமிய கட்டுப்பாடு1821
பிரித்தானிய கட்டுப்பாடு1909
சப்பானிய கட்டுப்பாடு1942–1945
இணையதளம்http://www.perlis.gov.my

பெருலிசு (Perlis), மலேசியாவின் மிகச் சிறிய மாநிலம். தீபகற்ப மலேசியாவின் ஆக வடப் பகுதியில் உள்ளது. தாய்லாந்தின் சாத்தூன், சொங்காலா மாநிலங்களுக்கு எல்லைப் பகுதியிலும் அமைந்து உள்ளது. அதன் தெற்கே கெடா மாநிலம் உள்ளது. [3]

பெர்லிசு மாநிலம் (தாய்லாந்து மொழி: ปะลิส), சயாமியர்களின் ஆட்சியில் இருந்த போது பாலிட் என்று அழைக்கப் பட்டது. பெர்லிசு மாநிலத் தலைநகரத்தின் பெயர் கங்கார். அரச நகரம் ஆராவ். மலேசியத் தாய்லாந்து எல்லையில் இருக்கும் இன்னொரு முக்கிய நகரம் பாடாங் பெசார்.[4]

அதற்கு அடுத்து, பெர்லிசின் முக்கியத் துறைமுகமாக கோலா பெர்லிசு விளங்குகிறது. இந்தத் துறைமுகப் பட்டினம் லங்காவித் தீவுடன் பெர்லிசு மாநிலத்தை இணைக்கின்றது.[5] மலேசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற பாம்புப் பண்ணை பெர்லிசு மாநிலத்தின் சுங்கை பத்து பகாட் எனும் சிறுநகரில் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

பெர்லிஸ் மாநிலம் பல கால கட்டங்களில் சயாமியர்களின் ஆளுமையின் கீழ் இருந்து வந்துள்ளது. ஆனால், வரலாற்றின்படி அது கெடா மாநிலத்திற்குச் சொந்தமான ஒரு நிலப்பகுதி ஆகும்.

கெடா சுல்தான்கள் பெர்லிஸ் மாநிலத்தைத் தங்களின் ஒரு பகுதியாகவே ஆட்சி செய்து வந்துள்ளனர்.[6] இருப்பினும் 1821ஆம் ஆண்டு, கெடா மாநிலத்தை சயாமியர்கள் கைப்பற்றினர்.

சில ஆண்டுகள் கெடா, பெர்லிஸ் மாநிலங்கள் சயாமியர்களின் ஆட்சியின் கீழ், தனித்தனி மாநிலங்களாக இயங்கி வந்தன. 1842 ஆம் ஆண்டு, கெடா மாநிலம் மீண்டும் கெடா மாநில சுல்தானிடமே கொடுக்கப் பட்டது.

ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை[தொகு]

கங்கார், பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம்
பெர்லிஸ் மாநிலத்தில் காணப்படும் சுண்ணாம்புக் குன்றுகள்
பெர்லிஸ் ஹொக்கியான் கழகத்தின் அலுவலகம்

அதன் பின்னர், பெர்லிஸ் மாநிலம் கெடா மாநிலத்தின் ஒரு நிர்வாக மாநிலமாக மாறியது. 1909ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி பெர்லிஸ் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

1942-இல் ஜப்பானியர்கள் படையெடுத்த போது பெர்லிஸ் மநிலம் மறுபடியும் சயாமியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் பெர்லிஸ் திரும்பவும் பிரித்தானியர்களின் கைவசம் வந்தது. 1957ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையில் பிரித்தானியர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

பிரித்தானியர்கள் கலக்கம்[தொகு]

பெர்லிஸ் மாநிலத்தை சுமத்திராவின் ஆச்சே அரசு சில காலம் ஆண்டு வந்துள்ளது.[7] 1821-இல் சயாமியர்கள் கெடாவைத் தாக்கிக் கைப்பற்றியதும், மலாயாவில் இருந்த பிரித்தானியர்கள் கலக்கம் அடைந்தனர். அந்தச் சமயத்தில் பேராக், பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் இருந்தது.

சயாமியர்கள் எந்தக் கட்டத்திலும் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றலாம் என்று பிரித்தானியர்கள் அஞ்சினர். அதன் விளைவாக பர்னி அண்ட் லோ உடன்படிக்கை (Burney and Low Treaty) கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையில் கெடா, பெர்லிஸ், சயாம், பிரிட்டன் கையெழுத்திட்டன.

பர்னி அண்ட் லோ உடன்படிக்கை[தொகு]

ஆராவ், பெர்லிஸ் மாநிலத்தின் அரச நகரம்

பர்னி அண்ட் லோ உடன்படிக்கையின்படி[8] நாடு கடத்தப்பட்ட கெடா சுல்தான் அகமட் தாஜுடின் அரியணையில் அமர்த்தப்படவில்லை. அதனால், சுல்தான் அகமட் தாஜுடினும் அவருடைய ஆதரவாளர்களும் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தனர். 1830லிருந்து 1842 வரை நடந்த அந்தப் போராட்டம் நீடித்தது. இறுதி வரையில் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை.

ஆனால், 1842-இல் சயாமியர்கள் விதித்த சில நிபந்தனையுடன் கூடிய கோரிக்கைகளைச் சுல்தான் அகமட் தாஜுடின் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் கெடா சுல்தானாக அரியணையில் அமர்த்தப் பட்டார். இந்தக் கட்டத்தில் பெர்லிஸ் மாநிலம், கெடா சுல்தானகத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. பெர்லிஸ் நேரடியாக பாங்காக் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

பெர்லிஸ் ராஜா[தொகு]

பெர்லிஸ் மாநிலச் சட்டமன்ற மாளிகை

பின்னர் சாயிட் ஹுசேன் ஜமாலுலாயில் (Sayyid Hussain Jamalulail) என்பவர் பெர்லிஸ் சுல்தானாக பதவிக்கு வந்தார். இவர் அரபு நாட்டைச் சேர்ந்த ஹாட்ராமி அராப் சாயுட் (Hadhrami Arab Sayyid) [9] என்பவரின் தந்தைவழி பேரன் ஆவார். சுல்தான் எனும் அரசப் பதவி ராஜா என்று மாற்றம் அடைந்தது.

அதனால், பெர்லிஸ் சுல்தான் என்பவர் பெர்லிஸ் ராஜா என்றே இன்றும் அழைக்கப் படுகின்றனர். இவருடைய சந்ததியினர் தான் இன்னும் பெர்லிஸ் மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.

பிரித்தானிய ஆலோசகர்[தொகு]

1909ஆம் ஆண்டு[10] ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி பெர்லிஸ், கெடா மாநிலங்கள் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அடுத்தக் கட்டமாக, பிரித்தானியர்கள் (Resident) எனும் ஆலோசகரை பெர்லிஸின் அரச நகரான ஆராவ் நகரில் நியமனம் செய்தனர். அவ்வாறு முதன் முதலில் நியமிக்கப்பட்ட ஆலோசகரின் பெயர் மீடோ புரோஸ்ட் (Meadow Frost).[11]

1938ஆம் ஆண்டு பெர்லிஸ் மாநில நிர்வாகக் கட்டடத்தையும் (Perlis State Secretariat Office) பிரித்தானியர்கள் கட்டினர்.[12]இரண்டாவது உலகப் போரின் போது பெர்லிஸ் சுல்தானகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது, ஜப்பானின் நெருங்கிய தோழமை நாடாக சயாம் விளங்கியது. அந்த விசுவாசக் கடனுக்கு பெர்லிஸ் மாநிலம், சயாமுக்கு அனபளிப்பாக வழங்கப் பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்ததும் மீண்டும் பெர்லிஸ் பிரித்தானியர்களின் கைகளுக்கே வந்து சேர்ந்தது.

துவாங்கு சையட் சிராஜுடின்[தொகு]

பெர்லிஸ் 1957-இல் மலாயா கூட்டரசில் இணைந்து சுதந்திரம் அடைந்தது. 1963-இல் மலேசியாவில் ஒரு மாநிலம் ஆனது. 2000 ஆம் ஆண்டில் இருந்து துவாங்கு சையட் சிராஜுடின் என்பவர் பெர்லிஸ் மாநிலத்தின் ராஜாவாகப் பதவியில் இருந்து வருகிறார்.

இவர் 2001ஆம் ஆண்டில் இருந்து 2006ஆம் ஆண்டு வரை மலேசியாவின் பேரரசராகவும் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய புதல்வர் துங்கு சையட் பைசுடின் புத்ரா (Tuanku Syed Faizuddin Putra) என்பவர் பெர்லிஸ் மாநில அரசராக நிர்வாகம் செய்தார். தற்சமயம் மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அரியாசனம் செய்கின்றார்.[13]

இப்போது பெர்லிஸின் மந்திரி புசாராக டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் ஈசா சாபு என்பவர் இருக்கின்றார். இவர் ஆளும் கட்சியான தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்.

பொருளாதாரம்[தொகு]

பெர்லிஸ் மாநிலத்தில் முக்கியமானது விவசாயம் தான்.[14] இங்கு நெல், கரும்பு, மூலிகைகள், பழ உற்பத்திகள் போன்றவை பிரதானமாக விளங்குகின்றன. தவிர, காட்டு மரங்களும் கட்டுப்பாட்டு முறையில் வெட்டப் படுகின்றன. பெர்லிஸ் மாநிலத்தில் அதிகமான தேக்கு மரங்கள் கிடைக்கின்றன. மீன் பிடித்தலுக்கு பெர்லிஸ் பெயர் போனது.

பெர்லிஸ் மீனவர்கள் அந்தமான், நிக்கோபார் தீவுகள் வரை சென்று மீன் பிடித்து வருகின்றனர். அண்மைய காலங்களில் கோலா பெர்லிஸை இரு பெரிய துறைமுகமாக மாற்றுவதற்கு பெரும் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.

சுற்றுலா தலங்கள்[தொகு]

பெர்லிஸ் ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. இந்த மாநிலம் தாய்லாந்து நாட்டின் எல்லையுடன் ஒட்டி இருப்பதால், இங்கே தாய்லாந்து கலாசாரங்களைப் பரவலாகக் காண முடியும். தாய்லாந்திற்குச் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகிறவர்கள், பெர்லிஸ் மாநிலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அத்துடன், தாய்லாந்து நாட்டில தயாரிக்கப்பட்ட பொருட்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன. அதனால், வருடம் முழுமையும் சுற்றுப்பயணிகளை இங்கு காண முடியும்.

சுப்பிங் கரும்புத் தோட்டம்[தொகு]

சுப்பிங் மலை அடிவாரத்தில் 22,000 ஹெக்டர் பரப்பளவில் ஒரு பெரிய கரும்புத் தோட்டம் உள்ளது. சீனி தயாரிக்க இந்தத் தோட்டத்தில் உள்ள கரும்புகள் பயன்படுத்தப் படுகின்றன. கங்கார் நகரத்தில் இருந்து 23 கி.மீ தொலைவில் இந்த தோட்டம் அமைந்து இருக்கிறது.[15]

தாசோ தீமா அணைக்கட்டு[தொகு]

1987ஆம் ஆண்டு 77 மலேசியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட ஓர் அணைக்கட்டு.[16] இந்த அணைக்கட்டின் சுற்றிலும் இயற்கை கொஞ்சும் அழகிய குன்றுகள் உள்ளன. வார இறுதி நாட்களில் விடுமுறையைக் கழிக்க பலர் வருகின்றனர். பல சுற்றுலா மனைகளும் மிக மலிவான கட்டணத்தில் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் நீர், பெர்லிஸ் மாநில மக்களின் அன்றாடச் சேவைகளுக்குப் பயன் படுகிறது.

சுங்கை பத்து பகாட் பாம்புப் பண்ணை[தொகு]

மலேசியாவில் மிகப் பெரிய பாம்புப் பண்ணை புக்கிட் பிந்தாங் வனக் காப்பகத்தில் இருக்கிறது. இந்த வனக் காப்பகம், சுங்கை பத்து பகாட் எனும் சிறுநகருக்கு அருகில் இருக்கிறது. மலேசியாவில் காணப்படும் 200 வகையான பாம்புகளும் இங்கே வளர்க்கப் படுகின்றன.[17]

இந்தப் பாம்புப் பண்ணையை மலேசிய மருத்துவ ஆய்வுக்கழகம் நடத்தி வருகின்றது. பாம்புகளில் இருந்து கிடைக்கும் விஷப் பொருட்கள், விஷமுறிவு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. பாம்புகளைத் தவிர முதலைகள், உடும்புகள், ஆமைகள், கீரிப்பிள்ளைகள் போன்ற ஊர்வனங்களும் இங்கே வளர்க்கப் படுகின்றன.[18]

ஹாருமானிஸ்[தொகு]

ஹாருமானிஸ் என்பது மலேசியாவில் பெர்லிஸ் மாநிலத்தில் மட்டும் கிடைக்கும்[19] ஒரு வகையான மாம்பழம். மலேசியாவில் வேறு எங்கும் இந்தப் பழங்கள் கிடைக்கவில்லை.[20] மலேசிய மொழியில் ஹாரும் என்றால் மணம். மானிஸ் என்றால் இனிமை. வருடத்திற்கு ஒரு முறை தான் இந்தப் பழங்கள் கிடைக்கின்றன. இந்தப் பழங்களுக்கு அண்டை நாடான சிங்கப்பூரில் அதிகமான கிராக்கி.[21] இந்தப் பழங்கள் இந்தோனேசியாவிலும் ஏராளமாக விளைகின்றன.

கெலாம் குகை[தொகு]

கங்கார் நகரில் இருந்து 36 கி.மீ தொலைவில் இந்தக் குகை உள்ளது. முன்பு இங்கு இரும்பு எடுக்கப்பட்டது. இங்கு 370 மீட்டர் நீளமுள்ள ஒரு குகை உள்ளது. இதைப் பார்க்க சுற்றுப்பயணிகள் நிறைய பேர் வருகின்றனர். வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளையும் இந்தக் குகை கவர்ந்து வருகிறது.[22]

மக்கள் தொகை இனவாரியாக[தொகு]

2010 ஆம் ஆண்டில் பெர்லிஸ் மாநிலத்தின் மக்கள் தொகை 227,025. இவர்களில்:

 • மலாய்க்காரர்கள் - 174,805 – 79.74%
 • சீனர்கள் - 21,058 – 9.6%
 • இந்தியர்கள் - 2,658 – 1.21%
 • மற்றவர்கள் - 20,690 – 9.45%[23]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. p. 27. 2011-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. p. iv. 2011-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 3. Perlis is located up north of the Peninsular Malaysia, very close to the border of Thailand while, in the south Perlis is the neighbour of Kedah State.[தொடர்பிழந்த இணைப்பு]
 4. "Padang Besar is a bustling border town and is a blur of colours, sights and sounds". 2011-10-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. "After reaching, Kuala Kedah or Kuala Perlis, you may park your car at the private car park". 2011-11-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 6. "Bukti-bukti pra-sejarah yang terdapat di Bukit Tengku Lembu di Beseri menunjukkan kewujudan negeri ini". 2012-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. "Perlis is actually a part of the Kedah empire. Throughout the historical events related to the Perlis state, there has been frequent changing power within the state between Siam, Aceh, British and as well as Japan". 2011-12-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. The Burney Treaty, so named after Henry Burney, head emissary from the East India Company, and known in Siamese history as the Treaty of Amity and Commerce (Siam–UK), was concluded with King Rama III in the latter part of 1826.
 9. The Hadharem have a long sea-faring and trading tradition, which has seen them migrate in large numbers all around the Indian Ocean basin.
 10. The Anglo-Siamese Treaty of 1909 or Bangkok Treaty of 1909 was a treaty between the United Kingdom and Thailand signed on March 10, 1909 in Bangkok.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. "The first British Resident or advisor to Perlis was Meadow Frost". 2012-01-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 12. Perlis State Secretariat Office was established in 1938,during the British colonial in Malaya
 13. The Raja Muda of Perlis, Tuanku Syed Faizuddin Putra Jamalullail has been reappointed as the Universiti Malaysia Perlis.
 14. "Primary commodity in Perlis". 2012-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 15. "Di sini terdapat 22,000 hektar kawasan penanaman tebu bagi tujuan pembuatan gula". 2012-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 16. "Empangan Timah Tasoh". 2012-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 17. "The farm, one of Perlis' major tourist attractions, holds a large collection of live snakes, iguanas and crocodiles". 2008-05-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 18. The Snake Farm is a research facility set up to develop serums for snakebites.
 19. The Harum Manis mango is only found in the state of Perlis.
 20. Harum Manis Perlis vs Indian Mango[தொடர்பிழந்த இணைப்பு]
 21. "Ladang mempelam harumanis merupakan salah satu produk pelancongan utama di negeri Perlis". 2012-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 22. Gua Gelam Recreational Park.[தொடர்பிழந்த இணைப்பு]
 23. The data for this record was last updated 2010-08-09[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

புவியியல் அமைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்லிஸ்&oldid=3519344" இருந்து மீள்விக்கப்பட்டது