டேவான் ராக்யாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மக்களவை
டேவான் ராக்யாட்
Dewan Rakyat
House of Representatives
13-ஆவது நாடாளுமன்றம்
Coat of arms or logo
தலைமை
நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிக்கார் அமின் மூலியா, பாரிசான் நேசனல் - அம்னோ
5 மே 2013 முதல்
அமைப்பு
அங்கத்தவர்கள் 222 உறுப்பினர்கள்
12th Dewan Rakyat of Malaysia.svg
அரசியல் குழுக்கள்

(6 மே 2013)      பாரிசான் நேசனல் (133)      பாக்காத்தான் ராக்யாட் (89)      சபா முற்போக்கு கட்சி (0)      மலேசிய சோசலிச கட்சி (0)

     சுயேட்சைகள் (0)
கடைசிப் பொதுத் தேர்தல் மலேசியப் பொதுத் தேர்தல், 2013
கூடும் இடம்
மலேசிய நாடாளுமன்றம், கோலாலம்பூர், மலேசியா
வலைத்தளம்
www.parlimen.gov.myமலேசியா
Coat of arms of Malaysia.svg

டேவான் ராக்யாட் என்பது (மலாய்: Dewan Rakyat, ஆங்கிலம்:House of Representatives), மலேசிய நாடாளுமன்றத்தில் மக்களவையைக் குறிக்கும் மலாய்ச் சொல் ஆகும். டேவான் என்றால் அவை. ராக்யாட் என்றால் மக்கள். மலேசியாவின் அனைத்துச் சட்ட மசோதக்களும் இங்குதான் விவாதிக்கப்பட்டு, இயற்றப்படுகின்றன.[1]

அவ்வாறு இயற்றப்படும் சட்ட மசோதாக்கள், மக்களவையில் இருந்து நாடாளுமன்ற மேலவையின் சம்மதத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் பின்னர், மலேசிய பேரரசர் ஒப்புதல் அளித்த பின்னர் அந்த மசோதாக்கள் சட்டங்களாகின்றன. நாடாளுமன்ற மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப்படுகிறது.

டேவான் ராக்யாட்டின் உறுப்பினர்களைப் பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றே அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அமைப்பு[தொகு]

மலேசிய நாடாளுமன்றம் என்பது மலேசியாவின் ஆக உயர்ந்த சட்டப் பேரவையாகும். சட்டங்களை இயற்றுவதும், சட்டங்களை மாற்றித் திருத்தி அமைப்பதும் அதன் தலையாய பண்பு நலன்களாகும். மலேசிய பேரரசர் நாட்டுத் தலைவராக இருந்தாலும், அவருக்குச் சார் நிலையான தகுதியில், மலேசிய அரசியலமைப்பின் 39வது விதிகளின்படி மலேசிய நாடாளுமன்றம் இயங்கி வருகிறது.[2]

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும், அவருக்கு நாடாளுமன்ற சட்ட விலக்களிப்பு (ஆங்கிலம்:Parliamentary immunity) அதாவது நாடாளுமன்ற தடைக்காப்பு வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தன் கருத்துகளைச் சொல்வதில் முழு உரிமை வழங்கப்படுகிறது. ஆனால், இனத் துவேச, அரசுப் பகையை மூட்டிவிடும் விசயங்களைப் பற்றி பேசுவதில் அல்லது எழுதுவதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்படுகின்றனர்.

13 மே இனக்கலவரம், பூமிபுத்ராகளின் சிறப்புரிமைகள் பற்றி பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை. தவிர, மலேசியப் பேரரசரையும், நீதிபதிகளையும் குறை சொல்வதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்படுகின்றனர்.[3]

ஒரு சட்டம் எப்படி இயற்றப்படுகிறது[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா எப்படி சட்டம் ஆக்கப்படுகிறது. அதன் பின்னணி:

 • அந்த வரைவோலையைப் பற்றி மலேசிய அமைச்சரவை முதலில் விவாதிக்கிறது.
 • அமைச்சரவை சம்மதம் தெரிவித்ததும், வரைவோலை எனப்படுவது ஒரு மசோதா எனும் தகுதியைப் பெறுகிறது.
 • அந்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு நகல் மசோதா விநியோகிக்கப்படுகிறது.
 • டேவான் ராக்யாட்டில் மூன்று கட்டங்களில் அந்த மசோதாவின் வாசிப்பு நடைபெறுகிறது. முதல் கட்டமாக அமைச்சர் அல்லது ஒரு துணையமைச்சர், அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது.
 • இரண்டாவது கட்டமாக, அந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
 • மூன்றாவது கட்டமாக, அந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறுவதற்காக, அவர்களின் வாக்களிப்பிற்குச் செல்கின்றது. மசோதா நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை தேவை. சில சமயங்களில் ஓர் அறுதிப் பெரும்பான்மை இருந்தாலும் போதும்.
 • அந்த மசோதாவிற்கு பெரும்பான்மை கிடைத்ததும், டேவான் நெகாரா (மலாய்: Dewan Negara) எனும் மேலவைக்கு அனுப்பப்படுகிறது. டேவான் ராக்யாட்டில் எப்படி மூன்று கட்டங்களில் அந்த மசோதாவின் வாசிப்பு நடைபெற்றதோ, அதே போல இங்கேயும் மூன்று கட்டங்களில் வாசிப்பு நடைபெறும்.
 • அந்த மசோதா நிறைவேற்றப்படுவதில் இருந்து டேவான் நெகாரா தடைவிதிக்கலாம். அல்லது ஒப்புதல் அளிக்காமல் போகலாம். ஆனால், அது காலதாமதத்தை தான் ஏற்படுத்தும். ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு காலதாமதம் செய்யலாம். அதற்குப் பின்னர், டேவான் நெகாராவின் சம்மதம் இல்லாமலேயே, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
 • அந்த மசோதா மலேசிய பேரரசரின் பார்வைக்கும், சம்மதத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 30 நாள்கள் கால அனுமதி வழங்கப்படுகிறது.
 • பேரரசர் சம்மதிக்கவில்லை என்றால் மாற்றங்களைச் செய்யச் சொல்லி அவர் அந்த மசோதாவை மறுபடியும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி விடுவார்.
 • அடுத்து வரும் 30 நாள்களுக்குள், நாடாளுமன்றம் அந்த மசோதாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்து, மறுபடியும் பேரரசரின் சம்மதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 • இதன் பின்னர் 30 நாள்களுக்குள் பேரரசர் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அவர் சம்மதிக்கிறாரோ இல்லையோ அதன் பிறகு அந்த மசோதாவை ஒரு சட்டமாக ஆக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
 • அரசாணையில் (ஆங்கிலம்:Government Gazette) இடம்பெறும் வரையில் அந்த மசோதா ஒரு சட்டமாகக் கருதப்பட மாட்டாது. அல்லது ஒரு சட்டமாகச் செயல்படவும் முடியாது.

நாடாளுமன்றச் சபாநாயகர்[தொகு]

ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கான குறைந்த வயது 21. நாடாளுமன்றத்தின் தலைவரை சபாநாயகர் என்று அழைக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். அவரைத் தவிர இரு துணைச் சபாநாயகர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

டேவான் ராக்யாட்டின் அன்றாட அலுவல்களைக் கவனித்துக் கொள்வதற்காக நாடாளுமன்ற அலுவலகம் இருக்கிறது. இதன் தலைவரை பேரரசர் நியமனம் செய்கிறார். அவரைப் பதவியில் இருந்து பேரரசர் அல்லது நீதிபதிகள் மட்டுமே நீக்க முடியும்.

தேர்தல் முடிவுகள் 2013[தொகு]

[உரை] – [தொகு]
மலேசியப் பொதுத்தேர்தல் முடிவுகள் 2008
Votes % of vote Seats % of seats +/–
பாரிசான் நேசனல் தேசிய முன்னணி (மலேசியா): 4,082,411 50.27 140 63.1 Red Arrow Down.svg58
அம்னோ (தேசிய ஐக்கிய மலாய் இயக்கம்) (United Malays National Organization) 2,381,725 29.33 79 35.6 Red Arrow Down.svg30
மலேசிய சீனர் சங்கம் (Malaysian Chinese Association) 840,489 10.35 15 6.8 Red Arrow Down.svg16
மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா) (Malaysian Indian Congress) 179,422 2.21 3 1.4 Red Arrow Down.svg6
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (கெராக்கான்) (Malaysian People's Movement Party) 184,548 2.27 2 0.9 Red Arrow Down.svg8
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (United Traditional Bumiputera Party, PBB) 131,243 1.62 14 6.3 Green Arrow Up Darker.svg3
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (Sarawak United People's Party, SUPP) 119,264 1.47 6 2.7 Straight Line Steady.svg
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி (Sarawak Progressive Democratic Party, SPDP) 52,645 0.65 4 1.8 Straight Line Steady.svg
சரவாக் மக்கள் கட்சி (Sarawak People's Party, PRS) 33,410 0.41 6 2.7 Green Arrow Up Darker.svg6
ஐக்கிய பாசோக்மோமோகுன் கடாசான்டூசுன் அமைப்பு
(United Pasokmomogun Kadazandusun Murut Organisation, UPKO)
58,856 0.72 4 1.8 Straight Line Steady.svg
ஐக்கிய சபா கட்சி (United Sabah Party, PBS) 44,885 0.55 3 1.4 Red Arrow Down.svg1
சபா முற்போக்கு கட்சி (Sabah Progressive Party, SAPP) 30,827 0.38 2 1.4 Red Arrow Down.svg2
ஐக்கிய சபா மக்கள் கட்சி (United Sabah People's Party, PBRS)* 1 0.5 Straight Line Steady.svg
லிபரல் ஜனநாயக கட்சி (மலேசியா) (Liberal Democratic Party Malaysia, LDP) 8,297 0.10 1 0.5 Green Arrow Up Darker.svg1
மக்கள் முற்போக்கு கட்சி (People's Progressive Party, PPP) 16,800 0.21 0 0 Red Arrow Down.svg1
பாக்காத்தான் ராக்யாட் மக்கள் கூட்டணி (மலேசியா): 3,796,464 46.75 82 36.9 Green Arrow Up Darker.svg62
மக்கள் நீதிக் கட்சி (People's Justice Party (Malaysia), PKR) 1,509,080 18.58 31 14.0 Green Arrow Up Darker.svg30
மலேசிய இஸ்லாமிய கட்சி (Pan-Malaysian Islamic Party, PAS) 1,140,676 14.05 23 10.4 Green Arrow Up Darker.svg16
ஜனநாயக செயல் கட்சி (Democratic Action Party, DAP) 1,118,025 13.77 28 12.6 Green Arrow Up Darker.svg16
பக்க சார்பு இல்லாதவை 65,399 0.81 0 0 Red Arrow Down.svg1
மொத்தம் 7,944,274 100 222 100 Green Arrow Up Darker.svg3
*ஐக்கிய சபா மக்கள் கட்சி, வேட்பாளர் தினத்தன்று தன்னுடைய ஒரே இடத்தில், போட்டி இல்லாமல் வெற்றி பெற்றது

சான்று: Sin Chew Jit Poh[4], Malaysia


சான்றுகள்[தொகு]

 • Means, Gordon P. (1991). Malaysian Politics: The Second Generation, pp. 14, 15. Oxford University Press. ISBN 0-19-588988-6.
 • HOUSES OF PARLIAMENT (PRIVILEGES AND POWERS) ACT 1952 - Incorporating all amendments up to 1 January 2006
 • Shuid, Mahdi & Yunus, Mohd. Fauzi (2001). Malaysian Studies, pp. 33, 34. Longman. ISBN 983-74-2024-3.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவான்_ராக்யாட்&oldid=1887411" இருந்து மீள்விக்கப்பட்டது