மலேசிய பொதுச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய பொதுச் சேவை (மலாய்: Perkhidmatan Awam Malaysia; ஆங்கிலம்: Civil Service in Malaysia) என்பது மலேசிய அரசியலமைப்பு பிரிவு 132 (Constitution of Malaysia Article 132) தொடர்பான மிக முக்கியமான பொதுச் சேவையாகும்.

மலேசியக் கூட்டரசு எனும் மலேசிய நடுவண் அரசின் பொதுப் பணிகள் (Federal Public Service); மலேசிய மாநிலங்களின் பொதுப் பணிகள் (State Public Services), கூட்டுப் பொதுச் சேவைகள் (Joint Public Services), கல்விச் சேவை (Education Service), நீதித்துறை (Judiciary), சட்டப் பணி (Legal Service); ஆயுதப் படைகள் (Armed Forces) ஆகியவற்றை மலேசிய பொதுச் சேவை கொண்டிருக்க வேண்டும் என்று மலேசியாவின் அரசியலமைப்பின் பிரிவு 132 வலியுறுத்துகிறது.

பொது[தொகு]

மலேசியாவின் சட்டப்பூர்வ அமைப்புகள் (Statutory Bodies) மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் (Local Authorities) ஆகிய அமைப்புகளும் பொதுச் சேவைகளின் ஒரு பகுதியாகக் கருதப் படுவதாகவும் மலேசிய அரசியலமைப்பு பிரிவு 132 குறிப்பிடுகின்றது.

ஏனென்றால், சட்டப்பூர்வ அமைப்புகள்; உள்ளாட்சி அமைப்புகள்; ஆகிய இந்த இரண்டு தன்னாட்சி அமைப்புகளும் பொதுச் சேவைகளின் பல விசயங்களில் ஒன்றுடன் ஒன்றாய் இணைந்து செல்கின்றன.

நியமனங்கள் (Appointments), சேவை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions of Service) மற்றும் ஊதிய முறை (Remuneration System) தொடர்பான பொதுச் சேவைகளின் நடைமுறைகளை அந்த இரு அமைப்புகளும் பின்பற்றுவதே முக்கியக் காரணமாகும்.

அதுமட்டுமின்றி, அந்த இரண்டு தன்னாட்சி அமைப்புகளின் அலுவலர்களும் மற்றும் பிற பணியாளர்களும் பொதுச் சேவைகளில் உள்ள ஊழியர்களைப் போலவே ஓய்வூதியம் (Pension) பெறுகின்றனர்; மற்றும் பிற ஓய்வூதியப் பலன்களையும் (Retirement Benefits) பெறுகின்றனர்.

ஊதிய முறை புதுத்திட்டம்[தொகு]

எனினும், 1 சனவரி 1993-இல், மலேசியாவில் ஒரு புதிய ஊதிய முறை திட்டம் (New Remuneration System) நடைமுறைக்கு வந்தது. அதன் மூலமாக, பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு, அவற்றின் சொந்தக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கான முழு உரிமை (Freedom to institute their own Policies and Procedures) வழங்கப்பட்டது.

ஒரு வகையில் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் வணிக நிறுவனங்களைப் போலவே நடைமுறையில் இருந்தன. அத்துடன் இந்த நிறுவனங்கள் நல்ல நிதி நிலையிலும் இருந்தன. அவற்றின் வேலை நியமனங்கள்; சேவை விதிமுறைகள்; மற்றும் சேவை நிபந்தனைகள் தொடர்பான கொள்கைகளைச் சொந்தமாகத் தீர்மானிக்க அனுமதிக்கப்பட்டன.

வரலாறு[தொகு]

தற்போதைய மலேசிய பொதுச் சேவை 1950-களில் உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதன் பூர்வீகத் தன்மை 1700-ஆம் ஆண்டுகளில் இருந்து தொடங்குகிறது.

  • மலாய் நிர்வாக சேவை 1941 முதல் 1957 வரை
    • (Malay Administrative Service, from 1941 to 1957)

1957-ஆம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு, தற்போதைய பொதுச் சேவை உருவாக்கப்பட்டது.

பொது முகமைகள்[தொகு]

பொது முகமைகள் (Public Agencies) என்பது கூட்டரசு (Federal), மாநிலம் (State) மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் (Local Government) பொதுச் சேவையில் உள்ள நிறுவனங்கள் ஆகும். கூட்டரசு நிறுவனங்கள் (Federal Agencies) என்பவை அமைச்சுகள் (Ministries), கூட்டரசு துறைகள் (Federal Departments) மற்றும் கூட்டரசின் சட்டப்பூர்வ அமைப்புகளை (Federal Statutory Bodies) கொண்டவை.

ஒவ்வோர் அமைச்சும் ஓர் அமைச்சரால் தலைமை தாங்கப்படும். அந்த அமைச்சு, துணை அமைச்சர்(கள்) மற்றும் தலைமைச் செயலர் என அழைக்கப்படும் தலைமைச் செயல் அதிகாரி (Secretary General) ஆகியோரால் வழிநடத்தப்படும். அந்த வகையில் பிரதமர் துறையும் ஓர் அமைச்சு ஆகும்.

சட்டப்பூர்வமான அமைப்புகள்[தொகு]

பொதுவாக ஓர் அமைச்சின் கீழ் பல துறைகள் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டரசு சட்டப்பூர்வ அமைப்புகளும் (Federal Statutory Bodies) இருக்கும். துறைகளின் தலைவர்களுக்குத் தலைமை இயக்குநர் (Director General) எனும் பதவித் தகுதி வழங்கப்படுகிறது.

சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவரை ’தலைவர்’ (Chairman) என்றும், அரசு ஊழியராக இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரி (Chief Executive Officer), பொது மேலாளர் (General Manager) என்றும் அழைக்கப் படுகிறார். மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தில் (Employees Provident Fund Malaysia) உள்ளது போல பொது மேலாளராக (General Manager) செயல்படும் செயல் தலைவரின் (Executive Chairman) தலைமையில் சட்டப்பூர்வ அமைப்புகள் இயங்கும்.

விதிவிலக்கு நிறுவனங்கள்[தொகு]

மாநிலச் சட்டப்பூர்வ அமைப்புகள் (State Statutory Bodies); உள்ளூர் அரசாங்கங்கள் (Local Governments) எனப்படும் மாநகராட்சி (City Councils), நகராட்சி (Municipal Councils) மற்றும் மாவட்ட மன்றங்கள் (District Councils) ஆகியவற்றைக் கொண்டு இருக்கும். அவற்றை மாநில நிறுவனங்கள் (State Agencies) என்றும் அழைப்பது உண்டு..

சிறப்பு நிறுவனங்களான நீதித்துறை (Judiciary), பொதுச் சேவைகள் ஆணையங்கள் (Public Services Commissions), தேர்தல் ஆணையம் (Election Commission of Malaysia) ஆகியவை பொதுச் சேவைகள் (Public Services) என்ற அமைப்பின் கீழ் அடங்குவது இல்லை. மற்றும் மலேசியப் பேரரசரால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனங்களும் (Institutions whose members are appointed by the King of Malaysia) பொதுச் சேவைகள் அமைப்பில் அடங்குவது இல்லை .

இருப்பினும் ஒரு விதிவிலக்கு உண்டு. அந்தச் சிறப்பு நிறுவனங்களுக்குச் செயலகச் சேவைகளை (Secretarial Services) வழங்கும் நிறுவனங்கள்; பொது சேவை அதிகாரிகளைக் கொண்ட பொது நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.

அடுத்து, நிறுவனங்கள் சட்டம் (Companies Act) அல்லது சங்க சட்டம் (Society Act) ஆகிய சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களும் பொதுச் சேவைத் துறையில் சேர்க்கப்படுவது இல்லை.

மத்திய முகமைகள்[தொகு]

நடுவண் அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையில் மற்றொரு முகமை உள்ளது. அதாவது இடைத்தரகு நிறுவனம். மத்திய நிறுவனம் என்று அழைக்கப் படுகிறது. தேசியக் கருவூலம் (Treasury); பொருளாதார திட்டமிடல் (Economic Planning Unit) நிறுவனம் போன்றவை மத்திய நிறுவனங்களாகும்.

மலேசியாவில் உள்ள இந்த மத்திய நிறுவனங்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் இவை அரசாங்கக் கொள்கைகளை உருவாக்குதல்; அரசாங்கக் கொள்கைகளை ஒருங்கிணைத்தல், அரசாங்கக் கொள்கைகளைக் கட்டுப்படுத்துதல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வடிவமைத்தல், மற்றும் அந்தத் திட்டங்களைக் கண்காணித்தல் போன்ற செயல்பாடுகளில் அரசாங்கத்திற்கு உதவுகின்றன. மத்திய நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகள்:[1]

மத்திய நிறுவனங்களின் பொறுப்புகள்[தொகு]

  • மாநிலத்தின் பொருளாதாரத் திட்டமிடல் தொடர்பாக, பொதுக் கொள்கைகளை உருவாக்குதல்.
  • அரசு ஊழியர்ப் பதவிகளை உருவாக்குதல்; வழங்குதல் போன்ற செயல்பாடுகளில், பல்வேறு அரசு நிறுவனங்கள் அல்லது அரசு துறைகளின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்தல்
  • பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்குப் பொது வரவு செலவு கணக்கு அல்லது பொது நிதிக்கான அடிப்படையை வழங்குதல்.
  • அவசரகால அமைப்புகலுக்குத் தேவைப்படும் தேவையான சேவைகளை வழங்குதல்.
  • பொதுக் கொள்கைகள் செயல்படுத்தப் படுவதையும்; பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் சீராகச் செயல்படுத்தப் படுவதையும் உறுதி செய்தல்.

மத்திய நிறுவனங்கள்[தொகு]

  • பொருளாதார திட்டமிடல் பிரிவு

அதிகாரிகளை நியமிக்கும் ஆணையங்கள்[தொகு]

ஒவ்வொரு சேவையும் அதன் நியமன அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பைப் பின்வருமாறு கொண்டுள்ளது:-

சேவை / நிறுவனம் நியமனம் செய்யும் அதிகாரம்
கூட்டரசு பொதுச் சேவைகள்
(Federal Public Services)
மலேசிய பொது சேவைகள் ஆணையம்
(Public Services Commission Malaysia)
கல்விச் சேவை
(Education Service)
கல்விச் சேவை ஆணையம்
(Education Service Commission)
நீதித்துறை மற்றும் சட்டச் சேவை
(Judicial and Legal Service)
நீதித்துறை மற்றும் சட்ட சேவை ஆணையம்
(Judicial and Legal Service) Commission
காவல் துறை சேவை
(Police Service)
காவல் துறை சேவை ஆணையம்
(Police Service Commission)
ஆயுதப் படைகள்
(Armed Forces)
ஆயுதப் படைகள் ஆணையம்
(Armed Forces Council)
மலாக்கா, பினாங்கு, நெகிரி செம்பிலான், பெர்லிஸ் மாநிலங்களின் பொதுச் சேவைகள்
(Public Services in the states of Melaka, Pulau Pinang, Negeri Sembilan, Perlis)
பொதுச் சேவைகள் ஆணையம்
(Public Services Commission)
பிற மாநிலங்களின் பொது சேவை
(Other state public services)
மாநிலப் பொது சேவை ஆணையங்கள்
(Respective State Public Services Commissions)
கூட்டரசு மற்றும் மாநிலச் சட்ட அமைப்புகள்
(Federal and state statutory bodies)
இயக்குநர்கள் குழு
(Respective Board of Directors)
உள்ளூராட்சிகள்
(Local governments)
உள்ளூராட்சிகள்
(Respective local government)

மேற்கோள்கள்[தொகு]

  1. Hai, Jeong Chun; Nawi, Nor Fadzlina (2007). Principles of public administration : an introduction. Shah Alam, Selangor: Karisma Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789831952535. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_பொதுச்_சேவை&oldid=3885183" இலிருந்து மீள்விக்கப்பட்டது