உள்ளடக்கத்துக்குச் செல்

யாங் டி பெர்துவான் மூடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாங் டி பெர்துவான் மூடா (ஆங்கிலம்: Crown Prince; மலாய்: Yang di-Pertuan Muda அல்லது Putera Mahkota) என்பது மலாய் தீவுக்கூட்டத்தின் 9 மாநிலங்களின் பாரம்பரிய ஆட்சியில், அரச முடியாட்சியின் அரியணைக்குத் தகுதி பெறும் ஓர் ஆண் வாரிசைக் குறிக்கும் பதவிப் பெயர் ஆகும். இதை பட்டத்து இளவரசர் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

உலகளாவிய நிலையில் அரியணைக்குத் தகுதி பெறும் ஓர் ஆண் வாரிசை கிரீடத்து இளவரசர் அல்லது பரம்பரை இளவரசர் அல்லது பட்டத்து இளவரசர் என்றும்; இந்தப் பட்டத்திற்கு தகுதி பெறும் ஒரு பெண்ணை கிரீடத்து இளவரசி (Crown Princess) அல்லது பட்டத்து இளவரசி என்றும் அழைப்பது வழக்கம்.

முந்தைய வரலாற்றுக் காலங்களில், பட்டத்து இளவரசர் பாணியில் இருக்கும் ஒரு நபரின் மனைவியையும் பட்டத்து இளவரசி என்று அழைப்பது உண்டு. பட்டத்து இளவரசர் எனும் வார்த்தை, ஒரு சிம்மாசனத்திற்கான முதல் வரிசையில் (First-in-line) இருக்கும் நபரைக் குறிப்பிடும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மலேசியாவில் பயன்பாடு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்_டி_பெர்துவான்_மூடா&oldid=3630854" இலிருந்து மீள்விக்கப்பட்டது