உள்ளடக்கத்துக்குச் செல்

உருக்குன் நெகாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ருக்குன் நெகாரா (மலாய்: Rukun Negara; ஆங்கிலம்: Rukun Negara); என்பது மலேசியத் தேசியத் தத்துவத்தின் பிரகடனம் ஆகும். இந்தப் பிரகடனம் ஐந்து கோட்பாடுகளைக் கொண்டது.

1969-ஆம் ஆண்டு நடைபெற்ற 13 மே சம்பவம் என அழைக்கப்படும் இனக் கலவரத்திற்கு எதிர்வினையாக, 1970-ஆம் ஆண்டு மெர்டேகா தினத்தில் அந்தப் பிரகடனம் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசிய இன சமநிலையின் உறுதித் தன்மை பலகீனமாக இருந்தது என்பதை அந்தச் சம்பவம் நிரூபித்துக் காட்டியது.[1]

மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வலுப்பெற வேண்டும்; நல்லிணக்கம் உறுதி செய்யப்பட வேண்டும்; அவையே ருக்குன் நெகாராவின் தலையாய நோக்கங்களாகும்.

ருக்குன் நெகாரா உருவாக்கம்

[தொகு]

நாட்டின் 2-ஆவது பிரதமரான அப்துல் ரசாக் உசேன் அவர்களின் எண்ணத்தில் ருக்குன் நெகாரா உருவானது. அப்போது அவர் தேசிய ஆலோசனைக் குழுவின் (மலாய்: Majlis Perundingan Negara; ஆங்கிலம்: National Consultative Council); தலைவராக இருந்தார்.

அதன் பிறகு, 1971-ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கை (New Economic Policy 1971-1990) தொடங்கப்பட்டது.

சமூகங்களுக்கு இடையில் சமத்துவம்

[தொகு]

மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவது; மலேசியாவின் சீனர் சமூகம், இந்தியர்ச் சமூகம் ஆகிய இரு சமூகங்களுக்கும்; மலாய் பூமிபுத்ரா சமூகத்திற்கும் இடையே நிலவிய பொருளாதார இடைவெளியைக் குறைப்பது; பொருளாதாரச் சமத்துவத்தை உருவாக்குவதே அந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கமாகும்.

மலேசியாவின் ருக்குன் நெகாரா கோட்பாடு, அண்டை நாடான இந்தோனேசியாவின் பஞ்ச சீலா (Pancasila) தேசிய சித்தாந்தத்துடன் ஒத்து உள்ளது.[2]

ருக்குன் நெகாரா கோட்பாடுகள்

[தொகு]
தமிழ் மொழியில்
ருக்குன் நெகாரா
ஆங்கில மொழியில்
ருக்குன் நெகாரா
மலாய் மொழியில்
ருக்குன் நெகாரா

நாங்கள், மலேசியாவில் வாழ்பவர்கள், இந்தக் கொள்கைகளால் வழிநடத்தப்படும் இலக்குகளை அடைவதற்கு எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளை வழங்குவோம் என்று உறுதி அளிக்கிறோம்:

  1. இறைவன் மீது நம்பிக்கை வைப்போம்
  2. பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துவோம்
  3. அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடிப்போம்
  4. சட்ட முறைப்படியான ஆட்சி நடத்துவோம்
  5. நன்னடத்தை ஒழுக்கத்தைப் பேணுவோம்

WE, residents of Malaysia, pledge our united efforts to attain these ends guided by these principles:

  1. BELIEF IN GOD
  2. LOYALTY TO KING AND COUNTRY
  3. SUPREMACY OF THE CONSTITUTION
  4. RULE OF LAW
  5. COURTESY AND MORALITY

MAKA KAMI, rakyat Malaysia, berikrar akan menumpukan seluruh tenaga dan usaha kami untuk mencapai cita-cita tersebut berdasarkan atas prinsip-prinsip yang berikut:

  1. KEPERCAYAAN KEPADA TUHAN
  2. KESETIAAN KEPADA RAJA DAN NEGARA
  3. KELUHURAN PERLEMBAGAAN
  4. KEDAULATAN UNDANG-UNDANG
  5. KESOPANAN DAN KESUSILAAN

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jeong, Chun Hai, 1973- (2007). Principles of public administration : an introduction. Nor Fadzlina Nawi. Shah Alam, Selangor: Karisma Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-195-253-5. இணையக் கணினி நூலக மைய எண் 298421717.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. "Rukun Negara and Pancasila: The parallels". www.astroawani.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருக்குன்_நெகாரா&oldid=3931141" இலிருந்து மீள்விக்கப்பட்டது