யாங் டி பெர்துவா சபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாங் டி பெர்துவா சபா
Yang di-Pertua Sabah
தற்போது
ஜுகார் மகிருடின்

1 சனவரி 2011 முதல்
வாழுமிடம்இசுதானா ஸ்ரீ கினபாலு
Istana Seri Kinabalu
அஞ்சல் பெட்டி 10093, 88500 கோத்தா கினபாலு[1]
நியமிப்பவர்யாங் டி பெர்துவான் அகோங்
பதவிக் காலம்4 ஆண்டுகள்
(மாமன்னர் விருப்பத்தின் பேரில்)
முதலாவதாக பதவியேற்றவர்முசுதபா அருண்
உருவாக்கம்16 செப்டம்பர் 1963
இணையதளம்ww2.sabah.gov.my/istana/

யாங் டி பெர்துவா சபா (ஆங்கிலம்: Sabah Governor; மலாய்: Yang di-Pertua Negeri of Sabah) என்பது மலேசிய மாநிலமான சபா மாநிலத்தின் கவர்னர் (Governor) எனும் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி. யாங் டி பெர்துவா என்பவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம்.

சபா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஜுகார் மகிருடின் (Juhar Mahiruddin). இவர் 2011 சனவரி 1-ஆம் தேதி பதவியேற்றார்.

நியமனம்[தொகு]

சபா மாநிலத்தின் அரசியலமைப்பின் பிரிவு 1 (1)-இன் கீழ் (Article 1 (1) of the Constitution) யாங் டி பெர்துவா நெகிரி (ஆளுநர்) பதவி நிறுவப்பட்டது. சபா மாநிலத்தின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு, மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் இந்தப் பதவிக்கான ஆளுநர் நியமிக்கப் படுகிறார்.[2]

யாங் டி பெர்துவா சபா ஆளுநருக்கு துணை ஆளுநர்; அல்லது உதவியாளர் எவரும் இல்லை. இருப்பினும், நோய் அல்லது உடல்நலப் பாதிப்பு காரணமாக சபா மாநிலத்தை ஆட்சி செய்ய இயலாமல் போனால், அவரின் செயல்பாட்டைத் தொடர்வதற்கு, வேறு ஒரு நபரை நியமிக்கும் அதிகாரத்தை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள் பெற்று உள்ளார்.

பொது[தொகு]

யாங் டி பெர்துவா நெகிரி (ஆங்கிலம்: Yang di-Pertua Negeri; மலாய்: Yang di-Pertua Negeri) என்பது; மலேசிய மாநிலங்களான பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி.

இந்தப் பதவி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படும் பதவி ஆகும். இருப்பினும், யாங் டி பெர்துவா நெகிரியின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அதிகாரம் மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களிடம் மட்டுமே உள்ளது.

சபா மாநிலத்தின் முதல்வரின் சம்மதத்தைப் பெற்ற பின்னர் தான், யாங் டி பெர்துவா நெகிரி நியமிக்கப் படுகிறார்கள்.[3]

அதிகாரங்கள்[தொகு]

யாங் டி பெர்துவான் அகோங் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போல சபா மாநில யாங் டி பெர்துவா நெகிரிக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இருப்பினும் நீதித் துறையில் சபா மாநில யாங் டி பெர்துவா நெகிரிக்கு குறைந்த அளவு அதிகாரங்களே வழங்கப்பட்டு உள்ளன.

ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவா நெகிரி, அந்த மாநிலத்தின் தலைவராகப் பொறுப்பு வகிப்பதால், அவர் மலேசிய மன்னர்கள் மாநாட்டில்; (ஆங்கிலம்: Conference of Rulers அல்லது Council of Rulers அல்லது Durbar; மலாய்: Majlis Raja-Raja ஜாவி: مجليس راج); கலந்து கொள்ள முடியும்.

தனிப்பட்ட விருப்பங்கள்[தொகு]

ஆனால், மலேசியாவின் மாமன்னராகும் அதிகாரம் மட்டும் ஒரு யாங் டி பெர்துவா நெகிரிக்கு வழங்கப்படவில்லை. சபா மாநிலத்தின் அரசியலமைப்பு 10-ஆவது விதியின்படி (Article 10 of the Constitution) மாநிலச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். ஆனாலும் சில கட்டங்களில் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் முடிவுகளை வழங்க இயலும்.[4]

சபா மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டம்; சபா மாநிலத்தில் முக்கியமான அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கு மாநில ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

ஆளுநரின் அதிகாரங்கள்[தொகு]

இருப்பினும் மாநிலத்தின் முதலமைச்சரை நியமிப்பதைத் தவிர்த்து, மற்ற உயர் அரசாங்க அதிகாரிகளை நியமிக்கும் போது முதலமைச்சருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதன் பின்னரே அரசாங்க அதிகாரிகளை நியமிக்கலாம். ஓர் அலுவலக அதிகாரியைப் பணிநீக்கம் செய்யும் போதும் இதே செயல்முறை நீடிக்கின்றது.

சபா மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலச் சட்டமன்றத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் விவரமாக விவரிக்கப்பட்டு உள்ளன.

மாநிலச் சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த மசோதாவிற்கு யாங் டி பெர்துவா நெகிரி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே வேளையில், ஒவ்வோர் ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் யாங் டி பெர்துவா நெகிரி உரையாற்ற வேண்டும்.

நிர்வாகம்[தொகு]

மாநிலச் சட்டமன்றத்தில் யாங் டி பெர்துவா நெகிரியின் முக்கியமான செயல்பாடுகள்:

 • பெரும்பான்மை பெற்ற பிரதான கட்சியின் தலைவரை முதலமைச்சராக (ஆங்கிலம்: Ketua Menteri; மலாய்: Chief Minister) நியமிப்பது;
 • மாநிலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை (Executive Council) நியமிப்பது; (சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அமைச்சரவை (Cabinet) என அழைக்கப்படுகிறது);
 • மாநில அரசாங்கத்தின் துறைத் தலைவர்களை நியமிப்பது;
 • மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கு ஒப்புதல் அளிப்பது;
 • மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுதலைத் தடுத்து நிறுத்துவது;
 • அரச விருதுகள்; அரச பதக்கங்கள் வழங்குவது;
 • மாநிலத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது; (இந்தக் குற்றங்களில் இராணுவக் குற்றங்கள் மற்றும் சிரியா குற்றங்களுக்கு யாங் டி பெர்துவான் அகோங் மட்டுமே மன்னிப்பு வழங்க இயலும்).

சபா யாங் டி பெர்துவா பட்டியல்[தொகு]

1965-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான சபா மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[2][5] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)

நிலை தோற்றம் யாங் டி பெர்துவா பதவி காலம்
பதவியேற்பு முடிவு சேவை செய்த காலம்
1 முஸ்தபா அருண்
Mustapha Harun
16 செப்டம்பர் 1963 16 செப்டம்பர் 1965 2 ஆண்டுகள், 0 நாட்கள்
2 பெங்கிரான் அகமது ரபி
Pengiran Ahmad Raffae
16 செப்டம்பர் 1965 16 செப்டம்பர் 1973 8 ஆண்டுகள், 0 நாட்கள்
3 புவாட் ஸ்டீபன்ஸ்
Fuad Stephens
16 செப்டம்பர் 1973 28 சூலை 1975 1 ஆண்டு, 315 நாட்கள்
4 முகமட் அம்டான் அப்துல்லா
Mohd Hamdan Abdullah
28 சூலை 1975 10 அக்டோபர் 1977 2 ஆண்டுகள், 74 நாட்கள்
5 அகமட் கோரோ
Ahmad Koroh
12 அக்டோபர் 1977 25 சூன் 1978 0 ஆண்டுகள், 256 நாட்கள்
6 முகமட் அட்னான் ரோபர்ட்
Mohamad Adnan Robert
25 சூன் 1978 31 திசம்பர் 1986 8 ஆண்டுகள், 189 நாட்கள்
7 முகமட் சாயிட் கெருவாக்
Mohammad Said Keruak
1 சனவரி 1987 31 திசம்பர் 1994 7 ஆண்டுகள், 364 நாட்கள்
8 சக்காரான் டாண்டாய்
Sakaran Dandai
1 சனவரி 1995 31 திசம்பர் 2002 7 ஆண்டுகள், 364 நாட்கள்
9 அகமட் ஷா அப்துல்லா
Ahmadshah Abdullah
1 சனவரி 2003 31 திசம்பர் 2010 7 ஆண்டுகள், 364 நாட்கள்
10 ஜுகார் மகிருடின்
Juhar Mahiruddin
1 சனவரி 2011 இன்று வரையில் தொடர்கிறது

மேற்கோள்கள்[தொகு]

 1. "Istana Negeri".
 2. 2.0 2.1 "Yang di-Pertua Negeri". Sabah Government. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
 3. "Section 19A, Eighth Schedule, Federal Constitution of Malaysia" (PDF). Archived from the original (PDF) on 10 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020.
 4. "Constitution of the State of Sabah: Part 1" (PDF). Attorney-General's Chamber of the State of Sabah. Archived from the original (PDF) on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.
 5. "Mantan Tuan Yang Terutama Yang di-Pertua Negeri Sabah". Sabah Government. பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்_டி_பெர்துவா_சபா&oldid=3591350" இலிருந்து மீள்விக்கப்பட்டது