பகாங் சுல்தான்
பகாங் சுல்தான் Sultan of Pahang Sultan Pahang Darul Makmur کلنتنسلطان ڤهڠ | |
---|---|
மாட்சிமிகு பகாங் சுல்தான் அப்துல்லா | |
வாரிசு தெங்கு அசனல் இப்ராகிம் ஆலாம் சா (Tengku Hassanal Ibrahim Alam Shah) | |
ஆட்சிக்காலம் | பகாங் சுல்தான் பதவியில்: (11 சனவரி 2019 - இன்று வரையில்) |
முடிசூட்டுதல் | 11 சனவரி 2019 |
முன்னையவர் | பகாங் சுல்தான் அகமட் சா (Sultan Ahmad Shah of Pahang) |
பிறப்பு | இயற்பெயர்: Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah 30 சூலை 1959 இசுதானா மங்கா துங்கல், பெக்கான், பகாங், மலாயா (இன்றைய பெக்கான், மலேசியா) |
துணைவர் | துங்கு அமீனா மைமுனா (தி. 1986) ஜூலியா ரைசு (தி. 1991) |
மரபு | ஜொகூர் லாமா பெண்டகாரா (Bendahara Johor Lama) |
தந்தை | பகாங் சுல்தான் அகமட் சா |
தாய் | தெங்கு அம்புவான் அப்சான் |
பகாங் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Pahang; மலாய்: Sultan Pahang Darul Makmur) என்பவர் பகாங் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், பகாங் மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், பகாங் சுல்தான் என்பவர் பகாங் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவரும் ஆவார்.
தற்போதைய பகாங் சுல்தான் அப்துல்லா 2019 சனவரி 24-ஆம் தேதி, தன் தந்தைக்குப் பின்னர், பகாங் மாநிலத்தின் சுல்தான் பதவியை ஏற்றார். இவர், பகாங் மாநிலத்தின் 6-ஆவது சுல்தான் ஆவார்.[1]
பொது
[தொகு]பகாங் மாநிலத்தின் சுல்தான்கள், பொதுவாக மலாக்காவின் மன்னர்களின் வம்சாவளியையும்; மற்றும் ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசர் நீல உத்தமனின் வழித்தோன்றல்களையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். நீல உத்தமன், 1299-இல் சிங்கப்பூர் அரசைத் தோற்றுவித்தவர் ஆகும்.[2]
மலாக்கா சுல்தானகத்தின் ஆறாவது அரசர் சுல்தான் மன்சூர் ஷா மற்றும் இளவரசி ஓனாங் சாரி ஆகியோரின் மகனான சுல்தான் மகமுட் ஷா, பகாங் மாநிலத்தின் முதல் சுல்தானாக நியமிக்கப்பட்ட காலத்தில் பகாங் சுல்தானகம் இருந்ததாக அறியப்படுகிறது. அதற்கு முன்னர், பகாங் இராச்சியம், சயாம் இராச்சியத்தின் ஆட்சியில் இருந்தது.[3]
வரலாறு
[தொகு]14-ஆம் நூற்றாண்டில், பகாங் இராச்சியம் மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு கட்டத்தில் மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தே விடுபட்டு, மலாக்காவிற்கே ஒரு போட்டி மாநிலமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.[4] 1511-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றும் வரையில் மலாக்காவிற்குப் போட்டி அரசாகவும் விளங்கியது.
பகாங் சுல்தானகம் அதன் செல்வாக்கின் உச்சத்தில் இருந்தபோது, தென்கிழக்கு ஆசிய வரலாற்றில் ஒரு முக்கிய சக்தியாக இருந்தது. பகாங் படுகை முழுமையையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. அத்துடன் வடக்கில் பட்டாணி இராச்சியம், தெற்கில் ஜொகூர் சுல்தானகம்; மேற்கில் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் பகுதிகளையும் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.[5] இந்தக் காலகட்டத்தில், வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளான போர்ச்சுகல், டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் அச்சே சுல்தானகம் ஆகியவற்றை அகற்றும் முயற்சிகளிலும் பெரிதும் ஈடுபட்டது.[6]
17-ஆம் நூற்றாண்டில் அச்சே சுல்தானகத்தின் தாக்குதல்களுக்குப் பிறகு, ஜொகூர் சுல்தானகத்துடன் பகாங் சுல்தானகம் ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது. அந்த வகையில் பகாங்கின் 14-ஆவது சுல்தான், அப்துல் சலீல் சா III, 7-ஆவது ஜொகூர் சுல்தானாக முடிசூட்டப்பட்டார்.[7] ஜொகூருடன் சமரசம் செய்து கொண்ட பிறகு, 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்டகாரா வம்சாவளியில் ஒரு நவீன இறையாண்மை கொண்ட சுல்தானமாகவும் பகாங் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tengku Abdullah to be proclaimed Pahang sultan on Jan 15". MalaysiaKini. 12 January 2019. https://www.malaysiakini.com/news/459940.
- ↑ Singapore. Ministry of Culture, Singapore. Ministry of Communications and Information. Information Division (1973). Singapore facts and pictures. Singapore: Ministry of Culture. p. 9. பன்னாட்டுத் தர தொடர் எண் 0217-7773.
- ↑ "Sejarah Kesultanan Pahang". Laman Komuniti Pekan. Laman Komuniti Pekan. Archived from the original on 21 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ahmad Sarji Abdul Hamid 2011, ப. 80
- ↑ Linehan 1973, ப. 31
- ↑ Ahmad Sarji Abdul Hamid 2011, ப. 79
- ↑ Ahmad Sarji Abdul Hamid 2011, ப. 81
- ↑ Ahmad Sarji Abdul Hamid 2011, ப. 83
நூல்கள்
[தொகு]- Ahmad Sarji Abdul Hamid (2011), The Encyclopedia of Malaysia, vol. 16 – The Rulers of Malaysia, Editions Didier Millet, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-3018-54-9
- Farish A Noor (2011), From Inderapura to Darul Makmur, A Deconstructive History of Pahang, Silverfish Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-3221-30-1
- Guy, John (2014), Lost Kingdoms: Hindu-Buddhist Sculpture of Early Southeast Asia, Metropolitan Museum of Art, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300-204-37-7
- Khoo, Gilbert (1980), "From Pre-Malaccan period to present day", New Straits Times
- Linehan, William (1973), History of Pahang, Malaysian Branch of the Royal Asiatic Society, Kuala Lumpur, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710-101-37-2
- Rajani, Chand Chirayu (1987), Towards a history of Laem Thong and Sri Vijaya (Asian studies monographs), Institute of Asian Studies, Chulalongkorn University, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9745-675-01-8