தெம்பிலிங் ஆறு

ஆள்கூறுகள்: 4°04′N 102°19′E / 4.067°N 102.317°E / 4.067; 102.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெம்பிலிங் ஆறு
Tembeling River
Sungai Tembeling
அமைவு
நாடு மலேசியா
சிறப்புக்கூறுகள்
மூலம்தித்திவாங்சா மலைத்தொடர்
 ⁃ அமைவுஉலு தெம்பிலிங்
முகத்துவாரம்பகாங்: குவாந்தான், தென்சீனக் கடல்
நீளம்110 கி.மீ.
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிகோலா தகான், கோலா தெம்பிலிங், குவாந்தான் மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம், பெக்கான் மாவட்டம்,
வடிநிலம்குவாந்தான்

தெம்பிலிங் ஆறு; (மலாய்: Sungai Tembeling; ஆங்கிலம்: Tembeling River) என்பது பகாங் மாநிலத்தின் ஆறுகளில் ஒன்றாகும். மலேசியா, பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத்தொடரில் (Titiwangsa Mountains) உருவாகி தாமான் நெகாரா (Taman Negara) எனும் தேசியப் பூங்கா வழியாகச் சென்று தென் சீனக் கடலில் (South China Sea) கலக்கும் பகாங் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும்.[1]

இந்த ஆறு, மற்ற பகாங் மாநில ஆறுகளைப் போல தகான் மலையில் தான் உருவாகிறது. கோலா தெம்பிலிங் எனும் இடத்தில் பகாங் ஆற்றுடன் இணைவதால் இதற்கு தெம்பிலிங் ஆறு என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.[2]

கோலா தெம்பிலிங்[தொகு]

கோலா தெம்பிலிங் (Kuala Tembeling) என்பது மலேசியா, பகாங் மாநிலம், ஜெராண்டுட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். ஜெராண்டுட் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

மலேசிய தேசியப் பூங்காக்களில் மிக முக்கியமான தாமான் நெகாரா (Taman Negara) பூங்காவிற்குச் செல்லும் நுழைவாயில் நகரமாக கோலா தெம்பிலிங் விளங்குகிறது. அத்துடன் தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரின் (Titiwangsa Mountains Range) அடிவாரத்தில், சில கி.மீ. அப்பால் இந்த நகரம் அமைந்துள்ளது.[3]

கோலா தெம்பிலிங் படகுதுறை[தொகு]

தெம்பிலிங் ஆறு (Tembeling River) மற்றும் ஜெலாய் ஆறு (Jelai River) ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கோலா தெம்பிலிங் அமைந்துள்ளது. கோலா தெம்பிலிங்கில் உள்ள படகுதுறை மூலமாக தாமான் நெகாராவிற்குச் செல்லும் மாற்று இடமாகவும் (Transfer Point) செயல்படுகிறது.[4]

இந்த படகுதுறை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தெம்பிலிங் ஆற்றின் அழகிய இயற்கைக் காட்சிகளை அனுபவிக்க விரும்புகிறார்கள். இந்த படகுத் துறையில் இருந்து தாமான் நெகாராவை சுமார் 2 - 3 மணிநேர படகுப் பயணத்தின் மூலமாகச் சென்று அடையலாம்.[5]

தித்திவாங்சா மலைத்தொடர்[தொகு]

தகான் மலைத்தொடர் என்பது தெனாசிரிம் மலைத்தொடரில் ஒரு பகுதியாகும். தெனாசிரிம் மலைத்தொடர் என்பது தென்கிழக்காசியாவில் 1,700 கி.மீ. நீளத்திற்கு பர்மா, தாய்லாந்து, தீபகற்ப மலேசியா நாடுகளில் படர்ந்து இருக்கும் ஒரு மலைத்தொடராகும்.[6]

தீபகற்ப மலேசியாவில் உள்ள மலைகளில் குனோங் தகான் மலையில் ஏறுவதற்கு கடினமாக இருக்கும் என்று மலையேறுபவர்கள் கருத்து கூறுகின்றனர்.[7]

தாமான் நெகாரா[தொகு]

தாமான் நெகாரா (Taman Nagara) என்பது ஒரு தேசியப் பூங்காவாகும். 4,343 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. உலகிலேயே மிகப் பழைமையான வெப்ப மண்டல மழைக்காடுகளைக் கொண்ட வனப்பூங்கா என்றும் புகழ்பெற்றது. இந்தக் காடுகள் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை இங்கு தான் தகான் மலை இருக்கிறது..[8]

கோலா தகான் சிறுநகரில் இருந்து, தகான் மலையை அடைவதற்கு 54 கி.மீ. காட்டுப் பயணப்பாதை உள்ளது. ஏப்ரல், மே, ஜூன், சூலை மாதங்களே மலை ஏறுவதற்கு பொருத்தமான காலம் ஆகும். நவம்பர் மாதத்தில் இருந்து சனவரி மாதம் வரையிலான மழைக் காலங்களில், மலையேறும் நடவடிக்கைகள் தடை செய்யப் படுகின்றன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GPS coordinates of Tembeling River, Malaysia. Latitude: 4.0667 Longitude: 102.3167 - Tembeling River is a river in Pahang, Malaysia". Latitude.to, maps, geolocated articles, latitude longitude coordinate conversion. (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
  2. "Taman Negara National Park". www.malaysiasite.nl. பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
  3. Minihane, Joe (3 October 2012). "Getting to and doing Taman Negara, Malaysia by yourself". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 15 April 2020.
  4. "Taman Negara National Park is the perfect place if you love rainforest and outdoor activities. Experience walking on the world's longest canopy walkway, visiting the aborigine village, trekking under rainforest canopy, climbing the highest mountain in Peninsular Malaysia, caving, fishing, camping, observing wildlife,". Taman Negara. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  5. "Kuala Tembeling: This route is popular among foreign tourists as most of them want to enjoy the river and panoramic view along Sungai Tembeling which takes about 2. 5 – 3 hour boat ride to Kuala Tahan, Taman Negara". Taman Negara. 3 March 2017. பார்க்கப்பட்ட நாள் 26 June 2023.
  6. Tenasserim Hills or Tenasserim Range is the geographical name of a roughly 1,700 km long mountain chain, part of the Indo-Malayan mountain system in Southeast Asia.
  7. Gunung Tahan may not be the highest mountain, but it sure poses one of the most challenging trails in Malaysia.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. The Taman Negara is a grandmother to the rest of the world’s rainforests. During the Ice Ages, when immense glaciers covered much of the Earth, Malaysia was blessed with a location far enough away from the ice.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

பொதுவகத்தில் Tembeling River பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெம்பிலிங்_ஆறு&oldid=3750664" இலிருந்து மீள்விக்கப்பட்டது