லேடாங் மலை தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 2°22′N 102°36′E / 2.367°N 102.600°E / 2.367; 102.600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேடாங் மலை தேசியப் பூங்கா
Gunung Ledang National Park
ஐயுசிஎன் வகை Iஏ (Strict Nature Reserve)
லேடாங் மலை நீர்வீழ்ச்சி
அமைவிடம்மலேசியா
அருகாமை நகரம்தங்காக்
ஆள்கூறுகள்2°22′N 102°36′E / 2.367°N 102.600°E / 2.367; 102.600
பரப்பளவு60 km2 (23 sq mi)
நிறுவப்பட்டது1969

லேடாங் மலை தேசியப் பூங்கா; (மலாய்: Taman Negara Gunung Ledang; ஆங்கிலம்: Gunung Ledang National Park) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலம், தங்காக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும்.[1] இந்தப் பூங்கா 2005-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் சுமார் 160 வகையான பறவைகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.[2]

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. லேடாங் மலை (மலாய் மொழி: Gunung Ledang; ஆங்கிலம்: Mount Ophir), மலேசியா, ஜொகூர் - மலாக்கா மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது. தங்காக் நகரில் இருந்தும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.[3]

அமைவிடம்[தொகு]

தித்திவாங்சா மலைத் தொடரின் தென் கோடியில் அமைந்து இருக்கும் லேடாங் மலை தேசியப் பூங்கா, மலாக்கா வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது.[4]

மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த மலையை, தமிழில் லேடாங் மலை என்று அழைக்கிறார்கள். லேடாங் மலையை தங்காக் நகரில் இருந்து தெளிவாகப் பார்க்லாம்.[5] மலையேறிகள், பறவைப் பார்வையாளர்கள், இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் லேடாங் மலையில், மிதவெப்ப மண்டல காடுகளின் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இங்கே பல சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.

லேடாங் அருவி[தொகு]

லேடாங் அருவி அல்லது அசகான் அருவி எனும் பெயரில் இங்கு ஒரு பொழுதுபோக்குச் சார்ந்த பகுதி இருக்கிறது. வார இறுதி நாட்களில், பொது மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்தப் பொழுது போக்குத் தளத்தில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. லேடாங் மலையில் இருந்து பெருகி வரும் தெளிந்த நீரோட்டம் மக்களைக் கவர்கின்றது. இயற்கை விரும்பிகளுக்கு ஓர் அமைதியான இடம்.[6]

‘சவுஜானா அசகான்’ (மலாய்: Saujana Asahan) எனும் தன்முனைப்புத் தூண்டுதல் மையமும் இங்கு இருக்கிறது. லேடாங் மலையின் அடிவாரத்தில், அந்த மையம் இருக்கிறது. இங்கு முகாம் திடல்கள், வனவலம், மலையேற்றம், பாறையேற்றம், பறவைகள் பார்த்தல் போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்து தரப் படுகின்றன. அரசாங்க அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் அந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.[7]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


2°22′N 102°36′E / 2.367°N 102.600°E / 2.367; 102.600{{#coordinates:}}: cannot have more than one primary tag per page