தெனாசிரிம் மலைத்தொடர்
தெனாசிரிம் மலைத்தொடர் Banjaran Tanah Seri Tenasserim Hills | |
---|---|
တနင်္သာရီ တောင်တန်း ทิวเขาตะนาวศรี بنجرن تنه سري | |
காஞ்சனபுரி மாநிலத்தின் குவாய் ஆற்றில் இருந்து மலைத்தொடர் காட்சி | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | குனோங் தகான் (மலேசியா) |
உயரம் | 2,187 m (7,175 அடி) |
ஆள்கூறு | 4°38′00″N 102°14′00″E / 4.63333°N 102.23333°E |
பரிமாணங்கள் | |
நீளம் | 1,670 km (1,040 mi) |
அகலம் | 130 km (81 mi) |
புவியியல் | |
நாடுகள் | மியான்மர்; மலேசியா தாய்லாந்து |
மூலத் தொடர் | இந்தோ மலாயா மலைத்தொடர் |
எல்லைகள் | டாவுனா மலைத்தொடர் (Dawna Range) சான் மலைகள் (Shan Hills) தாய் உயர்நிலம் (Thai highlands) |
நிலவியல் | |
பாறையின் வயது | பேர்மியன் காலம்; திரியாசிக் காலம் |
பாறை வகை | கருங்கல்; சுண்ணக்கல் |
தெனாசிரிம் மலைத்தொடர் அல்லது தெனாசிரிம் மலைகள் (மலாய்: Banjaran Tanah Seri / Banjaran Tenang Sari; ஆங்கிலம்: Tenasserim Hills / Tenasserim Range பர்மியம்: တနင်္သာရီ တောင်တန်း; தாய் மொழி: ทิวเขาตะนาวศรี / Thio Khao Tanao Si); சீனம்: 丹那沙林山脉) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோ-மலாயா மலை அமைப்பின் (Indo-Malayan Mountain System) புவியியல் பெயராகும். இந்த மலைச் சங்கிலி சுமார் 1,700 கி.மீ. நீளம் கொண்டது.
இந்த மலைகள் தாய்லாந்து மற்றும் மியான்மர் இடையே அவற்றின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஒரு முக்கியமான எல்லைத் தடைகளாக அமைகின்றன.
பொது
[தொகு]இந்த பரந்த மலைத் தொடரின் தெற்குப் பகுதி கிரா பூசந்தி (Kra Isthmus) வழியாக தீபகற்ப மலேசியாவை கடந்து; சிங்கப்பூருக்கு மிக அருகில் முற்றுப் பெறுகிறது. இந்த மலைத் தொடரின் மூலமாக மலேசியா; தாய்லாந்து நாடுகளில் பல ஆறுகள் உருவாகின்றன.[1]
புவியியல்
[தொகு]நீண்ட கரும் கற்களான மலை முகடுகளைக் கொண்ட தெனாசிரிம் மலைகள் இமயமலையை விட பழமையானவை. இந்த மலைகளின் பெரும் பகுதிகளில் அடர்ந்த வெப்பமண்டல ஈரமான காடுகள் (Tropical Moist Forests) படர்ந்து உள்ளன.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Table A1-1-1a. Prospective projects in Mekong sub-region பரணிடப்பட்டது 4 மே 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "geology of Thailand". Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
- ↑ James, Helen (2004). "Burma-Siam Wars and Tenasserim". In Keat Gin Ooi (ed.). Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor, Volume 2. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-770-5.