தாம் இலுவாங் நாங் நோன்

ஆள்கூறுகள்: 20°22′54″N 99°52′06″E / 20.38167°N 99.86833°E / 20.38167; 99.86833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம் இலுவாங் நாங் நோன்
தாம் இலுவாங்
தாம் நாம் சம்
தாம் யெய்
குகை நுழைவு - 2018இல் எடுக்கப்பட்டது
அமைவிடம்தாம் இலுவாங்-குன் நாம் நாங் நோன் வனப்பூங்கா, மோய் சாய் மாவட்டம், சியாங் ராய் மாகாணம், தாய்லாந்து
ஆள்கூறுகள்20°22′54″N 99°52′06″E / 20.38167°N 99.86833°E / 20.38167; 99.86833
ஆழம்85 மீட்டர்கள் (279 அடி)
நீளம்10.3 கிலோமீட்டர்கள் (6.4 mi)
இடையூறுகள்பருவமழை வெள்ளம்
வழிசுற்றுலாக் காலம் - நவம்பர் – சூன்)
Lightingஇல்லை[1]

தாம் இலுவாங் நாங் நோன் (Tham Luang Nang Non, தாய் மொழி: ถ้ำหลวงนางนอน, lit. 'Great Cave of the Sleeping Lady') வடக்கு தாய்லாந்தில், சியாங் ராய் மாகாணத்தின், மோய் சாய் மாவட்டத்தில் உள்ள போங் பா சிற்றூரருகே உள்ள தாம் இலுவாங்-குன் நாம் நாங் நோன் வனப்பூங்காவிலுள்ள சுண்ணக்கரட்டு குகையமைப்பாகும்.[2] இது மியான்மர் எல்லையில் உள்ள தோய் நாங் நோன் மலைத்தொடர் கீழே அமைந்துள்ளது.

இக்குகை சூலை 2, 2018 முதல் உலகளவில் பெரும் ஈர்ப்பைப் பெற்றது; இக்குகையில் இளையோர் காற்பந்தாட்ட அணியின் 12 சிறுவர்களும் அவர்களது உதவிப் பயிற்சியாளரும் குகையின் ஆழ்பகுதியில் சிக்கிக் கொண்டனர். சூன் 23, 2018 அன்று ஏற்பட்ட பருவமழை வெள்ளத்தால் இவ்வாறு சிக்கிக்கொண்டனர். சூலை 10 அன்று இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.[3] இம்முயற்சியில் தாய்லாந்தின் மீட்பு மூழ்காளர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]