உள்ளடக்கத்துக்குச் செல்

பெக்கான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெக்கான் மாவட்டம்
Pekan District
Daerah Pekan

பகாங்
பெக்கான் மாவட்டம்
பெக்கான் மாவட்டம்
பெக்கான் மாவட்டம் is located in மலேசியா
பெக்கான் மாவட்டம்
      பெக்கான் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°30′N 103°25′E / 3.500°N 103.417°E / 3.500; 103.417
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம்பெக்கான்
தொகுதிபெக்கான்
உள்ளூராட்சிபெக்கான் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்3,846.14 km2 (1,485.00 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்1,21,158
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
26xxx
தொலைபேசி+6-09
போக்குவரத்து எண்C
பெக்கான் மாவட்டம்

பெக்கான் மாவட்டம் (ஆங்கிலம்: Pekan District; மலாய்: Daerah Pekan; சீனம்: 北根縣; ஜாவி: ڤکن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் பெக்கான்.

இந்த மாவட்டத்தின் வடக்கில் குவாந்தான் மாவட்டம், கிழக்கில் தென் சீனக் கடல், மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் தெற்கில் ரொம்பின் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

பொது

[தொகு]

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன் அவர்களும்,[1] இப்போதைய பிரதமர் நஜீப் துன் ரசாக்[2] அவர்களும் இந்த நகரில் பிறந்தவர்கள். பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் தந்தையார்தான் துன் அப்துல் ரசாக்.

பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா. இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா என்று அழைத்தனர்.

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

மாரான் மாவட்டத்தில் 11 முக்கிம்கள் உள்ளன:[3]

  • பெக்கான் - Pekan
  • பெபார் - Bebar
  • தெமாய் - Temai
  • லெப்பார் - Lepar
  • கோலா பகாங் - Kuala Pahang
  • லாங்கார் - Langgar
  • கஞ்சோங் - Ganchong
  • பகாங் துவா - Pahang Tua
  • புலாவ் மானிஸ் - Pulau Manis
  • புலாவ் ரூசா - Pulau Rusa
  • பென்யோர் - Penyor

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி

[தொகு]
நாடாளுமன்றம்தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்கட்சி
P85 பெக்கான் மக்களவைத் தொகுதிமுகமது புசி அலி
(Mohmed Puzi Ali)
பாரிசான்
(அம்னோ)
நாடாளுமன்றம்தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்கட்சி
P85 பெக்கான்நஜீப் துன் ரசாக்தேசிய முன்னணி

பெக்கான் சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

நாடாளுமன்றம்மாநிலம்தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
P85 N20புலாவ் மானிஸ்கைருடின் முகமட்தேசிய முன்னணி
P85 N21பெராமு ஜெயாஇப்ராஹிம் அகமட் முகமட்தேசிய முன்னணி
P85 N22பேபார்இஷாக் முகமட்தேசிய முன்னணி
P85 N23சினிஅபு பாக்கார் ஹருண்தேசிய முன்னணி

மக்கள்தொகையியல்

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 86,179—    
2000 97,751+13.4%
2010 1,05,587+8.0%
2020 1,21,158+14.7%

பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

பெக்கான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம்மக்கள்
தொகை
விழுக்காடு
பூமிபுத்ரா101,95396.9%
சீனர்1,3731.3%
இந்தியர்3920.4%
மற்றவர்1,5001.4%
மொத்தம்105,218100%

மேற்கோள்

[தொகு]
  1. ↑ Office of the Prime Minister of Malaysia
  2. ↑ Official Biography. 1malaysia.com.my. Retrieved on 2012-05-30.
  3. ↑ "Peta&Keluasan". Pejabat Daerah dan Tanah Pekan. Archived from the original on 2018-03-19. Retrieved 2022-06-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கான்_மாவட்டம்&oldid=4178891" இலிருந்து மீள்விக்கப்பட்டது