குவாந்தான்
குவாந்தான் | |
---|---|
Kuantan | |
தலைநகரம் | |
மேலிருந்து, இடமிருந்து வலமாக: குவாந்தான் ஆற்றின் கரையில் குவாந்தான் நகரத்தின் காட்சி; சுல்தான் அகமது ஷா பள்ளிவாசல்; குவாந்தான் 188, குவாந்தான் நகராண்மைக் கட்டடம்; குவாந்தான் நீதிமன்ற வளாகம், தெலுக் செம்பெடாக் கடற்கரை, குவாந்தான் துறைமுகம் மற்றும் குவாந்தன் ஆறு | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | குவாந்தான் |
நிறுவல் | 1851 |
அமைவு | 1 ஆகஸ்து 1913 |
நிர்வாக மையம் | 27 ஆகஸ்து 1955[1] |
நகராண்மைக் கழகம் | 1 செப்டம்பர் 1979[2] |
குவாந்தான் மாநகராட்சி | 21 பிப்ரவரி 2021 |
அரசு | |
• நகர முதல்வர் | அம்டான் உசேன்[3] |
ஏற்றம் | 22 m (72 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 607,778 |
நேர வலயம் | மநே (ஒசநே+8) |
இணையதளம் | http://mpk.gov.my/ |
குவாந்தான் (ஆங்கிலம்: Kuantan; மலாய்: Kuantan; சீனம்: 關丹; ஜாவி: ڤكوانتن); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் ஒரு நகரம். அதுவே அந்த மாநிலத்தின் தலைநகரமாகும். மலேசியாவின் 18-ஆவது பெரிய நகரமான குவாந்தான், ஏறக்குறைய 324 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.
குவாந்தான் மாநகரம், குவாந்தான் ஆற்றுக்கு அருகாமையிலும்; தென் சீனக் கடலை நோக்கியவாறு அமையப் பெற்று இருக்கிறது. பகாங் மாநிலத்தின் ஆட்சி மையம், 1955-ஆம் ஆண்டு வாக்கில் கோலா லிப்பிஸ் நகரில் இருந்து குவாந்தான் மாநகரத்திற்கு மாற்றப்பட்டது.
பொது[தொகு]
முதலாம் நூற்றாண்டில் சிது, ஆங்கிலம்: Chih-Tu; or Chihtu; or Ch-ih-t'u;; சமசுகிருதம்: Raktamaritika or Raktamrittika; சீனம்: 赤土国; மலாய்: Tanah Merah) எனும் பேரரசின் ஒரு பகுதியாக குவாந்தான் நகரம் இருந்தது. 'சிது' என்றால் 'சிகப்பு மண்' (Red Earth Kingdom) என்று பொருள்.[4][5]
11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா பேரரசாலும் ஆளப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீன சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர்[தொகு]
மற்றும் ஒரு வரலாற்று நிகழ்வு. 1941 டிசம்பர் 9-ஆம் தேதி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் (HMS Prince of Wales); மற்றும் எச்.எம்.எஸ். ரிபல்ஸ் (HMS Repulse) எனும் இரு போர்க் கப்பல்கள் மலாயாவின் கிழக்கு கடற்கரை வழியாகக் குவாந்தான் துறைமுகத்திற்குச் செல்லும் போது, ஜப்பானிய விமானங்களின் குண்டு வீச்சுகளுக்கு இலக்காகி தென்சீனக் கடலில் மூழ்கின.[6]
தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் மிக பெரிய நகரமாக குவாந்தான் நகரம் பெயர் பெற்றது. இந்த நகரத்தில் 607,778 மக்கள் குடியிருக்கின்றனர். இந்த நகரம் தென் சீனக் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்து இருப்பதால், குவாந்தான் மாவட்டம் கடற்கரைகளுக்குப் பிரசித்திப் பெற்றது.
பொருளாதாரம்[தொகு]
குவாந்தான் மாநகரின் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாக அமைவது சுற்றுலாத் துறையாகும். அடுத்த நிலையில் மீன்பிடித் துறையும் விவசாயமும் முன்னிலை வகிக்கின்றன. அண்மைய காலங்களில் மின்னியல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளும் குவாந்தான் நகரில் கட்டப்பட்டு உள்ளன.
தட்பவெப்ப நிலை[தொகு]
குவாந்தானின் தட்ப வெப்ப நிலை வெப்ப மண்டல மழைக்காடு ஆகும். தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை.
தட்பவெப்ப நிலைத் தகவல், Kuantan | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.3 (83) |
30 (86) |
30.6 (87) |
31.7 (89) |
31.7 (89) |
31.7 (89) |
31.7 (89) |
31.7 (89) |
31.1 (88) |
31.1 (88) |
29.4 (85) |
27.8 (82) |
30.6 (87) |
தாழ் சராசரி °C (°F) | 22.2 (72) |
22.2 (72) |
22.8 (73) |
23.3 (74) |
23.9 (75) |
23.3 (74) |
22.8 (73) |
23.3 (74) |
22.8 (73) |
23.3 (74) |
22.8 (73) |
22.8 (73) |
22.8 (73) |
பொழிவு mm (inches) | 300 (11.81) |
170 (6.69) |
180 (7.09) |
170 (6.69) |
190 (7.48) |
160 (6.3) |
160 (6.3) |
170 (6.69) |
230 (9.06) |
270 (10.63) |
310 (12.2) |
440 (17.32) |
2,860 (112.6) |
ஆதாரம்: http://www.weatherbase.com/weather/weather.php3?s=75684&refer=&units=metric |
மக்கள்தொகையியல்[தொகு]
குவாந்தான் நகரில் 78.5% மலாய் மக்களும், 17.9% சீன மக்களும், 3.3% இந்திய மக்களும் மற்றும் 0.3% மற்ற இனத்தாரும் வாழ்கின்றனர்.
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பெக்கான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை |
விழுக்காடு |
பூமிபுத்ரா | 335,599 | 78.5% |
சீனர் | 76,525 | 17.9% |
இந்தியர் | 14,108 | 3.3% |
மற்றவர் | 1,282 | 0.3% |
மொத்தம் | 427,514 | 100% |
குவாந்தான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]
மலேசியா; பகாங்; குவாந்தான் மாவட்டத்தில் (Kuantan District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 365 மாணவர்கள் பயில்கிறார்கள். 46 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
CBD4051 | பண்டார் இந்திரா மக்கோத்தா Bandar Indera Mahkota |
SJK(T) Bandar Indera Mahkota | பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி | 25200 | குவாந்தான் | 287 | 25 |
CBD4052 | பண்டார் டமான்சாரா Bandar Damansara |
SJK(T) Ladang Jeram | ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குவாந்தான்)[7] | 25990 | குவாந்தான் | 42 | 11 |
CBD4053 | பஞ்சிங் Panching |
SJK(T) Ladang Kuala Reman | கோலா ரேமான் தோட்டத் தமிழ்ப்பள்ளி[8] | 26090 | குவாந்தான் | 36 | 10 |
இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியின் செய்திப் படங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Establishment History". Official Portal Pahang State Government. 2018-04-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-06-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "History : The Opening of Kuantan". Majlis Perbandaran Kuantan.
- ↑ primuscoreadmin (19 June 2019). "Profil YDP". 28 ஜனவரி 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 ஜூன் 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7591-0279-1.
- ↑ Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:967-9948-38-2.
- ↑ "On December 10, 1941, the battlecruiser HMS Repulse and battleship HMS Prince of Wales sank off the east coast of Malaysia". History Of Diving Museum. 31 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "SJK T Ladang Jeram di bandar Kuantan". my.worldorgs.com.
- ↑ Reman, Ladang Kuala (11 September 2016). "SEJARAH SEKOLAH". SJK(T) LADANG KUALA REMAN (ஆங்கிலம்). 6 June 2021 அன்று பார்க்கப்பட்டது.