உள்ளடக்கத்துக்குச் செல்

கெமாயான்

ஆள்கூறுகள்: 3°08′N 102°22′E / 3.133°N 102.367°E / 3.133; 102.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமாயான்
Kemayan Town
Bandar Kemayan
கெமாயான் நகரத்தில் பெசார் சாலை (2019)
கெமாயான் நகரத்தில் பெசார் சாலை (2019)
Map
கெமாயான் is located in மலேசியா
கெமாயான்
      கெமாயான்
ஆள்கூறுகள்: 3°08′N 102°22′E / 3.133°N 102.367°E / 3.133; 102.367
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம் பெரா மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
28300
தொலைபேசி+609
போக்குவரத்துப் பதிவெண்C

கெமாயான் (மலாய்: Kemayan; ஆங்கிலம்: Kemayan) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தின் பெரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.[1]

நெகிரி செம்பிலான், பகாவ் நகரத்தில் இருந்து பகாங், தெமர்லோ நகரத்திற்கு செல்லும் வழியில் கெமாயான் நகரம் உள்ளது. அங்கு இருந்து கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை வழியாக குவாந்தான் நகரத்திற்குச் செல்லலாம்.

அமைவு

[தொகு]

மலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பெரா ஏரி (Lake Bera) இந்த நகரத்திற்கு அருகில் உள்ளது. 1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் படுகிறது.

அந்த ஏரியின் பெயரே இந்த நகரத்திற்கும் வைக்கப்பட்டது. பெரா ஏரிப் பகுதியில் செமலை (Semelai) எனும் ஒராங் அஸ்லி பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, பெரா அதன் பெயரை ரெபா (Reba) எனப்படும் ஒரு வகை கடல் பாசியில் இருந்து பெறப்பட்டது.

கெமாயான் தமிழர்கள்

[தொகு]

கெமாயான் நகரின் அதிகமான அளவில் சீனர்கள் வாழ்கிறார்கள். அதற்கும் அடுத்த நிலையில் தமிழர்கள் உள்ளார். இந்த நகரத்தைச் சுற்றிலும் பல பெல்டா (Felda) நிலக் குடியேற்றத் திட்டங்கள் உள்ளன. அங்குள்ள ரப்பர், எண்ணெய்ப்பனை தோட்டங்களில் கணிசமான அளவிற்குத் தமிழர்கள் தொழில் செய்கிறார்கள்.

திரியாங்

[தொகு]

கெமாயான் நகருக்கு அருகில் மற்றொரு நகரம் உள்ளது. அதன் பெயர் திரியாங். தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் திரியாங் நகரமும் ஒன்றாகும். திரியாங் வரலாறு 1800-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தொடங்குகிறது. அப்போது மலாய்க்காரர்கள் அதிகமான மக்கள் தொகை கொண்டவர்களாக இருந்தார்கள். விவசாயம், மீன்பிடித்தல் அவர்களின் வாழ்வாதாரம்.

அதன் பின்னர் 1900-ஆம் ஆண்டுகளில் சீனர்கள் குடியேறினார்கள். ஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் திரியாங் நதி வழியாகவோ அல்லது கால்நடையாகவோ வந்து இருக்கலாம். இவர்களுக்குப் பின்னர் 1920-ஆம் ஆண்டுகளில் அங்கு ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அங்கு வேலை செய்வதற்காக தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

மலாயா தொடருந்து நிறுவனம்

[தொகு]

1900-களின் தொடக்கத்தில் மலாயா தொடருந்து நிறுவனம் இங்கு ஒரு சிறிய தொடருந்து நிலையத்தைக் கட்டியது. சிங்கப்பூரில் இருந்து வந்த தொடருந்துகள் இங்கு நின்று சென்றன.

திரியாங்கில் வந்து குடியேறிய சீனர்கள் பெரும்பாலும் ரப்பர் மரம் சீவுபவர்கள்; மர வியாபாரிகள்; உணவகம் மற்றும் காபி கடையாளர்கள். திரியாங்கில் தொடருந்துகள் நிறுத்தப்படும் போது சிலர் பயணிகளுக்கு உணவைத் தயாரித்துக் கொடுத்தனர்.

கெமாயான் தமிழ்ப்பள்ளி

[தொகு]

கெமாயான் நகரத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அவற்றில் 81 மாணவர்கள் பயில்கிறார்கள். 12 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBDA099 கெமாயான்
Kemayan
SJK(T) Kemayan கெமாயான் தமிழ்ப்பள்ளி[2] 28380 கெமாயான் 81 12

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Info Bera". Majlis Daerah Bera. 12 October 2015.
  2. "SJKT KEMAYAN - 2 Januari 2018 Melaksanakan Program Guru Penyayang untuk mengalu-alukan kehadiran murid pada hari pertama ke sekolah". பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமாயான்&oldid=4091579" இலிருந்து மீள்விக்கப்பட்டது