உள்ளடக்கத்துக்குச் செல்

லிப்பிஸ் மாவட்டம்

ஆள்கூறுகள்: 4°15′N 101°50′E / 4.250°N 101.833°E / 4.250; 101.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிப்பிஸ் மாவட்டம்
Lipis District
Daerah Lipis
லிப்பிஸ் மாவட்டம்
லிப்பிஸ் மாவட்டம்
லிப்பிஸ் மாவட்டம் is located in மலேசியா
லிப்பிஸ் மாவட்டம்
லிப்பிஸ் மாவட்டம்
      லிப்பிஸ் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 4°15′N 101°50′E / 4.250°N 101.833°E / 4.250; 101.833
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம்லிப்பிஸ்
தொகுதிகோலா லிப்பிஸ்
உள்ளூராட்சிலிப்பிஸ் நகராண்மைக் கழகம்
பரப்பளவு
 • மொத்தம்5,168 km2 (1,995 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,13,011
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
27xxx
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்C
லிப்பிஸ் மாவட்டம்

லிப்பிஸ் மாவட்டம் (ஆங்கிலம்: Lipis District; மலாய்: Daerah Lipis; சீனம்: 立卑县; ஜாவி: ﻟﻴﭭﻴﺲ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா லிப்பிஸ். பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது.

பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் கோலா லிப்பிஸ் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; குவாந்தான் நகரில் இருந்து 235 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் உள்ளது.[2]

லிப்பிஸ் மாவட்டத்திற்கு மேற்கில் கேமரன் மலை, கிழக்கில் ஜெராண்டுட்; வடக்கில் ரவுப் ஆகிய நகரங்கள் உள்ளன. தவிர கிழக்கில் பேராக் மாநிலம்; வடக்கில் கிளாந்தான் மாநிலம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

பொது

[தொகு]

பிரித்தானியர்கள் இந்த மாவட்டத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, மக்கள் இங்கு குடியேறி இருந்தனர். 1887-ஆம் ஆண்டில் ரவுப் நகரில் தங்கம் தோண்டி எடுக்கப் பட்டது. அதனால் கோலா லிப்பிஸ் நகரத்திலும், லிப்பிஸ் மாவட்டத்திலும் மக்கள் குடியேற்றம் அதிகமானது.

கோலா லிப்பிஸ் நகரம் 1898-ஆம் ஆண்டில் இருந்து 1955-ஆம் ஆண்டு வரை 57 ஆண்டுகளுக்கு பகாங் மாநிலத்தின் நிர்வாகத் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் குவாந்தான் புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஈயம், தங்கம் போன்ற கனிமங்கள் மற்றும் காட்டுப் பொருட்களின் விளைச்சல்களுக்கு லிப்பிஸ் மாவட்டம் பெயர் பெற்றது. லிப்பிஸ் மாவட்டத்தில் 10 முக்கிம்கள் உள்ளன.

தாமான் நெகாரா தேசியப் பூங்கா

[தொகு]

இந்த மாவட்டத்தில் மெராப்போ எனும் சிறுநகரம் உள்ளது. அங்கு இருந்து 7 கி.மீ. தொலைவில் சுங்கை ரேலாவ் எனும் இடம் உள்ளது. இந்த இடம்தான் தாமான் நெகாரா எனும் தேசியப் பூங்காவின் நுழைவு இடங்களில் ஒன்றாகும்.

தித்திவாங்சா மலைத்தொடரில் இந்த மாவட்டத்தின் நடு மையத்தில் அமைந்து உள்ளது.[3]

தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலையான குனோங் தகான் மலை; இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. குனோங் தகான் மலை ஏறுபவர்கள் கோலா லிப்பிஸ் வந்த பின்னர் கோலா தகான், மெராப்போ வழியாகப் பயணங்களைத் தொடங்குவார்கள்.[4][5]

இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையான உள்ளூர்வாசிகள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி பேச்சு வழக்கைப் பயன்படுத்துகின்றனர்.

மக்கள் தொகையியல்

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 68,276—    
2000 73,557+7.7%
2010 86,484+17.6%
2020 96,620+11.7%

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, லிப்பிஸ் மாவட்டத்தில் 74,581 பேர் வசிக்கின்றனர். பெரும்பான்மையாக மலாய் மக்கள் (85.3%); சீனர்கள் 10.5%; இந்தியர்கள் 4%; மற்றவர்கள் 0.2%.

லிப்பிஸ் மாவட்ட இனக்குழுக்கள் (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 74,694 87.5%
சீனர்கள் 7,630 8.9%
இந்தியர்கள் 2,872 3.4%
மற்றவர்கள் 145 0.2%
மொத்தம் 85,341 100%

மாயா (Mayah) இனத்தைச் சேர்ந்த ஓராங் அஸ்லி மக்களில், மின்டில் மொழி (Mintil language) பேசுபவர்கள் 400 பேர் இந்த லிப்பிஸ் மாவட்டத்தில் உள்ளனர்.[6]

லிப்பிஸ் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

லிப்பிஸ்மாவட்டத்தில் (Kuala Lipis District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 137 மாணவர்கள் பயில்கிறார்கள். 34 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[7]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD3047 கோலா லிப்பிஸ்
Kuala Lipis
SJK(T) Kuala Lipis கோலா லிப்பிஸ் தமிழ்ப்பள்ளி[8] 27200 கோலா லிப்பிஸ் 47 9
CBD3048 கம்போங் புடு
Kampung Budu
SJK(T) Ladang Budu Benta புடு தோட்டத் தமிழ்ப்பள்ளி (பெந்தா) 27300 பெந்தா 11 8
CBD3049 பெந்தா தோட்டம்
Ladang Benta
SJK(T) Ladang Benta பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி[9] 27300 கோலா லிப்பிஸ் 46 10
CBD3050 பாடாங் தெங்கு
Padang Tengku
SJK(T) Ladang Selborne செல்போன் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கோலா லிப்பிஸ்) 27100 பாடாங் தெங்கு
(கோலா லிப்பிஸ்)
33 7

மேற்கோள்

[தொகு]
  1. primuscoreadmin (9 November 2015). "Latar Belakang".
  2. It is about 171 kilometers from Kuala Lumpur and about 235 km from Kuantan.
  3. "Taman Negara National Park is the perfect place if you love rainforest and outdoor activities. Experience walking on the world's longest canopy walkway, visiting the aborigine village, trekking under rainforest canopy, climbing the highest mountain in Peninsular Malaysia, caving, fishing, camping, observing wildlife,". Taman Negara. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  4. "Taman Negara is the oldest primary rainforest in the world. Research has shown that this rainforest has never been influenced by ice ages and other big changes in time. With 4343 square kilometers it is the biggest National Park in Malaysia, spread out over three states at Peninsular Malaysia; Pahang, Terengganu and Kelantan". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  5. "Taman Negara is nestled between 3 states in Malaysia, namely largest in Pahang which cover an area of 2,477km2, Kelantan (1,043km2) and Terengganu (853km2), with a total area of 4,343km2. It is the largest national park in Peninsular Malaysia and known to be the world's oldest tropical rainforest". pahang.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  6. Lim, Teckwyn. 2020. Ethnolinguistic Notes on the Language Endangerment Status of Mintil, an Aslian Language. Journal of the Southeast Asian Linguistics Society (JSEALS) 13.1 (2020): i-xiv. ISSN 1836-6821. University of Hawaiʼi Press.
  7. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  8. "SJKT Kuala Lipis". sites.google.com. Archived from the original on 30 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  9. "SJKT Ladang BENTA". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிப்பிஸ்_மாவட்டம்&oldid=3702602" இலிருந்து மீள்விக்கப்பட்டது