காராக்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Karak | |
---|---|
![]() காராக் நகரத்திற்கு செல்லும் விரைவுச்சாலையில் கெந்திங் செம்போ சுரங்கப் பாதை | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°24′N 102°2′E / 3.400°N 102.033°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நேர வலயம் | மலேசிய நேரம் (MST) (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை (ஒசநே) |
அஞ்சல் குறியீடு | 28xxx |
வாகனப் பதிவு | C |
அனைத்துலக முன்னொட்டுக் குறி | +6-09 (தரைவழித் தொடர்பு) |
இணையதளம் | www |
காராக் என்பது (மலாய்: Karak; ஆங்கிலம்: Karak; சீனம்: 加叻) மலேசியா, பகாங் மாநிலத்தில், பெந்தோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகரில் இருந்து குவாந்தான் நகருக்குச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலை -இல் ஓய்வு நகரமாக அறியப் படுகிறது.
காராக் நகரம் மலேசியாவில் புகழ்பெற்ற காராக் நெடுஞ்சாலைக்கு காராக் நகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. காராக் நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகரையும் காராக் நகரையும் இணைக்கிறது.
நிலவியல்[தொகு]
மலேசியாவின் பிரதான மலைத் தொடரான தித்திவாங்சா மலைத்தொடரின் அடிவாரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த இடம் பகாங் மாநிலத்திற்கு மட்டும் அல்ல; கிள்ளான் பள்ளத்தாக்கிற்கும் ஒரு முக்கியமான நீர் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது.
காராக் நெடுஞ்சாலையின் கிழக்கு முனையிலும் ; மற்றும் கிழக்கு கடற்கரை அதிவேக நெடுஞ்சாலை
-இன் தொடக்கமாகவும் காராக் நகரம் அமைகின்றது. பொதுவாகச் சொன்னால் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையையும் கிழக்குக் கரையையும் இணைக்கும் ஒரு பாலமாக உருவகப் படுத்தலாம்.