முக்கிம்
முக்கிம் என்பது புருணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் ஒரு வகை நிர்வாகப் பிரிவின் பெயர். முக்கிம் எனும் சொல் ஆங்கில மொழியிலும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது.[1]
இருப்பினும் முக்கிம் எனும் சொல் அரபு சொல்லில் இருந்து மலாய் மொழிக்குள் வந்தச் சொல் ஆகும். முக்கிம் எனும் சொல்லுக்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்புச் சொல் டவுன்ஷிப் (township).[2][3]
பயன்பாடு[தொகு]
மலேசியா[தொகு]
மலேசியாவில், ஒரு முக்கிம் ஒரு மாவட்டம் அல்லது ஒரு மாவட்டத்தின் துணைப்பிரிவு அல்லது உட்பிரிவாக இருக்கலாம்; அல்லது தேசிய நிலச் சட்டம் 1965-இன் பிரிவு 11 (சி) இன் படி (Section 11(c) of the National Land Code 1965), தன்னாட்சி பெற்ற துணை மாவட்டமாக இருக்கலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "mukim | Malay to English Translation - Oxford Dictionaries". Oxford Malay Living Dictionary (ஆங்கிலம்). 2018-02-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-02-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Carian Umum". prpm.dbp.gov.my (ஆங்கிலம்). 2018-02-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Carian Umum". prpm.dbp.gov.my (ஆங்கிலம்). 2018-02-16 அன்று பார்க்கப்பட்டது.