தெமர்லோ நகரம்

ஆள்கூறுகள்: 3°27′N 102°25′E / 3.450°N 102.417°E / 3.450; 102.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெமர்லோ
மலேசியா நகரம்
Temerloh
தெமர்லோ நகரம்
தெமர்லோ நகரம்
தெமர்லோ is located in மலேசியா
தெமர்லோ
தெமர்லோ
மலேசியாவில் தெமர்லோ மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°27′N 102°25′E / 3.450°N 102.417°E / 3.450; 102.417
நாடு மலேசியா
மாநிலம்Flag of Pahang.svg பகாங்
மாவட்டம்MPT Emblem.png தெமர்லோ
அமைவு1889
நகராண்மைக் கழகத் தகுதி15 சனவரி 1997[1]
தொகுதிதெமர்லோ
உள்ளூராட்சிதெமர்லோ நகராண்மைக் கழகம்
அரசு
 • மாவட்ட அதிகாரிபாட்சி கெனாலி[2]
 • நகராண்மைக் கழகத் தலைவர்செசிலி ஜமாலுதின்[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்2,251 km2 (869 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,58,724
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு28xxx
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்C

(இது தெமர்லோ நகரம் தொடர்பான கட்டுரை. தெமர்லோ மாவட்டம் குறித்த கட்டுரைக்கு தெமர்லோ மாவட்டம் என்பதைச் சொடுக்கவும்.)

தெமர்லோ (ஆங்கிலம்: Temerloh; மலாய்: Temerloh; சீனம்: 淡马鲁; ஜாவி: تمرلوه); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். தெமர்லோ மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

மலேசியாவில் மிகப் பழைமையான நகரங்களில் தெமர்லோ நகரமும் ஒன்றாகும். 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சில காலனித்துவ கட்டிடங்களும்; கடை வீடுகளும் இன்றும் பழைய வர்லாற்றைப் பறைசாற்றுகின்றன.

தெமர்லோ நகர தீபகற்ப மலேசியாவின் மையம் (ஆங்கிலம்: Centre of Peninsular Malaysia; மலாய்: Titik Tengah Semenanjung Malaysia) என நிரூபிக்கப்பட்டு உள்ளது. லஞ்சாங் கம்போங் பாயா சிப்புட் எனும் இடத்தில் அந்த மையப்புள்ளி அமைந்து உள்ளது.[5]

கோலாலம்பூர் மாநகரில் இருந்து குவாந்தான் - கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் ஏறக்குறைய 130 கி.மீ. (81 மைல்) தொலைவில் தெமர்லோ நகரம் அமைந்துள்ளது. குவாந்தான் நகருக்கு அடுத்தபடியாக பகாங் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக தெமர்லோ நகரம் விளங்குகிறது.

பொது[தொகு]

பகாங் ஆறு மற்றும் செமந்தான் ஆறு ஆகிய இரு ஆறுகளும் சந்திக்கும் இடத்தில் இந்த தெமர்லோ நகரம் அமைந்துள்ளது. தெமர்லோ நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள மெந்தகாப், லஞ்சாங், கோலா கெராவ் மற்றும் கெர்டாவ் இடங்களும் தெமர்லோவின் பகுதிகளாகக் கருதப் படுகின்றன.

தெமர்லோ நகரத்திற்கு கிழக்கில் மாரான் நகரம்; மேற்கில் பெந்தோங் நகரம்; வடக்கில் ஜெராண்டுட் நகரங்கள் உள்ளன.

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை[தொகு]

இந்த நகரம் அண்மைய ஆண்டுகளில் ஒரு போக்குவரத்து மையமாகவும்; ஒரு புதிய தொழில்துறை மையமாகவும் வளர்ந்துள்ளது. அண்மைய காலத்தில் தெமர்லோவில் பல புதிய வணிகம் மற்றும் தொழில்துறை மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை, கோலாலம்பூர் மற்றும் குவாந்தான் நகரங்களுக்கான பயண நேரத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது. அத்துடன் தெமர்லோ நகரத்தின் வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த நகரம் செமந்தான் ஆற்றின் சங்கமத்தில் அமைந்துள்ளதால், ஒரு காலத்தில் கோலா செமந்தான் என்று அழைக்கப்பட்டது. தெமர்லோ என்ற பெயர் பகாங் மலாய்ச் சொல்லான மெரெலோ (Mereloh) எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. மெரெலோ என்றால் தூக்கம் என்று பொருள்.

மற்றொரு நம்பத் தகுந்த கோட்பாடு: தெமர்லோ நகரத்தின் பெயர் தெம்பாட் மெரெலோ (Tempat Mereloh) என்று அழைக்கப்படும் ஒராங் அஸ்லி மக்கள் உறங்கும் இடத்தில் இருந்து பெறப்பட்டது என்று கூறுகிறது.

தெம்பாட் மெரெலோ என்ற வார்த்தை உச்சரிக்கக் கடினமாக இருந்ததால், முன்பு அங்கு குடியேறிய மினாங்கபாவ் (Minangkabau) மக்கள் அதை தெமர்லோ (Temerloh) என்று சுருக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

காலநிலை[தொகு]

தெமர்லோ நகரத்தின் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை விவரங்கள். வெப்பமான இரவு பகல்கள். ஆண்டு முழுவதும் வெப்பநிலை சீராக இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மழைப்பொழிவு உச்சமாக இருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், தெமர்லோ நகரம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.8
(91)
35.0
(95)
35.6
(96.1)
36.1
(97)
35.6
(96.1)
35.0
(95)
35.0
(95)
35.0
(95)
35.0
(95)
35.0
(95)
33.9
(93)
33.3
(91.9)
36.1
(97)
உயர் சராசரி °C (°F) 29.4
(84.9)
31.1
(88)
32.2
(90)
32.8
(91)
32.8
(91)
32.2
(90)
32.2
(90)
32.2
(90)
32.2
(90)
31.7
(89.1)
30.6
(87.1)
30.0
(86)
31.6
(88.9)
தினசரி சராசரி °C (°F) 25.6
(78.1)
26.4
(79.5)
27.2
(81)
27.8
(82)
27.8
(82)
27.5
(81.5)
27.2
(81)
27.2
(81)
27.2
(81)
27.2
(81)
26.7
(80.1)
26.1
(79)
27.0
(80.6)
தாழ் சராசரி °C (°F) 21.7
(71.1)
21.7
(71.1)
22.2
(72)
22.8
(73)
22.8
(73)
22.8
(73)
22.2
(72)
22.2
(72)
22.2
(72)
22.8
(73)
22.8
(73)
22.2
(72)
22.4
(72.3)
பதியப்பட்ட தாழ் °C (°F) 17.8
(64)
18.9
(66)
19.4
(66.9)
20.6
(69.1)
20.0
(68)
20.0
(68)
20.0
(68)
19.4
(66.9)
18.9
(66)
20.6
(69.1)
20.6
(69.1)
18.3
(64.9)
17.8
(64)
பொழிவு mm (inches) 198.1
(7.799)
99.1
(3.902)
152.4
(6)
193.0
(7.598)
167.6
(6.598)
109.2
(4.299)
86.4
(3.402)
142.2
(5.598)
165.1
(6.5)
236.2
(9.299)
246.4
(9.701)
256.6
(10.102)
2,052.0
(80.787)
ஆதாரம்: Sistema de Clasificación Bioclimática Mundial[6]

மக்கள்தொகையியல்[தொகு]

பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.

தெமர்லோ நகரத்தின் இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 120,154 75.7%
சீனர்கள் 25,078 15.8%
இந்தியர்கள் 12,380 7.8%
இதர மக்கள் 1,111 0.7%
மொத்தம் 158,723 100%

சுற்றுலா[தொகு]

தெமர்லோ பல்வேறு வன வாழ்க்கை அனுபவங்களையும் வழங்குகிறது. குராவ் வனவிலங்கு காப்பகம் இங்குதான் உள்ளது. தெமர்லோ நகரத்தைச் சுற்றியுள்ள காடுகளில் நிறையவே தாவரங்கள்; நிறையவே விலங்கினங்கள்.

கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் செலாடாங் இனப்பெருக்க மையம் ஆகியவை இந்த நகர்ப் பகுதியில் தான் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Background of Temerloh Municipal Council". Majlis Perbandaran Temerloh. 5 January 2016.
  2. "Laman Web Rasmi Pejabat Daerah dan Tanah Temerloh - Pegawai Daerah Temerloh". pdttemerloh.pahang.gov.my. 2018-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-05-06 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Profil YDP". 5 January 2016.
  4. primuscoreadmin (5 January 2016). "Latar Belakang".
  5. "Kampung Paya Siput diiktiraf titik tengah Semenanjung". 2019-03-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-05-06 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Temerloh (Malaysia)" (PDF). Centro de Investigaciones Fitosociológicas. February 1, 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தெமர்லோ
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமர்லோ_நகரம்&oldid=3585805" இருந்து மீள்விக்கப்பட்டது